Friday, December 24, 2021

ஆப்பிள் யோகர்ட் / தயிர் ஸ்மூத்தி (Apple yogurt smoothie)

 ஆப்பிள் யோகர்ட் / தயிர் ஸ்மூத்தி





தேவையான பொருட்கள்

ஆப்பிள் : 1 - 2 

தயிர்யோகர்ட் : 1 கப்

தேன் : 1 மேஜைக்கரண்டி 

ஐஸ் கட்டிகள் : 5 - 6 (விருப்படுபவர்கள் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்

ஊற வைத்த சியா விதைகள் – 1 தேக்கரண்டி 


செய்முறை:


முதலில் ஒரு கிண்ணத்தில்சியா விதைகளை சிறிது தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளவும்


சிறிது நேரத்தில்அந்த விதைகள் தண்ணீரை உறுஞ்சி ஜெல்லி போன்று ஆகிவிடும்.


ஒரு ஜூசெரில் தோல் உரித்து பொடியாக நறுக்கிய ஆப்பிள் துண்டங்கள்தயிர் சேர்த்து நன்றாகஅடித்துக்கொள்ளவும்.


இறுதியாக தேன் மற்றும் ஐஸ் கட்டிகள் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்க வேண்டும்.


பின்னர் இதன் மேல் சியா விதை ஜெல்லிகளைச் சேர்த்து பரிமாறினால் சுவையான ஆப்பிள் தயிர் ஸ்மூத்திதயார்.


குறிப்புகள்:


உடல் எடை குறைவதற்கு பெரும்பாலும்  ஸ்மூத்திகள் உதவி செய்கின்றன.


தயிருக்கு பதிலாக கிரீக் யோகர்ட் சேர்த்தும் செய்யலாம்.


சுவையூட்டியாக தேனிற்கு பதிலாக நாட்டுச் சர்க்கரைவெல்லம் மாதிரி பிற சுவையூட்டிகளையும்பயன்படுத்தலாம்.


அல்லது தேனிற்கு பதிலாக ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்தும் இதே ஸ்மூத்தி செய்யலாம்.


சியா விதைகள் சேர்க்காமலும் இந்த ஸ்மூத்தி செய்யலாம்.


ஆப்பிள் சேர்த்து இருப்பதால்இதனை உடனேயே செய்து உடனேயே பரிமாறி விட வேண்டும்.

No comments:

Post a Comment