Saturday, September 16, 2023

கோதுமை மாவு வாழைப் பழ கேக் ( Eggless Banana Cake with wheat flour)

 கோதுமை மாவு வாழைப் பழ கேக்:




தேவையான பொருள்கள் :

 

கோதுமை மாவு - ஒரு கப்

 

பூவன் பழம் - 2

 

சர்க்கரை - 1 /2 கப்

 

எண்ணெய் - 1/4 கப்

 

தயிர் - 1/8 கப்

 

பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி

 

பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி

 

வெண்ணிலா எசென்ஸ் /பவுடர்  - 1/2 தேக்கரண்டி

 

முந்திரிப் பருப்பு : சிறிது

 

உப்பு - ஒரு சிட்டிகை

 

செய்முறை :

 

ஓவனை 180 டிக்ரீஸ்க்கு முதலில் சூடாக்கி கொள்ளவும்.

 

ஒரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

 

பின்னர்அதனுடன் சர்க்கரைஎண்ணெய் வெண்ணிலா எசென்ஸ் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

 

இதனுடன் கோதுமை மாவுபேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

 

இந்த கலவையை எண்ணெய் தடவிய ஒரு பேக்கிங் பேனிற்கு மாற்றி அதன் மீது முந்திரிப் பருப்புகள் சேர்த்து அலங்கரித்துபின்னர் 180  டிஃகிரீசில் 30 - 35  நிமிடங்கள் பேக் செய்தால் சுவையான வாழைப்பழ கேக் தயார்.

 

குறிப்பு:

 

பேக்கிங் செய்வதற்கு முன்னர் ஓவனை முதலில் ஒரு பத்து நிமிடங்கள் வரை கண்டிப்பாக சூடாக்க வேண்டும்.இவ்வாறு செய்வதால் ஓவனின் வெப்பநிலை பேக்கிங் செய்வதற்கு தேவையான அளவிற்கு வந்துவிடும். அதாவதுதோசைக் கல்லை முதலில் சூடாக்கிய பின்னர் தானே தோசைகள் செய்வோம் அதே முறை தான்.

 

கோதுமை மாவிற்கு பதிலாக மைதா மாவிலும் இதே முறையில் கேக் செய்யலாம்.

 

இந்த கேக்கிற்கு பொடித்த சர்க்கரை தேவை இல்லை. நான் சாதாரணமாக உபயோகிக்கும் சர்க்கரை தான் சேர்த்து செய்தேன்.

 

எண்ணெய் -  தங்களுக்கு விருப்பமான ஆனால் வாசனை இல்லாத எண்ணெய்யாக பயன்படுத்தலாம்.

 

முந்திரிக்கு பதிலாக விருப்பமான  எந்த பருப்பையும் சேர்க்கலாம்.

 

கேக்  நன்றாக ஆறியதும் தான் துண்டுகள் போட வேண்டும்

No comments:

Post a Comment