Thursday, December 23, 2021

முளைக்கட்டிய பச்சைப்பயிறு சப்ஜி (Moong sprouts subzi )

 முளைக்கட்டிய பச்சைப்பயிறு சப்ஜி 



தேவையான பொருளகள் : 


முளைக்கட்டிய பச்சைப்பயிறு : கப் 

நறுக்கிய தக்காளி : கப் 

நறுக்கிய வெங்காயம் : கப் 

மிளகாய்த்தூள் : தேக்கரண்டி 

மஞ்சள்தூள் : தேக்கரண்டி 

இஞ்சி பூண்டு விழுது : தேக்கரண்டி 

பெருங்காயம் : ஒரு சிட்டிகை 

எலுமிச்சை சாறு : தேக்கரண்டி 

நறுக்கிய கொத்தமல்லித் தளைகள் : சிறிதளவு 

உப்பு : தேவைக்கேற்ப 


தாளிப்பதற்கு 


எண்ணெய் : மேஜைக்கரண்டி 

சீரகம் : தேக்கரண்டி 


செய்முறை : 


முதலில் ஒரு குக்கரில் முளைக்கட்டிய பயிரோடுஅது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்துமூன்றிலிருந்துநான்கு விசில் வைத்து வேகா வைத்து எடுத்துக்கொள்ளவும்


ஒரு அடி கனமான வாணலியில்எண்ணெய் சேர்த்து சீரகம் தாளித்த பின்னர்வெங்காயம் சேர்த்து பொன்நிறமாகும் வரை வதக்கிக்கொள்ளவும் 


பின்னர் அதனோடு தக்காளி சேர்த்து வதக்கிக்கொள்ளவும் 


தக்காளி நன்றாக வதங்கியவுடன்அதனோடு வேக வைத்துள்ள பயிறு,  மசாலா பொருள்கள் மற்றும் தண்ணீர்சேர்த்து ஒன்றாக கலந்து ஒரு நிமிடங்கள் வரை மூடி போட்டு வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்


அடுப்பை அணைத்து விட்டுஇதில் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லித் தளைகள் சேர்த்துக் கிளறினால்சுவையான முளைக்கட்டிய பச்சை பயிறு சப்ஜி தயார் 


குறிப்புகள் : 


பச்சை பயிரை முளைக்கட்டாமலும் இதே முறையில் தயாரிக்கலாம் 


பச்சைப்பயிருக்கு பதிலாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பயிறு வகைகள் சேர்த்து இதே முறையில்செய்யலாம் 


 விருப்பப்பட்டால்  கரம்மசாலா சேர்த்துக்கொள்ளலாம் 


இதனை சாதம்சப்பாத்திரொட்டி மற்றும் புல்காவுடன் சேர்த்துப் பரிமாறலாம் 

No comments:

Post a Comment