Tuesday, December 29, 2020

திருவாதிரை களி (Thiruvathirai kali)

 திருவாதிரை களி



 

தேவையான பொருள்கள் : 


பச்சரிசி : 1/2 கப் 

பாசிப்பருப்பு : 1-2 மேஜைக்கரண்டி 

வெல்லம் : 3/4 கப் 

தேங்காய் : 1/4 கப் 

நெய் : 2-4 மேஜைக்கரண்டி 

ஏலக்காய் பொடி : ஒரு சிட்டிகை

தண்ணீர்: 3 கப் 

உப்பு : ஒரு சிட்டிகை 


செய்முறை : 


ஒரு வாணலியியல்அரிசி மற்றும் பருப்பை சேர்த்து நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ளவும்.


பின்னர் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுரவை மாதிரி உடைத்துக் கொள்ளவும்


ஒரு வாணலியில்வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து வெல்லத்தை நன்றாக கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.


பின்னர் வடிகட்டிய வெல்லக்கரைசலோடுதேங்காய்ஏலக்காய் பொடி மற்றும் உடைத்து வைத்துள்ள அரிசிபருப்பு ரவையைச் சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்.


பின்னர்இதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிஒரு குக்கரில் அரை கப் தண்ணீர் ஊற்றிஇந்த பாத்திரத்தைவைத்து 2-3 விசில் வைத்து எடுத்தால் சுவையான திருவாதிரைக் களி தயார்


குறிப்புகள்


வெல்லம் சிறிது அதிகமாகவோ குறைத்தோ அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போன்று சேர்த்து கொள்ளவும்


பாசிப்பருப்புதேங்காய் போன்றவை இல்லாமலும் இதே முறையில் களி செய்யலாம்


அதே போன்று விருப்பப்பட்டால் வறுத்த முந்திரி பருப்புகள் சேர்க்கலாம்

ஏபிசி ஜூஸ் (ABC juice)

 ஏபிசி ஜூஸ் :




தேவையான பொருள்கள் :

ஆப்பிள் : 1
கேரட் : 1
பீட்ரூட் : 1/2
தேன் : 1 தேக்கரண்டி

விருப்பப்பட்டால் :

இஞ்சி : ஒரு சிறு துண்டு
எலுமிச்சம் பழ சாறு : 1 தேக்கரண்டி
பிளாக் உப்பு : ஒரு சிட்டிகை

செய்முறை :

முதலில் கேரட் மற்றும் பீட்ரூட்டை தோல் நீக்கி துருவி எடுத்துக் கொள்ளவும்.

ஆப்பிளை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சி சேர்ப்பதாக இருந்தால், அதனையும் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய கேரட், பீட்ரூட் மற்றும் நறுக்கிய ஆப்பிள் மேலும் இஞ்சி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக ஜூஸாக அடித்து கொள்ளவும்.

விருப்பப்பட்டால் சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குளிர் சாதனப் பெட்டியில் ஒரு அரை மணி நேரம் வைத்து எடுத்தால் சுவையான ஏபிசி ஜூஸ் தயார்.

குறிப்புகள் :

இந்த ஜூஸில் ஐஸ் கட்டிகள் கலந்தும் அருந்தலாம்.

தேனோ அல்லது வேறு எந்த சுவையூட்டியோ சேர்க்காமலும் அருந்தலாம்.

இஞ்சி சேர்ப்பது அவரவர் விருப்பம்.

பிளாக் சால்ட் ஒரு பின்ச் சேர்த்தாலும் சுவையாக இருக்கும்.

குளிர் சாதனப் பெட்டியில் வைக்காமல் அப்டியே அருந்தலாம்.

ரவா ஷெல்ஸ் (Rava / sooji spicy shells)

 ரவா ஷெல்ஸ் 




தேவையான பொருள்கள் :

ரவா : 1 கப் 
மிளகு பொடி : 1/2 தேக்கரண்டி 
மிளகாய் பொடி : 1/2 தேக்கரண்டி 
உப்பு : தேவையான அளவு 
தண்ணீர் : தேவையான அளவு
எண்ணெய் : பொரிப்பதற்கு 

செய்முறை :

இந்த ரவா ஷெல்ஸ் செய்வதற்கு ரவை மிகவும் சிறியதாக இருக்க வேண்டும். ஆகையால், நான் ரவையை மிக்ஸியிலிட்டு அதனை நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ளவும்.  

