Tuesday, December 28, 2021

இட்லி மிளகாய் பொடி ( Idli milagai podi )

 இட்லி மிளகாய் பொடி


தேவையான பொருட்கள் :


உளுத்தம் பருப்புஒரு கப்

கடலை பருப்பு : ஒரு கப் 

காய்ந்த மிளகாய் : 18 - 20 (காரத்திற்கு தகுந்தாற் போன்று

பெருங்காயம் : 1-2 மேஜைக்கரண்டி

பூண்டு பல் - 2-3 

கருவேப்பிலை : ஒரு கைப்பிடி 

அரிசி  - அரை கப்  (விருப்பப்பட்டால்)

எள் - அரை கப்  (விருப்பப்பட்டால்)

கல் உப்பு  - தேவைக்கேற்ப 

எண்ணெய் : 2 தேக்கரண்டி 


செய்முறை:


ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து பருப்புகள்,அரிசி மற்றும் எள்ளை பொன் நிறமாக தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.


அதே வாணலியில் கருவேப்பிலை சேர்த்து ஈரப்பதம் போக நன்றாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.


மீண்டும் அதே வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்துவறுத்து எடுத்துக் கொள்ளவும்.


இறுதியாக அடுப்பை அணைக்கும் முன்னர்பெருங்காயம் சேர்த்து அது பொரிந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டுவறுத்து எடுத்த பொருட்களை நன்றாக ஆற விடவும்.


பூண்டை வறுக்கத் தேவையில்லை பச்சை பூண்டை நன்றாக நசுக்கிதட்டி வைத்துக் கொள்ளவும்.


வறுத்து எடுத்த பொருட்கள் ஆறியவுடன்பருப்புகள் மற்றும் அரிசி சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாகஅரைத்துக் கொள்ளவும்.


ஓரளவு அரைத்த பின்னர்அதனுடன் உப்பு , பெருங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து மீண்டும் அரைக்கவேண்டும்.


இறுதியாக பூண்டும் எள்ளும் சேர்த்து ஒன்று அல்லது இரண்டு சுற்றுகள் மட்டுமே சுற்றி எடுத்தால் சுவையானஇட்லி மிளகாய் பொடி தயார்.


குறிப்புகள் : 


விருப்பப்பட்டால் மட்டுமே அரிசி மற்றும் எள்ளு சேர்க்கலாம்.


காய்ந்த மிளகாயோடு கல் உப்பைச் சேர்த்து வறுத்தால் மிளகாயின் நெடி இருக்காது.


பூண்டு மற்றும் எள்ளை இறுதியாக மட்டுமே சேர்த்து அரைக்க வேண்டும்.


இதனுடன் நல்ல எண்ணெய் அதாவது எள்ளு எண்ணெய் சேர்த்து இட்லி அல்லது தோசையோடு சாப்பிடலாம்.


இதை  ஒரு காற்றுப் புகாத பாத்திரத்தில் வைத்து ஒரு மாதத்திற்கும் மேலாக உபயோகப்படுத்தலாம்.

மினி பொடி இட்லி (mini podi ildai)

 மினி பொடி இட்லி : 



தேவையான பொருட்கள்:


மினி இட்லி – 25

இட்லி பொடி – 2 மேசைக்கரண்டி 

நல்லெண்ணெய் – 2-3 மேசைக்கரண்டி 


செய்முறை:


ஆறிய மினி இட்லியுடன் இட்லி பொடி மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்தால் சுவையான மினிபொடி இட்லி தயார்.


குறிப்புகள் 


மினி இட்லிக்குப் பதிலாக பெரிய இட்லியிலும் பொடி தடவி பொடி இட்லி தயாரிக்கலாம்.


விருப்பமிருந்தால்கடுகுஉளுத்தம் பருப்பு கருவேப்பிலை மற்றும் முந்திரிப்பருப்பு சேர்த்து தாளித்தும்பரிமாறலாம்.

