Sunday, December 20, 2020

தேங்காய்ப் பால் சொதி: (Tirunelveli special Sodhi / coconut milk stew)

 தேங்காய்ப் பால் சொதி




தேவையான பொருள்கள்

துருவிய தேங்காய் : 1
பாசிப்பருப்பு : கால் கப்
நறுக்கிய உருளைக்கிழங்கு : 1 
நறுக்கிய கேரட் : 1 
நறுக்கிய பீன்ஸ் : 10 
நறுக்கிய முருங்கைக்காய் : 1 
எலுமிச்சை சாறு : 1 பழத்தில் இருந்து எடுத்த சாறு (3 மேஜைக்கரண்டி ) 


அரைப்பதற்கு : 


நறுக்கிய இஞ்சி : 20 கிராம் 
பச்சை மிளகாய் : 4 - 5
பூண்டு : 5 - 8 பற்கள் 
சீரகம் : 1 தேக்கரண்டி 


தாளிப்பதற்கு :


தேங்காய் எண்ணெய் : ஒரு தேக்கரண்டி 
கடுகு : கால் தேக்கரண்டி 
உளுத்தம் பருப்பு : 1 தேக்கரண்டி 
சீரகம் : 1 தேக்கரண்டி 
கருவேப்பிலை : ஒரு கொத்து 
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் : 1
கீறிய பச்சை மிளகாய் : 2
உப்பு : தேவையான அளவு 


தேங்காய் பால் எடுக்கும் முறை


ஒரு தேங்காயை துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும்

ஒரு மிக்ஸி ஜாரில் அதை தண்ணீர் விடாமல் அரைத்து முதல் பால் எடுத்து அதை தனியாக வைத்துக்கொள்ளவும்


பின்னர் முதலில் அரைத்த அதே தேங்காய்ப் பூவுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து இரண்டாம் முறை தேங்காய்பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்


இதே முறையில் மூன்றாம் முறையும் தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.


செய்முறை:


பாசிப்பருப்பை ஒரு அரை மணி நேரம் ஊற வைத்து பின்னர் குக்கரில் ஒரு மூணு விசில் விட்டு வேக வைத்துக்கொள்ளவும்.


எல்லா காய்களையும் ( உருளைக்கிழங்குகேரட்பீன்ஸ் மற்றும் முருங்கைக்காய்குக்கரில் மூன்றாம் பால்சேர்த்து ரெண்டு விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்


இஞ்சியை மிக்ஸியில் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அதில் இருந்து இஞ்சிச் சாறு எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்


பின்னர் பச்சை மிளகாய்பூண்டுப்பற்கள் மற்றும் சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்

 

ஒரு கடாயில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றிகடுகு சேர்த்து அது பொரிந்தவுடன் உளுத்தம் பருப்பு , சீரகம்மற்றும் கருவேப்பிலை சேர்த்து சேர்த்து தாளித்துக் கொள்ளவும்


பின்னர் அதனுடன் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்


இதனுடன் வேக வைத்த காய்கறிகள்பருப்புபச்சை மிளகாய்பூண்டு மற்றும் சீரகம் அரைத்த விழுது மற்றும்இரண்டாம் பால் சேர்த்து ஒன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளவும்.


பின்னர் இதனுடன் இஞ்சிச் சாறு சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும்.


இறுதியாக இதனுடன் முதல் தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விட வேண்டும்.


சிறிது ஆறியவுடன் அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால் சுவையான சொதி தயார்.



குறிப்புகள் : 


இந்த குழம்பிற்கு புளிமசாலாபொடி போன்ற எதுவும் சேர்ப்பதில்லைகுழம்பிற்கு தேவையான காரம் பச்சைமிளகாய் மற்றும் இஞ்சி மட்டுமேஆகையால் இவை இரண்டும் சற்று அதிகமாக சேர்க்க வேண்டும்அதே போல்குழம்பிற்குத் தேவையான புளிப்பிற்கு எலுமிச்சைச் சாறு மட்டும் தான்.


முதல் பால் சேர்த்தவுடன் அதிக நேரம் கொதிக்க விடக்கூடாதுஏனென்றால் பால் / குழம்பு திரிந்து விடவாய்ப்புகள் அதிகம்


இறுதியாக எலுமிச்சை சாறை குழம்பு சற்று ஆறிய பின்னர் தான் சேர்க்க வேண்டும்சூடாக இருக்கும் போதேசேர்த்தால் சிறிது கசப்புத் தன்மை வந்துவிடும்.

No comments:

Post a Comment