Friday, December 24, 2021

அடைப் பிரதமன்

 அடைப் பிரதமன் :



தேவையான பொருள்கள்


அடை :1 பாக்கெட் (கடைகளில் கிடைக்கும்)

வெல்லம் : 500 கிராம் 

தேங்காய் பால் (இரண்டாம் பால் - சிறிது நீர்க்க இருக்கும் ) : 1-11/2 கப் 

தேங்காய் பால் (முதல் பால் - கட்டியாக இருக்கும் ) : 1 கப் 

நெய் : 2-3 மேஜைக்கரண்டி 

பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டங்கள் :  ஒரு மேஜைக் கரண்டி 

அரிசி மாவு : 1  மேஜைக்கரண்டி (தேவைப்பட்டால்)

தண்ணீர் : தேவையான அளவு 


செய்முறை


ஒரு வாணலியில்ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்துபொடியாக நறுக்கிய தேங்காய்  துண்டுகளை வறுத்துஎடுத்துக் கொள்ளவும்.


முதலில் அடைகளை சாதாரண தண்ணீரில் ஒரு ஐந்து நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்


ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்தண்ணீர் கொதித்தவுடன் ஊறவைத்தஅடைகளை சேர்த்து நன்றாக வேகவைத்துக்கொள்ளவும்அடைகளை தொட்டுப்பார்த்தால் மிகவும் மிருதுவாகஇருக்கும்


உடனடியாக தண்ணீரை வடிகட்டி விட்டுஅடைகளை குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும்


ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து அது மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி,வெல்லத்தை நன்றாக கரையும் வரைகாய்ச்சிக் கொள்ளவும்


வெல்லம் கரைந்தவுடன்ஒரு வடிகட்டியின் மூலம் வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்


ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்துபின்னர் அதனுடன் வேக வைத்து இருக்கும்அடைகள் மற்றும் வெல்லத் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளவும்


10 - 15 நிமிடங்கள் கொதித்தவுடன்அடைகள் நன்றாக வெல்லத்தோடு ஒன்றாக கலந்து சேர்ந்து வரும் போதுமுதலில், 2 ஆம் பால் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும்


இந்த பதத்தில்தேவையானால் அரிசி மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து பிரதமனில் சேர்க்கவும்.


இறுதியாக முதல் தேங்காய் பால் சேர்த்துஒரு  கொதி வந்தவுடன் அடுப்பை  அணைத்து விடவேண்டும்


பின்னர் இதனுடன் வறுத்த தேங்காய் துண்டுகளை  சேர்த்து சுவையான அடைப் பிரதமனை பரிமாறவும்.


குறிப்புகள்:


அடைகள் வெந்தவுடன் உடனடியாக அறை வெப்பநிலையில் / குளிர்ந்த தண்ணீரில் அடைகளை நன்றாக கழுவிவிட வேண்டும்.

இவ்வாறு செய்வதால்அடைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்வதை  தவிர்க்கலாம்.


வெல்லம் கரைந்தவுடன் கண்டிப்பாக வடிகட்டி பயன்படுத்தவும் ஏனென்றால் அதில் தூசிகள்மண் போன்றவைவெல்லத்தில் இருக்கலாம்


தேங்காய் பால் மட்டும் தான் சேர்த்து பிரதமன் செய்ய வேண்டும்


பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகளுக்கு பதிலாக முந்திரி மற்றும் கிஸ்மிஸ் அல்லது தங்களுக்குவிருப்பமான பருப்புகளையும்  சேர்க்கலாம்

No comments:

Post a Comment