Friday, December 24, 2021

ஸ்பான்ஜி மல்டிகிரைன் ஆட்டா குலாப் ஜாமூன் மிக்ஸ் கேக் (Spongy Gulab jamun mixed cake)

 ஸ்பான்ஜி மல்டிகிரைன் ஆட்டா குலாப்  ஜாமூன் மிக்ஸ் கேக் :


தேவையான பொருள்கள் : 


மல்டிகிரைன் ஆட்டா : 100 கிராம் (24 மந்திரா ஆர்கானிக் மல்டிகிரைன் ஆட்டா

குலாப் ஜாமூன் மிக்ஸ் : 100 கிராம்

சர்க்கரை /சீனி : 100 கிராம் 

பேக்கிங் சோடா : 1/4 தேக்கரண்டி 

பேக்கிங் பவுடர் : 3/4 தேக்கரண்டி 

வெனிலா எசென்ஸ் : 1 தேக்கரண்டி 

பால் : 160 மில்லி லிட்டர் 

எண்ணெய் : 40 மில்லி லிட்டர் 


செய்முறை : 



ஓவனை 180 டிக்ரீஸ்க்கு முதலில் சூடாக்கி கொள்ளவும்.


ஒரு மிக்ஸி ஜாரில் சர்க்கரைசீனி மற்றும் குலாப் ஜாமூன் மிக்ஸ் இரண்டையும் சேர்த்து ஒரு சுற்றுசுற்றிக்கொள்ளவும்


பின்னர் இதனுடன் எண்ணெய் மற்றும் பால் சேர்த்து மீண்டும் ஒரு சுற்று சுற்றி கட்டி இல்லாமல் கலந்துவைத்துக் கொள்ளவும்


ஆட்டா மாவோடு பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து குறைந்தது இரண்டு முறை நன்றாக சலித்துஎடுத்துக்கொள்ளவும்


பின்னர் ஆட்டா மாவுக் கலவையோடு சர்க்கரைகுலாப் ஜாமூன் மிக்ஸ்எண்ணெய் மற்றும் பால் கலவையைசேர்த்து இட்லி மாவு பத்திற்கு கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்


இந்த கலவையை எண்ணெய் தடவிய ஒரு பேக்கிங் பேனிற்கு மாற்றி அதன் மீது முந்திரிப் பருப்புகள் சேர்த்துஅலங்கரித்துபின்னர் 180  டிஃகிரீசில் 30 - 35  நிமிடங்கள் பேக் செய்தால் சுவையான மல்டிகிரைன் ஆட்டாகுலாப்  ஜாமூன் மிக்ஸ் கேக் தயார்.


குறிப்பு:


பேக்கிங் செய்வதற்கு முன்னர் ஓவனை முதலில் ஒரு பத்து நிமிடங்கள் வரை கண்டிப்பாக சூடாக்கவேண்டும்.இவ்வாறு செய்வதால் ஓவனின் வெப்பநிலை பேக்கிங் செய்வதற்கு தேவையான அளவிற்கு வந்துவிடும்பின்னர் தான் பேக் செய்ய வேண்டும்


மல்டிகிரைன் ஆட்டாவிற்கு பதிலாக கோதுமை மாவிலோ அல்லது மைதா மாவிலோ இதே முறையில் கேக்செய்யலாம்


இந்த கேக்கிற்கு பொடித்த சர்க்கரை சேர்த்துளேன்நாம் சாதாரணமாக உபயோகிக்கும் சர்க்கரையைமிக்ஸியில் பொடித்து அதனை அளந்து எடுத்து உபயோகப்படுத்திக் கொள்ளவும்அல்லது சர்க்கரைக்குபதிலாக நாட்டுச் சர்க்கரையோவெல்லப்பொடியோ சேர்த்தும் செய்யலாம்


எண்ணெய் -  தங்களுக்கு விருப்பமான ஆனால் வாசனை இல்லாத எண்ணெய்யாக பயன்படுத்தலாம்.


முந்திரிக்கு பதிலாக விருப்பமான எந்த பருப்பையும் சேர்க்கலாம்.


ஐசிங் சுகர் உபயோகித்தும் இந்த கேக்கை அலங்கரிக்கலாம்


கேக்  நன்றாக ஆறியதும் தான் துண்டுகள் போட வேண்டும்.


இந்த கேக் ஒரு டீ கேக்.அதாவது இந்த கேக்கினை டீயோடு சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்

No comments:

Post a Comment