ஆப்பம் (Aappam)

ஆப்பம்:



தேவையான பொருள்கள் :


இட்லி அரிசி : 1 கப் 

பச்சரிசி :  1 கப் 

உளுந்து : 1/4 கப் 

வெந்தயம் : 1 மேஜைக்கரண்டி 

உப்புதேவையான அளவு 


செய்முறை : 


ஒரு பாத்திரத்தில் அரிசிஉளுந்து மற்றும் வெந்தயம் எல்லாம் சேர்த்து நன்றாக கழுவிய பின்னர்  2 - 3 மணிஊறவைத்து அதை மிக்ஸி அல்லது கிரைண்டரில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.


பின்னர் உப்பு சேர்த்து கலந்து 7  - 8 மணி நேரம் வரை மாவினை புளிக்க வைக்க வேண்டும்.


ஆப்பமாவு இட்லி மாவினை விட சிறிது நீர்க்க இருக்க வேண்டும்ஆகையால்பொங்கிய ஆப்ப மாவோடு சிறிதுதேங்காய் பால் சேர்த்து சரியான பதத்திற்கு மாவினை கரைத்து அதனை ஆப்பம் செய்யும் கடாயில் விட்டால்சுவையான ஆப்பம் தயார்.


குறிப்புகள் : 


விருப்பப்பட்டவர்கள் சமையல் சோடா சேர்த்தும் ஆப்பம் செய்யலாம்.


தேங்காய் பால் சேர்க்காமல் வெறும் தண்ணீரும் சேர்த்து ஆப்பம் செய்யலாம்.


தேங்காய் பால் சேர்ப்பதற்கு பதிலாக அரை கப் தேங்காயை மாவு அரைக்கும் போதே சேர்த்து அரைத்தும்செய்யலாம்ஆனால்இவ்வாறு தேங்காய் சேர்த்து அரைத்தால்மாவினை உடனேயே பயன்படுத்தி விடவேண்டும்இல்லையென்றால் மாவு கெட்டு விடும்.

வெந்தய கீரை சாம்பார் (methi leaves sambar)

 வெந்தய கீரை சாம்பார்



தேவையான பொருள்கள்


துவரம் பருப்பு : 1/4  கப் 

வெந்தய கீரை : 2 கப் 

நறுக்கிய கேரட் :  1/4 கப் 

புளி : சிறு எலுமிச்சை அளவு 

சாம்பார் பொடி :  1 & 1/2 – 2 தேக்கரண்டி 

மஞ்சள் பொடி  :  1/4 தேக்கரண்டி

பெருங்காயம் : 2 சிட்டிகை 

உப்பு : தேவையான அளவு 


தாளிப்பதற்கு

நல்லெண்ணெய் : 2 தேக்கரண்டி 

கடுகு : 1/2 தேக்கரண்டி 

உளுத்தம்பருப்பு : 1/2 தேக்கரண்டி 

சீரகம் : 1/2 தேக்கரண்டி 


செய்முறை : 


புளியைக் கரைத்து புளிக்கரைசலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.


வெந்தய கீரை இலைகளை மட்டும் ஆய்ந்து நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும்.


 30 நிமிடங்கள் ஊற வைத்த துவரம் பருப்பினை சிறிது மஞ்சள் பொடி சேர்த்து குக்கெரிலிட்டு 3  - 4 விசில்வைத்து வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும்.


ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து தாளித்த பின்னர்கேரட் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.


காரட் வெந்தவுடன் அதனுடன் வெந்தய கீரை இலைகளை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.


கீரை வதங்கியவுடன்புளிக்கரைசல்சாம்பார் பொடிமஞ்சள் பொடிஉப்பு சேர்த்து குழம்பினைக் கொதிக்கவைத்துக் கொள்ளவும்.


புளிக்கரைசலின் பச்சை வாசனை போனவுடன்வேக வைத்து கடைந்து வைத்துள்ள துவரம் பருப்பினைசேர்த்துதேவைப்பட்டால் சிறிது தண்ணீரும் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான வெந்தயகீரை சாம்பார் தயார்.


