Tuesday, December 22, 2020

டோக்ளா (Dhokla)

 

டோக்ளா:


தேவையான பொருள்கள்:


கடலை மாவு : 1 கப் 

ரவை : 3 தேக்கரண்டி 

பொடியாக நறுக்கிய / துருவிய இஞ்சி : 1 இன்ச் 

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் : 2

சர்க்கரை : 1 தேக்கரண்டி 

மஞ்சள் பொடி : 1/4 தேக்கரண்டி 

பெருங்காயம் : 1 பின்ச் 

எலுமிச்சம் பழச்சாறு : 1-2 தேக்கரண்டி 

உப்பு : தேவையான அளவு 

தண்ணீர் : 1 கப்  

இனோ (Eno) பழ உப்பு / பேக்கிங் சோடா : 1/2 தேக்கரண்டி 

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தளைகள் : 2 மேஜைக்கரண்டி 

துருவிய தேங்காய் : சிறிது 


தாளிப்பதற்கு:


எண்ணெய் : 2 தேக்கரண்டி 

கடுகு : 1 தேக்கரண்டி 

சீரகம் : 1 தேக்கரண்டி   

எள்ளு : 1 தேக்கரண்டி 

பெருங்காயம் : 1 பின்ச் 

கருவேப்பிலை : சிறிது 

கீறிய பச்சை மிளகாய் : 2

சர்க்கரை : 1 தேக்கரண்டி 

உப்பு : 1/4 தேக்கரண்டி 

தண்ணீர் : 1/4 கப்

எலுமிச்சம் பழச்சாறு : 1 தேக்கரண்டி 


செய்முறை :


முதலில்ஒரு சல்லடையில் கடலை மாவு மற்றும் ரவையை சேர்த்து நன்றாக சலித்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.


பின்னர் அதனுடன்இஞ்சிபச்சை மிளகாய்மஞ்சள் பொடிசர்க்கரைஉப்புபெருங்காயம்எலுமிச்சம்பழச்சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கைகளால் நன்றாக கலந்து விடவும்.


பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து ஒரு 20 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ளவும்.


ஒரு steameril/ இட்லி செய்யும் பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளவும்


ஒரு தட்டில் சிறிது எண்ணெய் தடவி எடுத்து கொள்ளவும்


மேலே தயாரித்து ஊற வைத்துள்ள மாவில் இப்பொழுது eno / பேக்கிங் சோடா சேர்த்து கலந்த பின்னர்எண்ணெய் தடவிய தட்டில் இந்த மாவினை ஊற்றி ஆவியில் ஒரு 10 - 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்துஒருநிமிடங்கள் சிறிது ஆறவிட்டு பின்னர் அதனை ஒரு கத்தியினால் விருப்பமான வடிவத்தில் சிறு சிறுதுண்டுகளாக வெட்டி கொள்ளவும்.


ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகசேர்த்துஇறுதியாக அதில் கால் கப் தண்ணீர் சேர்த்து கொதித்த பின்னர் அதனுடன் எலுமிச்சம் பழச்சாறுசேர்த்து கலந்துஇதனை வேக வைத்து எடுத்துள்ள டோக்லாவின் மீது ஊற்றிசிறிது தேங்காய் மற்றும்கொத்தமல்லி தளைகள் சேர்த்து பரிமாறினால் சுவையான டோக்ளா தயார்


 

குறிப்புகள்:


ரவை சேர்க்காமலும் இதே முறையில் டோக்ளா தயாரிக்கலாம்


இது உடனடியாக டோக்ளா தயாரிக்கும் முறை ஆதலால்இதில் இனோபேக்கிங் சோடா சேர்த்து செய்துஇருக்கிறேன்


Eno சேர்ப்பதால்மஞ்சள் பொடி சிறிது அளவாக சேர்க்கவும்ஏனென்றால்மஞ்சளும் Eno - உம் சேர்ந்துடோக்ளாவின் நிறத்தினை சிகப்பாக மாற்றிவிடும்


மாவில் Eno / பேக்கிங் சோடா சேர்ப்பதற்கு முன்னர் மாவினை கட்டியில்லாமல் நன்றாக கலந்து கொள்ளவும்இதனை சேர்ப்பதால்மாவு நன்றாக பொங்கி டோக்ளா மிகவும் மிருதுவாக வரும்


இதனை காலை உணவாகவோ / மாலை சிற்றுண்டியாகவோ சாப்பிடலாம்


இதனோடு green சட்னி சேர்த்து சுவைக்கலாம்


இன்ஸ்டன்ட் டோக்ளாவை சூடாக பரிமாறினால் சுவையாக / மிருதுவாக இருக்கும்.


No comments:

Post a Comment