பொடித்த ரவையுடன் மிளகாய் பொடி , மிளகு பொடி, உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து பிரட் க்ராம்ஸ் பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, ஒரு ஈரத்துணியினால் மூடி 10  நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ளவும்.

மாவு நன்றாக ஊறி, மிகவும் மிருதுவாக இருக்கும். இதனை சிறு சிறு உருளைகளாக உருட்டிக் கொள்ளவும். 

பின்னர் ஒவ்வொரு உருளையாக எடுத்து, ஒரு முள் கரண்டியின் பின்னால் அதனை வைத்து கரண்டியின் இம்ப்ரெஸ்ஸன் வரும் வண்ணம் மாவினை அழுத்திய பின்னர் அதனை அப்படியே உருட்டி எடுத்தால் ஷெல் வடிவங்கள் வரும். 




ஒரு அடி கனமான வாணலியில்,எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடாகியதும், செய்து வைத்துள்ள ஷெல்களை சேர்த்து மிதமான தீயில், போன் நிறமாகும் வரை பொரித்து எடுத்தால், சுவையான ரவா ஷெல்ஸ் தயார்.. 

குறிப்புகள் :

ரவா பொடியாக இருந்தால், மிக்ஸியில் அரைத்துப் பொடிக்க தேவையில்லை.. 

இந்த ஷெல்களை மிதமான தீயில் மிகவும் பொறுமையாக பொறித்து எடுக்கவும். அவ்வாறு செய்வதால், செல்களின் உள்ளே வரை நன்றாக பொரிந்து மிகவும் மொறுமொறுப்பாக இருக்கும். 

நான் மிளகு பொடியும் மிளகாய் பொடியும் சேர்த்து செய்து உள்ளேன்.. நீங்கள் உங்களுக்கு விருப்பமான பொடிகளை சேர்த்து செய்து ருசியுங்கள்.
சில நேரங்களில், சாட் மசாலா / இத்தாலியன் சீசனிங்ஸ் கூட சேர்த்து செய்து இருக்கிறேன்.. மிகவும் சுவையாக இருக்கும். 

Friday, December 25, 2020

சம்பா கோதுமை கேசரி (Samba wheat kesari)

 சம்பா கோதுமை கேசரி


தேவையான பொருள்கள் : 


சம்பா கோதுமை : 1 கப் 

சர்க்கரை : 1 கப் 

நெய் : 3 தேக்கரண்டி 

பால் : 2 கப் 

தண்ணீர் : 2 கப்  

ஏலக்காய் பொடி : ஒரு சிட்டிகை 

முந்திரிப்பருப்பு அண்ட் கிஸ்மிஸ் : 5 - 8 


செய்முறை : 


ஒரு குக்கரில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்துசம்பா கோதுமையை நிறம் எதுவும் மாறாமல் ஒரு இரண்டுநிமிடங்கள் மிதமான தீயில் வறுத்த பின்னர்பால் மற்றும் தண்ணீர் சேர்த்து, 2 - 3 விசில் வைத்துநன்றாக வேகவைத்து கொள்ளவும்.


ஒரு வாணலியில்ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து முந்திரி மற்றும் கிஸ்மிஸ்க்களை வறுத்து எடுத்துக்கொள்ளவும்


குக்கெரை திறந்தவுடன்சூடாக இருக்கும் சம்பா கோதுமையோடுசர்க்கரை மற்றும் வறுத்து வைத்துள்ளமுந்திரிப்பருப்பு மற்றும் கிஸ்மிஸ் சேர்த்து மேலும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து நன்றாகக் கலந்தால்சுவையான சம்பா கோதுமை கேசரி தயார்


குறிப்புகள் :


கோதுமையை வறுக்காமலும் தயாரிக்கலாம்ஆனால்சிறிது வறுத்து தயாரிக்கும் பொழுது மணமும் சுவையும்அதிகமாக இருப்பதோடு,கோதுமை ரவை ஒன்றோடு ஒன்று ஒட்டாமலும் இருக்கும். (மிகவும் குழையாமல்இருக்கும்


