Tuesday, December 28, 2021

வெந்தய கீரை சாம்பார் (methi leaves sambar)

 வெந்தய கீரை சாம்பார்



தேவையான பொருள்கள்


துவரம் பருப்பு : 1/4  கப் 

வெந்தய கீரை : 2 கப் 

நறுக்கிய கேரட் :  1/4 கப் 

புளி : சிறு எலுமிச்சை அளவு 

சாம்பார் பொடி :  1 & 1/2 – 2 தேக்கரண்டி 

மஞ்சள் பொடி  :  1/4 தேக்கரண்டி

பெருங்காயம் : 2 சிட்டிகை 

உப்பு : தேவையான அளவு 


தாளிப்பதற்கு

நல்லெண்ணெய் : 2 தேக்கரண்டி 

கடுகு : 1/2 தேக்கரண்டி 

உளுத்தம்பருப்பு : 1/2 தேக்கரண்டி 

சீரகம் : 1/2 தேக்கரண்டி 


செய்முறை : 


புளியைக் கரைத்து புளிக்கரைசலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.


வெந்தய கீரை இலைகளை மட்டும் ஆய்ந்து நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும்.


 30 நிமிடங்கள் ஊற வைத்த துவரம் பருப்பினை சிறிது மஞ்சள் பொடி சேர்த்து குக்கெரிலிட்டு 3  - 4 விசில்வைத்து வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும்.


ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து தாளித்த பின்னர்கேரட் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.


காரட் வெந்தவுடன் அதனுடன் வெந்தய கீரை இலைகளை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.


கீரை வதங்கியவுடன்புளிக்கரைசல்சாம்பார் பொடிமஞ்சள் பொடிஉப்பு சேர்த்து குழம்பினைக் கொதிக்கவைத்துக் கொள்ளவும்.


புளிக்கரைசலின் பச்சை வாசனை போனவுடன்வேக வைத்து கடைந்து வைத்துள்ள துவரம் பருப்பினைசேர்த்துதேவைப்பட்டால் சிறிது தண்ணீரும் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான வெந்தயகீரை சாம்பார் தயார்.


குறிப்புகள் :


வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்தும் இதே குழம்பினை செய்யலாம் 


வெந்தய கீரை சிறிது கசப்பாக இருக்கும் ஆகையால் இந்த சம்பாரிற்கு புளி சிறிது அதிகமாக சேர்க்க வேண்டும்


இந்த சாம்பாரில் கீரை சேர்ப்பதால் காய்கறிகள் மற்றும் கருவேப்பிலை சேர்க்க தேவை இல்லைஇருந்தாலும்கீரை சிறிது கசப்பாக இருக்குமாதலால் நான் கேரட் மட்டும் சேர்த்து செய்வேன்

No comments:

Post a Comment