Thursday, December 23, 2021

நெய் சாதம் (Ghee Rice)

நெய் சாதம் :





தேவையான பொருள்கள் : 


பாஸ்மதி அரிசி : 1 கப் 

நெய் : 2 -  3 மேஜைக்கரண்டி 

நறுக்கிய வெங்காயம் : 1

முந்திரி பருப்பு : 8 - 10

தண்ணீர் : தேவைக்கேற்ப 

உப்பு : தேவைக்கேற்ப 


தாளிப்பதற்கு : 

பிரியாணி இல்லை : 1

பட்டை : 1 இன்ச் 

ஏலக்காய் : 2

கிராம்பு : 5

மிளகு : ½ தேக்கரண்டி 

பச்சை மிளகாய் : 1 



செய்முறை :


முதலில் பாசுமதி அரிசியை நன்றாக களைந்து விட்டுஒரு முப்பது நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.


ஒரு குக்கரில் நெய் சேர்த்து முந்திரி பருப்புகளை பொரித்து தனியாக எடுத்துக் கொள்ளவும்


பின்னர் அதே குக்கரில் மீதமிருக்கும் நெய்யில்தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து தாளித்தபின்னர்வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.


வெங்காயம் சிறிது வதங்கியவுடன் ஊற வைத்த அரிசியை தண்ணீரை வடித்து விட்டு சேர்த்துஅரிசியையும்நெய்யில் மசாலா மற்றும் வெங்காயத்தோடு சேர்த்து சிறிது வதக்கி கொள்ளவும்


பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கெரை மூடி 2 விசில் விட்டு இறக்கிய பின்னர் வறுத்துவைத்துள்ள முந்திரி சேர்த்து கலந்தால் சுவையான நெய் சாதம் தயார்


குறிப்புகள் : 


பொதுவாக ஊற வைத்த பாசுமதி அரிசிக்கு 1.5 - 1.75 கப்  தண்ணீர் என்ற அளவே போதுமானதுஇருந்தாலும்ஒவ்வொரு பிராண்ட் அரிசிக்கும் சிறு வேறுபாடுகள் இருக்கலாம்அதற்கு தகுந்தாற் போன்று தண்ணீரின்அளவை அதிகரித்தோ அல்லது குறைத்தோ சேர்த்துக் கொள்ளவும்.


முந்திரியோடு சிறிது கிஸ்மிஸ் சேர்த்தும் இந்த நெய் சாதத்தை அலங்கரிக்கலாம்.


சிறிது வறுத்த வெங்காயத்தை இறுதியில் சேர்த்தால்மிகவும் சுவையாக இருக்கும்


இந்த நெய் சாதத்தை அப்டியே சாப்பிடலாம் அல்லது சிறிது டால் (பருப்பு குழம்பு) / குருமாவோடு சேர்த்துபரிமாறலாம்.

No comments:

Post a Comment