Thursday, December 23, 2021

இரு புளிக்குழம்பு (Iru pulikulambu)

 இரு புளிக்குழம்பு : 



நறுக்கிய முருங்கைக்காய் : 1 

புளி : 1 நெல்லிக்காய் அளவு 

மோர் : 1 கப் 

மஞ்சள் பொடி : 1/4 தேக்கரண்டி 

உப்பு : தேவையான அளவு 


அரைப்பதற்கு : 


தேங்காய் எண்ணெய் : 1 தேக்கரண்டி 

உளுந்தம் பருப்பு : 2 தேக்கரண்டி 

வெந்தயம் : 1/4 தேக்கரண்டி 

காய்ந்த மிளகாய் : 5 - 6

துருவிய தேங்காய் : 1/2 கப் 


தாளிப்பதற்கு  

தேங்காய் எண்ணெய் : 1 தேக்கரண்டி 

கடுகு : 1 தேக்கரண்டி 

உளுத்தம் பருப்பு : 1 தேக்கரண்டி 

காய்ந்த மிளகாய் : 1

கருவேப்பிலை : சிறிதளவு 




செய்முறை : 


முதலில் புளியை ஊற வைத்து புளிக்கரைசலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.


ஒரு வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றிதேங்காய் தவிர்த்து மற்ற அரைப்பதற்கு கொடுத்துள்ளபொருள்களை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் தேங்காய் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.


ஒரு அடி கனமான வாணலியில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து தாளித்த பின்னர்நறுக்கியமுருங்கையை சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்


காய் வெந்தவுடன் அதனுடன்  புளிக்கரைசலை சேர்த்து புளியின் பச்சை வாசனை போகும் வரைக்கும் கொதிக்கவைக்க வேண்டும்.


பின்னர் இதனோடு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து கலந்த பின்னர்கடைந்து வைத்துள்ளமோரை கலந்து பொங்கி வரும் வரை கொதிக்க வைத்து எடுத்தால் சுவையான இரு புளிக்குழம்பு தயார்.


குறிப்புகள் : 


இந்த குழம்பில் இரண்டு விதமான புளிப்புகள் சேர்ப்பதால் இதற்கு இரு புளிக்குழம்பு என்று பெயர்இதுவும் ஒருதிருநெல்வேலி ஸ்பெஷல் குழம்பு


இது பார்ப்பதற்கு மோர்க்குழம்பு போன்று இருந்தாலும் இதனுடைய ருசி தனியாக இருக்கும்.


வறுத்து அரைப்பதற்கு , உளுத்தம் பருப்பிற்கு பதிலாக இரண்டு தேக்கரண்டி துவரம் பருப்பை / கடலைபருப்பை வறுத்து அரைத்துச் செய்யலாம்.


இந்த குழம்பில்முருங்கை காய்க்கு பதிலாக வெள்ளை பூசணிக்காய்சின்ன வெங்காயம்கத்திரிக்காய்ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு காய் சேர்த்து இதே முறையில் தயாரிக்கலாம்.


மோர் சேர்த்த பின்னர்மிகவும் கொதிக்க விட கூடாது அவ்வாறு செய்தால் மோர் திரிந்து விடும்.

No comments:

Post a Comment