Thursday, December 23, 2021

கூட்டாஞ்சோறு (Koottanchoru)

கூட்டாஞ்சோறு 



தேவையான பொருள்கள் : 


அரிசி : 1 கப் 

துவரம் பருப்பு : 1/2 கப் 

புளி  :  சிறிய எலுமிச்சம் பழம் அளவு

மஞ்சள் பொடி :  1/2 தேக்கரண்டி 

பெருங்காயம் : 1 தேக்கரண்டி 

தண்ணீர் : தேவையான அளவு 

உப்பு : தேவையான அளவு 


அரைப்பதற்கு :

துருவிய தேங்காய் : கால் கப் 

காய்ந்த மிளகாய் : 8 - 10

சின்ன வெங்காயம் : 12

பூண்டு : 8

சீரகம் : 1 தேக்கரண்டி 


நறுக்கிய காய்கறிகள் : 


உருளைக்கிழங்கு : 1 (பெரியது)

கேரட் : 2 

பீன்ஸ் : 10 

அவரைக்காய் :  10

வாழைக்காய் : 1 

மாங்காய் : 1

கத்திரிக்காய் : 3

முருங்கைக்காய் : 1 

முருங்கை இலைகள் :  ஒரு கைப்பிடி 


தாளிப்பதற்கு : 

நல்லெண்ணெய் : 2 மேஜைக்கரண்டி 

கடுகு : 1 தேக்கரண்டி 

உளுத்தம்பருப்பு : 1 தேக்கரண்டி 

வெங்காய வடகம் : 2-3

கருவேப்பிலை : 10


செய்முறை : 


அரிசி மற்றும் பருப்பைக் களைந்து ஒரு அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும் 


அனைத்து காய்கறிகளையும் சற்று பெரிய நீளத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் 


புளியைக் கரைத்து புளி கரைசலை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும் 


ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாயோடு தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும் 


பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய்சின்ன வெங்காயம் , பூண்டு மற்றும் சீரகம் சேர்த்து அரைத்து தனியாகஎடுத்து வைத்துக் கொள்ளவும் 


பின்னர்குக்கரில் ஊற வைத்த அரிசிபருப்புநறுக்கிய காய்கறிகள் தேவையான தண்ணீர் சேர்த்துசிறிதுகொதிக்க விட வேண்டும் 


காய்கறிகள் மற்றும் அரிசி பாதி வெந்தவுடன் அதனுடன் புளிக்கரைசல்அரைத்து வைத்துள்ள விழுதுகள்மமஞ்சள் பொடிபெருங்காயம் மற்றும் தேவையான உப்பு சேர்த்து குக்கரை மூடி விசில் வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும் 


ஒரு வாணலியில்சிறிது எண்ணெய் சேர்த்து வெங்காய வடகங்களை பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்


மற்றொரு வாணலியில்சிறிது எண்ணெய் சேர்த்து தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களை சேர்த்துதாளித்துக் கொள்ளவும் 


தாளித்த பொருள்களை சாதத்தில் சேர்த்து கலந்தால் சுவையான கூட்டாஞ்சோறு தயார் 


 குறிப்புகள் : 


மாங்காய் சேர்க்கவில்லையென்றால் , புளியின் அளவை அதிகரித்து கொள்ளவும்


இதனோடு கூழ்வத்தல்/வடகம் , அப்பளம் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும் 


இது குளிர் சாதனப்பெட்டியில் வைக்காமலேயே ஒரு நாள் முழுவதும் கெடாமல் இருக்குமாகையால்இதனைசுற்றுலா செல்லும் போது செய்து எடுத்து செல்லலாம் 


எனக்கு முருங்கையிலை கிடைக்காததால் நான் அதை சேர்க்கவில்லை

ஆனால்கண்டிப்பாக முருங்கையிலை சேர்த்து செய்து ருசியுங்கள் 

No comments:

Post a Comment