Thursday, December 23, 2021

கேரட் கேக் (Carrot Cake)

 கேரட் கேக் 




தேவையான பொருள்கள் : 


கோதுமை மாவு : 1 கப் /100 கிராம் 

சர்க்கரை : 1/3 கப்/ 75 கிராம் 

தயிர் : 1 கப் / 100 கிராம் 

எண்ணெய் : 30 கப் 

துருவிய கேரட் : 1 கப் / 100 கிராம் 

பேக்கிங் பவுடர் : 1 தேக்கரண்டி 

பேக்கிங் சோடா : 1/2 தேக்கரண்டி 

வெண்ணிலா எசென்ஸ் :  1 தேக்கரண்டி 


செய்முறை : 


முதலில் ஒரு சல்லடை வைத்து கோதுமை மாவுபேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றைநன்றாக சலித்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இதனோடு தயிர் மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்றாக (ஒரு இரண்டு நிமிடங்கள் வரைகலந்தபின்னர் துருவிய கேரட் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின்னர் இதனோடு சலித்து வைத்துள்ள மாவினைச் சேர்த்து ஒரு கரண்டியினால் நன்றாக கலந்து கொள்ளவும்.

பின்னர் இந்த கலவையை பேக்கிங் பாத்திரத்திற்கு மாற்றி அவனில் வைத்து 30 - 35 நிமிடங்கள் பேக் செய்துஎடுத்தால் சுவையான கேரட் கேக் தயார்.


குறிப்புகள் :


இதனை மஃபின் டின்னில் சேர்த்து கேரட் மபினாகவும் தயாரிக்கலாம்.

விருப்பமான நட்ஸ் சேர்த்து அலங்கரிக்கலாம்.

நான் நாட்டு சர்க்கரை மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து இந்த கேக் பேக் செய்து இருக்கிறேன்நீங்கள்விருப்பமான எண்ணெய் மற்றும் சுவையூட்டிகளை சேர்த்து இதே முறையில் கேக் செய்யலாம்.

இதனை வெண்ணிலா ஐஸ் கிரீமோடோ அல்லது டீகாபியோடு பரிமாறலாம்.

No comments:

Post a Comment