Thursday, December 23, 2021

ரவை இட்லி (Rava Idly)

 ரவை இட்லி 



தேவையான பொருள்கள் : 


ரவை : 1 கப் 

தயிர் : 3/4 கப் 

பொடியாக நறுக்கிய / துருவிய இஞ்சி : 1 இன்ச் 

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் : 1

துருவிய கேரட் : 2 மேஜைக்கரண்டி 

இனோ (Eno) பழ உப்பு / பேக்கிங் சோடா : 1/2 தேக்கரண்டி 

முந்திரிப்பருப்பு : 10

மஞ்சள் பொடி : 1/4 தேக்கரண்டி 

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தளைகள் : 2 மேஜைக்கரண்டி 

உப்பு : தேவையான அளவு 

தண்ணீர் : 1/2 கப்  


தாளிப்பதற்கு : 


எண்ணெய் : 2 தேக்கரண்டி 

கடுகு : 1 தேக்கரண்டி 

உளுந்து : 1/2 தேக்கரண்டி 

கடலைப்பருப்பு : 1 தேக்கரண்டி 

பெருங்காயம் : 1 பின்ச் 

கருவேப்பிலை : சிறிது 


செய்முறை : 


ஒரு வாணலியில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து தாளித்த பின்னர்பச்சை மிளகாய் மற்றும்இஞ்சி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பின்னர்துருவிய கேரட் மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து ஓரிரு நிமிடங்கள்வதக்கிக் கொள்ளவும்.


இறுதியாக ரவை சேர்த்து மிதமான தீயில் ஒரு நான்கு முதல் ஐந்து நிமிடங்கள் வரை வறுத்துக் கொள்ளவும்.


பின்னர் ரவை நன்றாக ஆறிய பின்னர்இதனோடு தயிர்தேவையான தண்ணீர்கொத்தமல்லித் தளைகள் மற்றும்உப்பு சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கலந்து 15 -20 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.


ரவை நன்றாக ஊறிய பின்னர்தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.


இட்லிகளாக ஊற்ற முன்னர்இனோ (Eno) பழ உப்பு / பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ளவும்.


பின்னர் இட்லி தட்டில் முதலில் ஒவ்வொரு குழியிலும் ஒரு முந்திரி வைத்து பின்னர் ரவை இட்லி மாவினைஊற்றி 10 - 15 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்தால் சுவையான ரவை இட்லி தயார்.


இதனோடு விருப்பமான சட்னிசாம்பார் சேர்த்து பரிமாறலாம்.


குறிப்புகள் : 


இது உடனடியாக ரவை இட்லி தயாரிக்கும் முறை ஆதலால்இதில் இனோபேக்கிங் சோடா சேர்த்து செய்துஇருக்கிறேன்


குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் இது இரண்டையும் தவிர்த்து விடுங்கள்இதற்கு பதிலாக ஒருதேக்கரண்டி சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு இதே முறையில் தயாரிக்கலாம்.


முந்திரிப்பருப்பை மாவுடனேயே கலந்தும் இட்லிகள் செய்யலாம்.

No comments:

Post a Comment