Thursday, December 23, 2021

பனீர் சாண்ட்விட்ச் (Paneer Sandwich)

 பனீர் சாண்ட்விட்ச் : 



தேவையான பொருள்கள் : 


துருவிய பனீர் : 1 கப் 

நறுக்கிய குடை மிளகாய் : 2 மேஜைக்கரண்டி 

பொடியாக அறிந்த கொத்தமல்லித்தழைகள் : 1 மேஜைக்கரண்டி  

மிளகாய்த்தூள் : ¼ தேக்கரண்டி 

சீரகத்தூள் : ¼ தேக்கரண்டி 

உப்பு : ¼ தேக்கரண்டி 

பிரட் : 4 துண்டுகள் 

தக்காளி சாஸ் : 2 மேஜைக்கரண்டி 

வெண்ணெய் : 2 தேக்கரண்டி 


செய்முறை : 


ஒரு மிக்ஸிங் பௌலில்துருவிய பனீர்கொத்தமல்லித்தழைகள்உப்புமிளகாய்த்தூள்சீரகத்தூள்குடைமிளகாய் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.


பிரட் துண்டுகளின் மேலே சிறிது வெண்ணெய் தடவிபனீர் கலவையை வைத்து அதன் மேலே மற்றொருவெண்ணெய் தடவிய பிரட் துண்டு வைத்து மூடிஒரு பிரட் டோஸ்ட்டரிலோ அல்லது தவாவிலோ வைத்துடோஸ்ட் செய்து எடுத்தால் சுவையான பனீர் சாண்ட்விட்ச் தயார்


குறிப்புகள் : 


இதில் பனீருடன் துருவிய கேரட் , வேக வைத்த கார்ன் போன்ற விருப்பமான எந்த காய்கறிகளையும் சேர்த்துஇதே முறையில் சாண்ட்விட்ச் தயாரிக்கலாம்.


மிளகாய்த்தூளிற்கு பதிலாக மிளகுத்தூள் சேர்த்தும் இதே சாண்ட்விட்ச் தயாரிக்கலாம்.


தக்காளி சாசிற்கு பதிலாக தயிர் சேர்த்தும் செய்யலாம்.


இந்த மசாலா கலவைக்குப் பதிலாக இத்தாலியன் சீசனிங்ஸ் போன்ற விருப்பமான எந்த மசாலாகலைவையையும் சேர்த்து இந்த சாண்ட்விட்ச் செய்யலாம்.

No comments:

Post a Comment