Thursday, December 23, 2021

பாலக் பனீர் (Palak Paneer recipe)

 பாலக் பனீர் : 





தேவையான பொருள்கள் :


பாலக் கீரை : 2 கப் 

பனீர் : 200 கிராம் 

பச்சை  மிளகாய் : 1-2

பொடியாக நறுக்கிய வெங்காயம் : 1

பொடியாக நறுக்கிய பூண்டு : 3-4 

உப்பு : தேவையான அளவு

எலுமிச்சை சாறு : 1/2 தேக்கரண்டி 

பிரெஷ் கிரீம் : 1/4 கப்  


தாளிப்பதற்கு : 


எண்ணெய்வெண்ணெய் : 3 மேஜைக்கரண்டி 

சீரகம் : 1/2 தேக்கரண்டி 


செய்முறை :


முதலில் ஒரு வாணலியில்சிறிது உப்பும் தண்ணீரும் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும்


தண்ணீர் கொதித்தவுடன் பாலக் கீரையை அதில் சேர்த்து 30 -40 வினாடிகள் கொதிக்க வைத்துபின்னர்உடனேயே கீரையை எடுத்து குளிர்ந்த (ஐஸ் ) தண்ணீரில் போட்டு ப்ளான்ச் செய்து கொள்ளவும்.


பின்னர் இந்த பாலக் கீரையோடு பச்சை மிளகாய் சேர்த்துமிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.


ஒரு வாணலியில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து தாளித்த பின்னர்நறுக்கிய பூண்டுமற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.


பின்னர் இதனோடு அரைத்த பாலக் கீரை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக 

வதக்கிக்கொள்ளவும்.


பின்னர் உப்பு மற்றும் நறுக்கிய பனீர் துண்டுகளை சேர்த்து ஒரு  நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கிய பின்எலுமிச்சை சாறு சேர்த்துக்  கலந்தால் சுவையான  பாலக் பனீர் தயார்

பின்னர் சிறிது கிரீம் சேர்த்து பரிமாறவும்.


குறிப்புகள்


ப்ரோஸென் பனீராக இருந்தால்முதலில் சிறிது சுடு தண்ணீரில், 15 -20 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர்பயன்படுத்தவும்.


விருப்பப்பட்டால்பனீர் துண்டுகளை சிறிது எண்ணெய் விட்டு பொறித்து பின் சேர்க்கலாம்.


வெண்ணெய்க்குப் பதிலாக எண்ணெய் சேர்த்தும் தாளிக்கலாம்.


வெங்காயத்தோடு பொடியாக நறுக்கிய தக்காளியும் சேர்த்துக் கொள்ளலாம்.


விருப்பப்பட்டால் கரம் மசாலாகசூரி மேத்தி (காய்ந்த வெந்தயக் கீரை இலைகள்)  போன்றவைகளையும்சேர்த்துக் கொள்ளலாம்.


பிரெஷ் கிரீமிற்கு பதிலாக புல் கிரீம் பால் /கெட்டித் தயிர்  கூட சேர்க்கலாம்.


இதனை ரொட்டிசப்பாத்தி மற்றும் சாதமோடு பரிமாறலாம்.

No comments:

Post a Comment