Monday, November 8, 2021

பால் பாயசம்(Paal payasam)

 பால் பாயசம் :



தேவையான பொருள்கள் : 


பச்சரிசி : 1/4 கப்

சர்க்கரை : 1/4 கப்

பால் : 5-6 கப் 

நெய் : 1 மேஜைக்கரண்டி 

முந்திரிப் பருப்புகள் : 10

கிஸ்மிஸ் : 2 தேக்கரண்டி 

ஏலக்காய்பொடி : 1/8 தேக்கரண்டி 

குங்குமப்பூ : சிறிதளவு ( விருப்பப்பட்டால் ) 



செய்முறை :


அரிசியை சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ளவும் 

ஒரு அடி கனமான பெரிய வாணலியில்கப் பால் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்துக்கொள்ளவும் 

பின்னர் இதனுடன் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் 

மிதமான தீயில் வைத்துஒரு நிமிடங்கள் முதல் நிமிடங்கள் வரை (அரிசி நன்றாக வேகும் வரை ) வேகாவைத்துக் கொள்ளவும் 

பாலோடு கலந்து வெந்த அரிசியை சிறிது மசித்துக் கொள்ளவும் 

பின்னர் இதனுடன் சர்க்கரை சேர்த்து ஒரு நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான பால்பாயசம் தயார் 

மற்றொரு கடாயில்நெய் சேர்த்து முந்திரி மற்றும் கிஸ்மிஸ் சேர்த்து பொன்னிறமாக வறுத்துஏலக்காய் தூள்சேர்த்துபால் பாயசத்தில் கலந்து கொள்ளவும் 


குறிப்புகள் : 


பாலிலேயே அரிசி வேகுவதால் , இந்த பாயசம் கொஞ்சம் கிரீமியாக இருக்கும்

விருப்பப்பட்டால் சிறிது குங்குமப்பூ சேர்த்து இறக்கலாம் 

இந்த பாயசத்தை சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பரிமாறலாம் 

Saturday, November 6, 2021

போர்போன் பிஸ்கட் (Bourbon Biscuit)

 



போர்போன் பிஸ்கட் 


பிஸ்கட் செய்வதற்கு தேவையான பொருள்கள் : 


கோதுமை மாவு : 120 கிராம்கள் 

வெண்ணெய் : 100 கிராம்கள் 

கோகோ பொடி : 25 கிராம்கள் 

பொடித்த கரும்புச் சர்க்கரை :  30 - 40 கிராம்கள் 

வெண்ணிலா எசென்ஸ் : 1/4 தேக்கரண்டி 


பட்டர் கிரீம் செய்வதற்கு தேவையான பொருள்கள் : 


வெண்ணெய் : 25 கிராம்கள் 

பொடித்த சர்க்கரை : 50 கிராம்கள் 

வெண்ணிலா எசென்ஸ் : 1/4தேக்கரண்டி (விருப்பப்பட்டால் ) 

கோகோ பொடி : 15 கிராம்கள் (விருப்பப்பட்டால் ) 


பிஸ்கட் செய்முறை :


ஓவனை 180 டிக்ரீஸ்க்கு முதலில் சூடாக்கி கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்றாக கிரீமியாக வரும் வரை அடித்துக்கொள்ளவும்.


பின்னர் இதனுடன் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து மீண்டும் அடித்துக் கொள்ளவும்.


கோதுமை மாவு மற்றும் கோகோ பொடி சேர்த்து நன்றாக சலித்துக் கொள்ளவும்.


பின்னர் இந்த மாவு மற்றும் கோகோ பொடிக் கலவையை வெண்ணெய் மற்றும் சர்க்கரையோடு சேர்த்து பால்சேர்த்து சப்பாத்தி மாவினை விட சிறிது தளர்த்தியாக பிசைந்து கொள்ளவும்.


பின்னர் இந்த மாவினை குளிர் சாதனப் பெட்டியில் ஒரு 20 நிமிடங்கள் வரை வைத்து எடுத்த பின்னர், மாவினைஇரண்டாக பிரித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு இரண்டு பார்ச்மெண்ட் தாள் /  பட்டர் பேப்பர் நடுவினில் வைத்துதேய்த்து டுத்த பின்னர்,  மாவினை செவ்வக வடிவத்தில் வெட்டி எடுத்து சூடேற்றப்பட்ட ஓவெனில் 180 டிகிரி  செல்சியஸ் வெப்பநிலையில் 10 - 15 பேக் செய்து எடுத்தால் சுவையான கோதுமை மாவினால் செய்தபோர்பொன் பிஸ்கட் தயார்


பட்டர் கிரீம் செய்யும் முறை :


ஒரு பாத்திரத்தில்வெண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து ஒரு விஸ்க் வைத்து நன்றாக கலந்துகொள்ளவும்


பின்னர் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்தால் பட்டர் கிரீம் தயார்.


விருப்பப்பட்டால் கோகோ பொடியையும் இதனோடு நன்றாக கலந்து கொள்ளவும்.


பிஸ்கட்கள் செய்வதற்கு : 


மேலே தயாரித்துள்ள கிரீமை சாண்ட்விச் தயாரிப்பது போன்று இரண்டு பிஸ்கட்டுகளுக்கு இடையில் வைத்தால்சுவையான பெர்போன் பிஸ்கட்கள் தயார்


குறிப்புகள் : 


கரும்புச் சர்க்கரைக்கு பதிலாக எந்த விதமான சுவையூட்டிகளையும் சேர்த்து இதே முறையில் தயாரிக்கலாம்


இந்த அளவு சர்க்கரை சேர்த்து செய்யும் போது   இனிப்பு சிறிது ளவாக தான் இருக்கும் விருப்பப்பட்டால்சிறிது அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்


அறையின் வெப்பநிலையில் வெண்ணெய் இருப்பது மிகவும் முக்கியம்


பிஸ்கட்டுகள் நன்றாக ஆறிய பின்னர் தான் பட்டர் கிரீமை பிஸ்கட்டுகள் மீது தடவ வேண்டும்இல்லையென்றால்கிரீமில் இருக்கும் வெண்ணெய் உருகி விடும்.

பலாபெல் (Falafel -a middle eastern dish)




 பலாபெல் 


தேவையான பொருள்கள் : 


கொண்டக்கடலை : கப்

வெங்காயம் : 1

கொத்தமல்லித் தளைகள் : 1/4 கப் 

பூண்டு பற்கள் : 3-5 

கடலை மாவு : 1 1/2 மேஜைக்கரண்டி (தேவைப்பட்டால் ) 

உப்பு : தேவைக்கேற்ப 

சீரகம் : 2 தேக்கரண்டி 

காய்ந்த மிளகாய் : 2



செய்முறை : 


கடலையை இரவு முழுவதும் ஊற வைத்து எடுத்து கொள்ளவும்


ஒரு மிக்ஸி ஜாரில் மேலே சொல்லி இருக்கும் எல்லா பொருள்களையும் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாகஅரைத்து எடுத்துக் கொள்ளவும்


ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் சேர்த்துஎண்ணெய் சூடாகியதும் அதில் மேலேதயாரித்து வைத்துள்ள மாவினை சிறு வடைகளாக தட்டிப் பொறித்து எடுத்தால் சுவையான பலாபெல் தயார்.