சர்க்கரைக்கு பதிலாக விருப்பமான சுவையூட்டிகளை சேர்த்து இதே முறையில் தயாரிக்கலாம்


கப் கோதுமைக்கு 1 கப் சர்க்கரை என்பது அளவான இனிப்பாக இருக்கும்ஆனால்தங்களின்விருப்பத்திற்கேற்பசர்க்கரையின் அளவினை அதிகரித்தோகுறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம்


பாலிற்கு பதிலாக தேங்காய் பால்நட் மில்க் போன்றவைகளையும் சேர்த்து தயாரிக்கலாம்.


தேங்காய் பால் சேர்ப்பதாக இருந்தால்இரண்டாம் பாலில் கோதுமையை வேக வைத்து , பின்னர் சர்க்கரைசேர்க்கும் பொழுது முதல் தேங்காய் பால் சேர்க்கவும்


பாலின் அளவை சிறிது அதிகமாக சேர்த்து இதையே மிகவும் சுவையான கோதுமை பிரதமன்பாயாசமாகவும்தயாரிக்கலாம்


கோதுமை மாவு பிஸ்கட்/ தெக்குஆ பிஸ்கட் / காஜூர் ( Khajur/ Thekua/ Wheat biscuit)

 கோதுமை மாவு பிஸ்கட்தெக்குஆ பிஸ்கட் / காஜூர்




தேவையான பொருள்கள் :


கோதுமை மாவு : 1 கப்

பொடித்த சர்க்கரை : 1/4 கப் 

டெஸிகேடட் தேங்காய் : 2 மேஜைக்கரண்டி 

ரவை : 2 மேஜைக்கரண்டி 

நெய் : 2 தேக்கரண்டி 

ஏலக்காய் பொடி : ஒரு சிட்டிகை  

தண்ணீர் : தேவையான அளவு 

எண்ணெய் : பொரிப்பதற்கு 


செய்முறை : 


ஒரு பாத்திரத்தில் மாவுபொடித்த சர்க்கரை,டெஸிகேடட் தேங்காய்ஏலக்காய் பொடிரவை மற்றும் நெய்சேர்த்து கைகளால் நன்றாக கலந்து கொள்ளவும்.


மாவினை கைகளால் கொழுக்கட்டை மாதிரி பிடித்தால்பிடிக்க வர வேண்டும்


பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்


பின்னர் இந்த மாவினை உருண்டைகளாக உருட்டிஒரு முள்கரண்டி வைத்து விருப்பமான டிசைன் செய்துஅந்த பிஸ்கட்டுகளை மிதமான சூட்டில்எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் சுவையான கோதுமை மாவுபிஸ்கட்டுகள்தெக்குஆகாஜுர் தயார்.


குறிப்புகள் :


கோதுமை மாவிற்கு பதிலாக மைதா மாவிலும் தயாரிக்கலாம்.


விருப்பப்பட்டால் , ஒரு தேக்கரண்டி பொடித்த சோம்பு மாவில் சேர்த்துக்கொள்ளலாம்


ஒரு கப் கோதுமை மாவிற்குகால் கப் பொடித்த சர்க்கரை சேர்க்கும் பொது இனிப்பு மிகவும் அளவாக இருக்கும்தங்களுக்கு இன்னும் சிறிது இனிப்பாக வேண்டுமென்றால், 1 கப் மாவிற்கு 1/3 கப் பொடித்த சர்க்கரைசேர்த்துக்கொள்ளலாம்


சர்க்கரைக்கு பதிலாக பொடித்த வெல்லம் சேர்த்தும் இதே பிஸ்கட்டுகளை தயாரிக்கலாம்.