குறிப்புகள் :


வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்தும் இதே குழம்பினை செய்யலாம் 


வெந்தய கீரை சிறிது கசப்பாக இருக்கும் ஆகையால் இந்த சம்பாரிற்கு புளி சிறிது அதிகமாக சேர்க்க வேண்டும்


இந்த சாம்பாரில் கீரை சேர்ப்பதால் காய்கறிகள் மற்றும் கருவேப்பிலை சேர்க்க தேவை இல்லைஇருந்தாலும்கீரை சிறிது கசப்பாக இருக்குமாதலால் நான் கேரட் மட்டும் சேர்த்து செய்வேன்

Friday, December 24, 2021

உருளைக் கிழங்கு பொடிமாஸ் (Potato podimas)

 உருளைக் கிழங்கு பொடிமாஸ் :


தேவையான பொருள்கள் : 


வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு : 2 (பெரியது)

துருவிய தேங்காய் : 2 மேஜைக்கரண்டி

துருவிய இஞ்சி : 1 தேக்கரண்டி 

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் :  6

பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் : 2-3 

எலுமிச்சம்பழச் சாறு : 1/2 தேக்கரண்டி

உப்பு : தேவைக்கேற்ப 


தாளிப்பதற்கு


கடுகு : 3/4 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு : 3/4 தேக்கரண்டி

கடலைப்பருப்பு : 3/4 தேக்கரண்டி

பெருங்காயம் : 1/4 தேக்கரண்டி

கருவேப்பிலை : 10 - 15

எண்ணெய் : 1 -1.5 தேக்கரண்டி


செய்முறை : 


முதலில் குக்கரில் உருளைக்கிழங்குகளை போட்டு நன்றாக வேக வைத்து அதை தோலுரித்து மசித்து எடுத்துக்கொள்ளவும்

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு பொரிந்தவுடன்உளுத்தம் பருப்புகடலைப்பருப்பு சேர்த்து பொன்நிறமாக வரும் வரை வறுத்த பின்னர் அதனோடு நறுக்கிய சின்ன வெங்காயம் கீறிய பச்சை மிளகாய்இஞ்சி ,  கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்

வெங்காயம் நன்கு வதங்கியவுடன் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து 5 - 6 

நிமிடங்கள் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

இறுதியாக துருவிய தேங்காய்ப்பூ சேர்த்து இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு பொடிமாஸ் தயார்.


குறிப்பு : 

இது சாம்பார் சாதம்ரசம் சாதம் , சப்பாத்தி மற்றும் சொதியோடு சேர்த்து சாப்பிடலாம்.

அடைப் பிரதமன்

 அடைப் பிரதமன் :



தேவையான பொருள்கள்


அடை :1 பாக்கெட் (கடைகளில் கிடைக்கும்)

வெல்லம் : 500 கிராம் 

தேங்காய் பால் (இரண்டாம் பால் - சிறிது நீர்க்க இருக்கும் ) : 1-11/2 கப் 

தேங்காய் பால் (முதல் பால் - கட்டியாக இருக்கும் ) : 1 கப் 

நெய் : 2-3 மேஜைக்கரண்டி 

பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டங்கள் :  ஒரு மேஜைக் கரண்டி 

அரிசி மாவு : 1  மேஜைக்கரண்டி (தேவைப்பட்டால்)

தண்ணீர் : தேவையான அளவு 


செய்முறை


ஒரு வாணலியில்ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்துபொடியாக நறுக்கிய தேங்காய்  துண்டுகளை வறுத்துஎடுத்துக் கொள்ளவும்.


