Tuesday, December 28, 2021

இட்லி மிளகாய் பொடி ( Idli milagai podi )

 இட்லி மிளகாய் பொடி


தேவையான பொருட்கள் :


உளுத்தம் பருப்புஒரு கப்

கடலை பருப்பு : ஒரு கப் 

காய்ந்த மிளகாய் : 18 - 20 (காரத்திற்கு தகுந்தாற் போன்று

பெருங்காயம் : 1-2 மேஜைக்கரண்டி

பூண்டு பல் - 2-3 

கருவேப்பிலை : ஒரு கைப்பிடி 

அரிசி  - அரை கப்  (விருப்பப்பட்டால்)

எள் - அரை கப்  (விருப்பப்பட்டால்)

கல் உப்பு  - தேவைக்கேற்ப 

எண்ணெய் : 2 தேக்கரண்டி 


செய்முறை:


ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து பருப்புகள்,அரிசி மற்றும் எள்ளை பொன் நிறமாக தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.


அதே வாணலியில் கருவேப்பிலை சேர்த்து ஈரப்பதம் போக நன்றாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.


மீண்டும் அதே வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்துவறுத்து எடுத்துக் கொள்ளவும்.


இறுதியாக அடுப்பை அணைக்கும் முன்னர்பெருங்காயம் சேர்த்து அது பொரிந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டுவறுத்து எடுத்த பொருட்களை நன்றாக ஆற விடவும்.


பூண்டை வறுக்கத் தேவையில்லை பச்சை பூண்டை நன்றாக நசுக்கிதட்டி வைத்துக் கொள்ளவும்.


வறுத்து எடுத்த பொருட்கள் ஆறியவுடன்பருப்புகள் மற்றும் அரிசி சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாகஅரைத்துக் கொள்ளவும்.


ஓரளவு அரைத்த பின்னர்அதனுடன் உப்பு , பெருங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து மீண்டும் அரைக்கவேண்டும்.


இறுதியாக பூண்டும் எள்ளும் சேர்த்து ஒன்று அல்லது இரண்டு சுற்றுகள் மட்டுமே சுற்றி எடுத்தால் சுவையானஇட்லி மிளகாய் பொடி தயார்.


குறிப்புகள் : 


விருப்பப்பட்டால் மட்டுமே அரிசி மற்றும் எள்ளு சேர்க்கலாம்.


காய்ந்த மிளகாயோடு கல் உப்பைச் சேர்த்து வறுத்தால் மிளகாயின் நெடி இருக்காது.


பூண்டு மற்றும் எள்ளை இறுதியாக மட்டுமே சேர்த்து அரைக்க வேண்டும்.


இதனுடன் நல்ல எண்ணெய் அதாவது எள்ளு எண்ணெய் சேர்த்து இட்லி அல்லது தோசையோடு சாப்பிடலாம்.


இதை  ஒரு காற்றுப் புகாத பாத்திரத்தில் வைத்து ஒரு மாதத்திற்கும் மேலாக உபயோகப்படுத்தலாம்.

No comments:

Post a Comment