எண்ணெய்யில் இருந்து பொரித்து வெளியில் எடுக்கும் பொழுது மிகவும் மிருதுவாக (அதிரசம் மாதிரி மிருதுவாகஇருக்கும்ஆனால்சூடு குறையும் பொழுதுபிஸ்கட்டுகள் மொறுமொறுவென்று ஆகிவிடும்


இந்த மாவினை சப்பாத்திகளாக தேய்த்து , ஒரு பிஸ்சா கட்டர் / குக்கீ கட்டர் / கத்தி வைத்து விருப்பமானவடிவத்தில் வெட்டி எடுத்து அதனையும் எண்ணெய்யில் பொரித்து இதே முறையில் பிஸ்கட்டுகள்தயாரிக்கலாம்


இது ஒரு பாரம்பரியமான பிஹாரி பிஸ்கட் ரெசிபி


 

Tuesday, December 22, 2020

அவல் மிக்ஸர்/ சிவ்டா (Aval / poha mixture / chivda )

 அவல் மிக்ஸர்சிவ்டா:



தேவையான பொருள்கள் :


அவல் : 2 கப்

நிலக்கடலை : 1/3 கப் 

பொட்டுக்கடலை : 1/3 கப்

முந்திரிப்பருப்பு : 1/3 கப்

கிஸ்மிஸ்: 2 தேக்கரண்டி 

மிளகாய் பொடி : 1/2 தேக்கரண்டி 

மஞ்சள் பொடி : 1/4 தேக்கரண்டி 

பொடித்த சர்க்கரை : 1 தேக்கரண்டி 

பெருங்காயம் : ஒரு சிட்டிகை 

கருவேப்பிலை : சிறிது 

உப்பு : தேவைக்கேற்ப 

எண்ணெய் : தேவையான அளவு 


செய்முறை :


ஒரு அடி கனமான வாணலியில் முதலில் அவலைச் சேர்த்து மெதுவாக மிதமான தீயில் எண்ணெய் எதுவும்சேர்க்காமல்அதே சமயத்தில் நிறம் மாறாமல் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்


அவலை உடைத்து விடாமல் மொறு மொறு என்று இருக்குமாறு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.


பின்னர் மற்றொரு வாணலியில் 2 முதல் 3 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து பின்னர் அதில் முதலில் கடலையைமிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.


பின்னர் அதே வாணலியில்முந்திரிப்பருப்புகளை சேர்த்து அத்தனையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.


பின்னர் மீண்டும் அதே வாணலியில் கிஸ்மிஸ் மற்றும் பொட்டுக்கடலை ஆகியவற்றையும் சேர்த்து வறுத்துஎடுத்துக் கொள்ளவும்


பின்னர் ஒரு பெரிய அடி கனமான வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கருவேப்பிலையைபொறித்த பின்னர்மிளகாய் பொடிமஞ்சள் பொடி பெருங்காயம் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து 1/2 நிமிடம் வதக்கிய பின்னர்அவல் மற்றும் வறுத்து வைத்துள்ள பொருள்களைச் சேர்த்து நன்றாக கலந்தால்சுவையான அவல் மிக்ஸர்சிவ்டா தயார்.


குறிப்புகள்


அவலுக்கு பதிலாக பொரிகார்ன் பிளேக்ஸ் / ஜவ்வரிசி போன்றவைகள் வைத்தும் இதே முறையில் மிக்ஸர்சிவ்டா தயாரிக்கலாம்.


கெட்டி அவலாக இருந்தால்அதனையும் எண்ணெய்யில் பொரித்து எடுத்தும் இந்த அவல் மிக்ஸர்தயாரிக்கலாம்.


மிளகாய் பொடிக்கு பதிலாக பச்சை மிளகாய் / காய்ந்த மிளகாய் கூட சேர்த்துக் கொள்ளலாம்.


கொப்பரை தேங்காய் வறுத்தும் இந்த சிவ்டாவில் கலந்து கொள்ளலாம்.


விருப்பப்படும் நட்ஸ்களை வறுத்து இந்த சிவ்டாவில் கலந்து கொள்ளலாம்.


சர்கரைக்குப் பதிலாக சர்க்கரையைப் பொடித்தும் சேர்க்கலாம்.


இந்த மிக்ஸ்ர் இனிப்பும் காரமுமாக (Khatta meetta ) இருக்கும்இனிப்பு சுவை விரும்பாதவர்கள் சர்க்கரையைசேர்க்காமல் தயாரித்துக் கொள்ளலாம்