Tuesday, December 29, 2020

ரவா ஷெல்ஸ் (Rava / sooji spicy shells)

 ரவா ஷெல்ஸ் 




தேவையான பொருள்கள் :

ரவா : 1 கப் 
மிளகு பொடி : 1/2 தேக்கரண்டி 
மிளகாய் பொடி : 1/2 தேக்கரண்டி 
உப்பு : தேவையான அளவு 
தண்ணீர் : தேவையான அளவு
எண்ணெய் : பொரிப்பதற்கு 

செய்முறை :

இந்த ரவா ஷெல்ஸ் செய்வதற்கு ரவை மிகவும் சிறியதாக இருக்க வேண்டும். ஆகையால், நான் ரவையை மிக்ஸியிலிட்டு அதனை நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ளவும்.  

பொடித்த ரவையுடன் மிளகாய் பொடி , மிளகு பொடி, உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து பிரட் க்ராம்ஸ் பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, ஒரு ஈரத்துணியினால் மூடி 10  நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ளவும்.

மாவு நன்றாக ஊறி, மிகவும் மிருதுவாக இருக்கும். இதனை சிறு சிறு உருளைகளாக உருட்டிக் கொள்ளவும். 

பின்னர் ஒவ்வொரு உருளையாக எடுத்து, ஒரு முள் கரண்டியின் பின்னால் அதனை வைத்து கரண்டியின் இம்ப்ரெஸ்ஸன் வரும் வண்ணம் மாவினை அழுத்திய பின்னர் அதனை அப்படியே உருட்டி எடுத்தால் ஷெல் வடிவங்கள் வரும். 




ஒரு அடி கனமான வாணலியில்,எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடாகியதும், செய்து வைத்துள்ள ஷெல்களை சேர்த்து மிதமான தீயில், போன் நிறமாகும் வரை பொரித்து எடுத்தால், சுவையான ரவா ஷெல்ஸ் தயார்.. 

குறிப்புகள் :

ரவா பொடியாக இருந்தால், மிக்ஸியில் அரைத்துப் பொடிக்க தேவையில்லை.. 

இந்த ஷெல்களை மிதமான தீயில் மிகவும் பொறுமையாக பொறித்து எடுக்கவும். அவ்வாறு செய்வதால், செல்களின் உள்ளே வரை நன்றாக பொரிந்து மிகவும் மொறுமொறுப்பாக இருக்கும். 

நான் மிளகு பொடியும் மிளகாய் பொடியும் சேர்த்து செய்து உள்ளேன்.. நீங்கள் உங்களுக்கு விருப்பமான பொடிகளை சேர்த்து செய்து ருசியுங்கள்.
சில நேரங்களில், சாட் மசாலா / இத்தாலியன் சீசனிங்ஸ் கூட சேர்த்து செய்து இருக்கிறேன்.. மிகவும் சுவையாக இருக்கும். 

No comments:

Post a Comment