Thursday, December 23, 2021

புளி இல்லா கறி/ குழம்பு (Puli Illa curry)

 புளி இல்லா கறிகுழம்பு : 





தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு : 1/4 கப்

முருங்கைக்கீரை : 1 கப்

முருங்கைக்காய் : 1 (2 இன்ச் துண்டுகளை நறுக்கியது )

கத்திரிக்காய்  : 1 (விருப்பப்பட்டால் ) 

மஞ்சள்தூள் :  1/4 தேக்கரண்டி

உப்பு :  தேவையான அளவு


அரைப்பதற்கு தேவையான பொருள்கள் : 


தேங்காய் துருவல் : 2 மேஜைக்கரண்டி 

சீரகம் : 1 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் : 4 

மிளகு :  2 தேக்கரண்டி

கறிவேப்பிலை : 10 இலைகள்

சின்ன வெங்காயம் : 3

பூண்டு பற்கள் : 2


தாளிப்பதற்கு : 


கடுகு : 1/2 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு :  1/2 தேக்கரண்டி

சீரகம் :  1/2 தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் : 1 மேஜைக்கரண்டி 

நெய்தேங்காய் எண்ணெய் : 1 தேக்கரண்டி 


செய்முறை : 


துவரம்பருப்பை நன்கு கழுவி விட்டுசிறிது நேரம் ஊறவைத்து குக்கரில் 4 விசில் வரும் வரை வேகவைத்துஎடுக்கவும்.


வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் அதில் மிளகுசீரகம்மிளகாய் வற்றல்கறிவேப்பிலைசேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.


அவை அறிய பின் ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் சேர்த்து சின்ன வெங்காயம்பூண்டு பற்கள்தேங்காய் துருவல்சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.


ஒரு வாணலியில்தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து தாளித்த பின்னர்நறுக்கியகத்திரிக்காய்முருங்கைக்காய் மற்றும்  முருங்கைக்கீரை சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.


காய்கள் மற்றும் கீரை பாதி வெந்ததும்வேக வைத்துள்ள பருப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.


பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துகொதிக்க விட்டு இறக்கினால் சுவையான புளி இல்லா குழம்பு தயார் 


குறிப்பு


பெயரிற்கு ஏற்றாற்போல் , இந்த குழம்பில் புளி / தக்காளி போன்ற எந்த புளிப்பும் சேர்ப்பதில்லை இதுதிருநெல்வேலியின் ஒரு சிறப்பான குழம்பு (ஸ்பெஷல் குழம்பு


துவரம் பருப்பிற்கு பதிலாக பாசிப்பருப்பு சேர்த்தும் இதே முறையில் இந்த குழம்பினை தயாரிக்கலாம்


கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் மட்டும் தான் இந்த குழம்பில் சேர்த்து செய்வோம் காய்கள் இல்லாமலும்வெறும் கீரை மட்டும் சேர்த்தும் தயாரிக்கலாம் 


மிளகு சேர்க்காமல் வெறும் காய்ந்த மிளகாய் மட்டுமே சேர்த்தும் தயாரிக்கலாம் 


முருங்கைக்கீரை கண்டிப்பாக சேர்க்க வேண்டும் ஆனால்அதிக அளவு சேர்க்க வேண்டாம்


இந்த குழம்பை அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது.

No comments:

Post a Comment