Tuesday, December 22, 2020

பிளைன் சால்னா (Plain Salna )


பிளைன் சால்னா


தேவையான பொருள்கள்: 


வெங்காயம் : 1

தக்காளி : 2

சோம்பு : 1 மேஜைக்கரண்டி

மிளகு : 1/2 தேக்கரண்டி 

பட்டை : 1  இன்ச்

ஏலக்காய் : 2

ஜீரகம் : 1 தேக்கரண்டி 

பூண்டு : 2

இஞ்சி  : 1/2 இன்ச் 

பச்சைமிளகாய் : 1

சிகப்பு மிளகாய் பொடி : 1/2 தேக்கரண்டி 

தனியா பொடி : 1 மேஜைக்கரண்டி 

மஞ்சள் பொடி : 1/4 தேக்கரண்டி 

துருவிய தேங்காய் : 1/4 cup

முந்திரிப்பருப்புகள் / பொட்டுக்கடலை : 1 மேஜைக்கரண்டி 

எண்ணெய் : 3 மேஜைக்கரண்டி 


செய்முறை:


ஒரு அடி கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றிஅதில் தேங்காய் மற்றும் முந்திரி தவிர மீதி இருக்கும்பொருள்களை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்


இறுதியாகதேங்காய் சேர்த்து அடுப்பை அனைத்துவறுத்த கலவை நன்றாக ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரிலிட்டுதேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்தால் சுவையான பிளைன் சால்னா தயார்.


பின்னர் விருப்பப்பட்டால் முழு கரம் மசாலா தாளித்து கொள்ளலாம்


குறிப்புகள்:


முந்திரிப்பருப்புகளுக்கு பதிலாக பொட்டுக்கடலையோ / கசகசாவோ சேர்த்துக் கொள்ளலாம்


விருப்பப்பட்டால்வேகவைத்த காய்கறிகள் / பன்னீர் சேர்த்தும் இதே முறையில் சால்னா தயாரிக்கலாம்


இந்த பிளைன் சால்னாவை பரோட்டாரொட்டி/புல்காஇட்லி /தோசைகளோடு சாப்பிட மிகவும் அருமையாகஇருக்கும்

No comments:

Post a Comment