முதலில் அடைகளை சாதாரண தண்ணீரில் ஒரு ஐந்து நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்


ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்தண்ணீர் கொதித்தவுடன் ஊறவைத்தஅடைகளை சேர்த்து நன்றாக வேகவைத்துக்கொள்ளவும்அடைகளை தொட்டுப்பார்த்தால் மிகவும் மிருதுவாகஇருக்கும்


உடனடியாக தண்ணீரை வடிகட்டி விட்டுஅடைகளை குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும்


ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து அது மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி,வெல்லத்தை நன்றாக கரையும் வரைகாய்ச்சிக் கொள்ளவும்


வெல்லம் கரைந்தவுடன்ஒரு வடிகட்டியின் மூலம் வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்


ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்துபின்னர் அதனுடன் வேக வைத்து இருக்கும்அடைகள் மற்றும் வெல்லத் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளவும்


10 - 15 நிமிடங்கள் கொதித்தவுடன்அடைகள் நன்றாக வெல்லத்தோடு ஒன்றாக கலந்து சேர்ந்து வரும் போதுமுதலில், 2 ஆம் பால் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும்


இந்த பதத்தில்தேவையானால் அரிசி மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து பிரதமனில் சேர்க்கவும்.


இறுதியாக முதல் தேங்காய் பால் சேர்த்துஒரு  கொதி வந்தவுடன் அடுப்பை  அணைத்து விடவேண்டும்


பின்னர் இதனுடன் வறுத்த தேங்காய் துண்டுகளை  சேர்த்து சுவையான அடைப் பிரதமனை பரிமாறவும்.


குறிப்புகள்:


அடைகள் வெந்தவுடன் உடனடியாக அறை வெப்பநிலையில் / குளிர்ந்த தண்ணீரில் அடைகளை நன்றாக கழுவிவிட வேண்டும்.

இவ்வாறு செய்வதால்அடைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்வதை  தவிர்க்கலாம்.


வெல்லம் கரைந்தவுடன் கண்டிப்பாக வடிகட்டி பயன்படுத்தவும் ஏனென்றால் அதில் தூசிகள்மண் போன்றவைவெல்லத்தில் இருக்கலாம்


தேங்காய் பால் மட்டும் தான் சேர்த்து பிரதமன் செய்ய வேண்டும்


பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகளுக்கு பதிலாக முந்திரி மற்றும் கிஸ்மிஸ் அல்லது தங்களுக்குவிருப்பமான பருப்புகளையும்  சேர்க்கலாம்

இஞ்சித்தொகையல் (Ginger thogayal)

 இஞ்சித்தொகையல்:



தேவையான பொருட்கள் : 


நறுக்கிய இஞ்சி : ஒரு கப் 

காய்ந்த மிளகாய் : 2

புளி : 20 கிராம் (ஒரு எலுமிச்சம் பழம் அளவு )

உப்பு : ஒரு தேக்கரண்டி 


தாளிப்பதற்கு


கடுகு : 1 தேக்கரண்டி 

நல்லெண்ணெய் : 1 தேக்கரண்டி 

உளுத்தம் பருப்பு  : 1 தேக்கரண்டி 

பெருங்காயம்  : 1 /4 தேக்கரண்டி 


செய்முறை


ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி அதில் காய்ந்த மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து சேர்த்துநன்றாக  வதக்கிக் கொள்ளவும்.


இஞ்சி நன்றாக வதங்கியவுடன் அதனுடன் புளி மற்றும் உப்பு சேர்த்து ஒரு ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின்னர்அடுப்பை அணைத்து விடவும்.


மிளகாய் மற்றும் இஞ்சிக் கலவை சிறிது ஆறியவுடன் அதனை ஒரு மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டுஅரைத்தால் சுவையான இஞ்சித் தொகையல் தயார்.


குறிப்புகள்


இஞ்சி மற்றும் காய்ந்த மிளகாய் ஆகிய இரண்டுமே காரம் அதிகமுள்ளதாகையால் புளியும் உப்பும் சற்றுஅதிகமாக சேர்க்க வேண்டும்


காரம் அதிகமென்று நினைத்தாலோ அல்லது விருப்பட்டாலோ சிறிது வெல்லம் அல்லது சிறிது தேங்காயோசேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.


சூடான சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் அல்லது நெய்யோடு இந்த தொகையல் சேர்த்து சாப்பிடலாம்