Monday, December 21, 2020

அவல் பாயசம் (Aval payasam/ poha kheer )

 


அவல் பாயசம் :


தேவையான பொருள்கள் :


அவல் (கெட்டி அவல் : 3/4 கப் 

பால் : 1 லிட்டர் 

சர்க்கரை : 1/2 கப் 

நெய் : 3  மேஜைக்கரண்டி 

குங்குமப்பூ : சிறிது (விருப்பப்பட்டால்)

ஏலக்காய் பொடி : 1/4 தேக்கரண்டி 

முந்திரிப்பருப்பு : 5 


செய்முறை :


முதலில்ஒரு பாத்திரத்தில் அவலை போட்டுஅதனை நன்றாக நீரில் கழுவி எடுத்துக் கொள்ளவும்


பின்னர் கழுவிய அவலைஉடனேயே ஒரு துண்டுதுணியின் மீது போட்டு அவலில் இருக்கும் ஈரப்பதத்தை நீக்கிஎடுத்து வைத்துக்கொள்ளவும்.


ஒரு வாணலியில்சிறிது நெய் சேர்த்துமுந்திரிப்பருப்புகளை நன்றாக போன் நிறமாக வறுத்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.


பின்னர் அதே வாணலியில் மீண்டும் சிறிது நெய் சேர்த்து அதில் கழுவி உலர்த்தி வைத்திருக்கும் அவலைசேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும்.


பின்னர் இதனோடு பாலைச் சேர்த்துஇந்த பாலிலேயே அவலை ஒரு 10 - 15 நிமிடங்கள் வரை நன்றாக வேகவைத்து கொள்ளவும்.


பின்னர் சர்க்கரையை அவல் மற்றும் பாலோடு கலந்துஅது நன்றாக கரைந்த பின்னர் அதனோடு குங்குமப்பூகலந்த பாலை சேர்த்து இறக்கிஏலக்காய் பொடி மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்புகளை சேர்த்துஅலங்கரித்தால்சுவையான அவல் பால் பாயசம் தயார்


குறிப்புகள்: 



வெள்ளை/சிகப்பு கெட்டி அவலில் மட்டுமே இதனை தயாரிக்கவும்


சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்தும் இதே முறையில் தயாரிக்கலாம்வெள்ளம் சேர்க்கும் மின்னார்வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி பின்னர் பால் அவல் கலவையோடு சேர்க்கவும்.


இந்த பாயசத்தை இளம் சூடாகவோ / குளிர் சாதனப்பெட்டியில் வைத்து குளிர்ச்சியாகவோ பரிமாறலாம்.


முந்திரிப்பருப்புகளுக்கு பதிலாக எந்த பருப்புகளையும் மற்றும் கிஸ்மிஸ் /தேங்காய் துண்டங்களையோ கூடநெய்யில் வறுத்து பாயசத்தில் சேர்க்கலாம்


No comments:

Post a Comment