Friday, December 24, 2021

ஐஸ் கிரீம் கேக் (Ice cream cake )

 ஐஸ் கிரீம் கேக்:


தேவையான பொருள்கள் : 


மைதா : 150 கிராம் 

கோதுமை மாவு / ஆட்டா : 125 கிராம் 

ஐஸ் கிரீம் : 500 ml (விருப்பமான பிளேவர் ) 

பேக்கிங் பவுடர் : 1 தேக்கரண்டி 

பேக்கிங் சோடா : 1/2 தேக்கரண்டி 

பால் : 25 ml (தேவைப்பட்டால்

உடைத்த முந்திரிப்பருப்பு : 15 

மில்க் சாக்லேட் சிப்ஸ் : 1/4 கப் (விருப்பப்பட்டால்)

உப்பு : 1/2 தேக்கரண்டி 


செய்முறை : 


முதலில் ஐஸ்கிரீமை ப்ரீசரில் இருந்து எடுத்து ஒரு 2 மணி நேரம் வெளியில் வைத்து அதை அறையின்வெப்பநிலைக்கு மாற்ற வேண்டும் (அதாவது உருகிய நிலையில் குளிர் இல்லாமல் இருக்க வேண்டும்)


ஓவனை 180 டிக்ரீஸ்க்கு முதலில் சூடாக்கி கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுமைதா மாவுபேக்கிங் சோடாபேக்கிங் பவுடர்உப்பு சேர்த்து நன்றாகசலித்து வைத்துக் கொள்ளவும்.


இதனுடன் உருகிய நிலையில் இருக்கும் ஐஸ்கிரீம் சேர்த்து மெதுவாக கலக்கவும்


தேவைப்பட்டால்சிறிது பால் சேர்த்து கெட்டியாக கலந்து பின்னர் இதனுடன் ஒன்றிரண்டாக பொடித்துவைத்துள்ள முந்திரிப்பருப்புகள் மற்றும் சாக்கோ சிப்ஸ் சேர்த்து மென்மையாக கலக்கவும்.


இந்த கலவையை எண்ணெய் தடவிய ஒரு பேக்கிங் பேனிற்கு மாற்றிக் கொள்ளவும்


பின்னர் இதனை 180  டிஃகிரீசில் 30 - 35  நிமிடங்கள் பேக் செய்தால் சுவையான ஐஸ்கிரீம் கேக் அல்லதுஐஸ்கிரீம் பிரட் தயார்.


 குறிப்பு:


பேக்கிங் செய்வதற்கு முன்னர் ஓவனை முதலில் ஒரு பத்து நிமிடங்கள் வரை கண்டிப்பாக சூடாக்க வேண்டும்இவ்வாறு செய்வதால் ஓவனின் வெப்பநிலை பேக்கிங் செய்வதற்கு தேவையான அளவிற்கு வந்துவிடும்பின்னர்தான் பேக் செய்ய வேண்டும்


கோதுமை மற்றும் மைதா மாவு கலந்து செய்வதற்குப் பதிலாக தனியாக கோதுமை மாவு மட்டுமோ  அல்லதுமைதா மாவு மட்டுமோ சேர்த்து இதே முறையில் கேக் செய்யலாம்


ஐஸ்கிரீமில் இருக்கும் சர்க்கரையே போதுமானதுஆகையால்,இந்த கேக்கிற்கு நான் சர்க்கரை எதுவும் தனியாகசேர்க்கவில்லை


நான் பட்டர்ஸ்காட்ச் பிளேவர் உபயோகித்ததால்அதில் நட்ஸ் எதுவும் இல்லாததால் தனியாக சிறிது முந்திரிசேர்த்தேன்


முந்திரிக்கு பதிலாக விருப்பமான எந்த நட்ஸையோ அல்லது நட்ஸ் எதுவும் சேர்க்காமலோ கூட செய்யலாம்.


அதே போல் விருப்பப்பட்டால் மட்டுமே சாக்கோ  சிப்ஸ் சேர்த்துக்கொள்ளவும்

No comments:

Post a Comment