Showing posts with label Breakfast Recipe. Show all posts
Showing posts with label Breakfast Recipe. Show all posts

Saturday, September 16, 2023

கடலை கறி (Kadalai kari/curry )

 கடலை கறி:


தேவையான பொருள்கள் :

 

கருப்பு கொண்டக்கடலை : கப் 

சின்ன வெங்காயம் : 5-8

பச்சை மிளகாய் : 2-3

உப்பு : தேவையான அளவு 

தண்ணீர் : தேவைக்கேற்ப 

 

வறுத்து அரைப்பதற்கு :

 

வெங்காயம் : 1

தக்காளி : 1

துருவிய தேங்காய் : 1/4 கப் 

துருவிய இஞ்சி : துண்டு 

நறுக்கிய பூண்டு : 

பட்டை : 1/4 இன்ச் 

ஏலக்காய் : 1-2 

கிராம்பு : 1-2

சோம்பு : தேக்கரண்டி

மஞ்சள் பொடி :  1/4 தேக்கரண்டி 

மிளகாய் பொடி : தேக்கரண்டி 

தனியா / கொத்தமல்லி பொடி : தேக்கரண்டி 

கரம் மசாலா : 1/2 தேக்கரண்டி 

கருவேப்பிலை : 5-8 இலைகள் 

தேங்காய் எண்ணெய் : மேஜைக்கரண்டி 

 

தாளிப்பதற்கு : 

 

தேங்காய் எண்ணெய் : தேக்கரண்டி 

கடுகு : 1/2 தேக்கரண்டி 

உளுத்தம்பருப்பு : 1/2 தேக்கரண்டி 

காய்ந்த மிளகாய் : 1-2 

கருவேப்பிலை : சிறிது 

 

செய்முறை :

 

முதலில் கொண்டைக்கடலையை அது மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து முதல் 12 மணி நேரங்கள் ஊறவைத்துபின்னர் அதனை குக்கரில் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

 

ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றிஅதில் வறுக்க கொடுத்துள்ள பொருள்களை ஒவ்வொன்றாகசேர்த்து நன்றாக வதக்கிய பின்னர்அதனை நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

 

ஒரு அடி கனமான வாணலியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களைசேர்த்து தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

 

பின்னர் இதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின்னர் வேக வைத்துஎடுத்துள்ள கடலையை சேர்த்து கலந்து கொள்ளவும். 

 

பின்னர் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்துஒரு 10 நிமிடங்கள் மூடி போட்டு கொதிக்க வைத்துஇறக்கினால் சுவையான கடலைக் கறி தயார். 

 

குறிப்புகள் :

 

இந்த முறையில் செய்வதற்கு காலா சென்னா என்று அழைக்கப்படும் கருப்பு கொண்டைக்கடலையை தான்பயன்படுத்துவார்கள். ஆனால்விருப்பப்பட்டால் வெள்ளை கடலையிலும் செய்யலாம்.

 

தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி செய்யும் சுவையும் மனமும் அருமையாக இருக்கும்.

 

விருப்பப்பட்டால் சிறிது தேங்காய் பாலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

 

இதனோடு புட்டுஇடியாப்பம்ஆப்பம்சப்பாத்திரொட்டி மற்றும் புல்காவுடன் சேர்த்து சாப்பிடலாம்.

 




Thursday, December 23, 2021

கம்பு தோசை (Kambu dosai)

 கம்பு தோசை : 



தேவையான பொருள்கள் : 


கம்பு : 1கப் 

இட்லி அரிசி : 1கப் 

உளுந்து : 1/2 கப் 

வெந்தயம் : 1/2 தேக்கரண்டி 


எல்லாம் ஒன்றாகச் சேர்த்து 3-4 மணி நேரங்கள் ஊற வைத்துமிக்ஸி / கிரைண்டரில் தோசை மாவு பதத்திற்குஅரைத்து, 4 - 6 மணி நேரங்கள் வரை புளிக்க வைத்து தோசைகளாக வார்த்தால்சுவையானவாசனையானகம்பு தோசை தயார்.


குறிப்புகள் : 


கம்பிற்கு பதிலாக மற்ற சிறு தானியங்களான வரகுசாமை போன்றவைகளையும் சேர்த்து இதே முறையில் சிறுதானிய தோசைகள் தயாரிக்கலாம்


கம்புத் தோசையோடு காரமான வெங்காய சட்னி வைத்து பரிமாறலாம்.

மாதுளம் பழம் தயிர் ஸ்மூத்தி (Pomegranate Curd smoothie)

 மாதுளம் பழம் தயிர் ஸ்மூத்தி 





தேவையான பொருள்கள் :


மாதுளம்பழ முத்துக்கள் : 1.5 கப் 

கெட்டியான வெண்ணிலா பிளவோர்ட் கிரீக் ஸ்டைல் தயிர் / கெட்டியான சாதாரண தயிர் : 1 கப் 

ஊறவைத்த சப்ஜா விதைகள் : 1 மேஜைக்கரண்டி 


செய்முறை : 


ஒரு ஜூஸரில் / மிக்ஸி ஜாரில் மாதுளம்பழ முத்துக்கள் மற்றும் தயிர் சேர்த்து நன்றாக அடித்து ஜூஸ் செய்துசப்ஜா விதைகள் சேர்த்து அலங்கரித்தால் சுவையான மாதுளம் பழ ஸ்மூத்தி தயார் 


குறிப்புகள் : 


கிரீக் ஸ்டைல் யோகர்ட்டிற்கு பதிலாக சாதாரண கெட்டித் தயிர் சேர்த்தும் தயாரிக்கலாம் 

இஞ்சி ஸ்குவாஷ் சேர்த்த ஆரஞ்சு ஜூஸ் (Ginger Squash mixed with orange juice)

 இஞ்சி ஸ்குவாஷ் சேர்த்த ஆரஞ்சு ஜூஸ் : 





இஞ்சி ஸ்குவாஷ் செய்ய தேவையான பொருள்கள் : 


இஞ்சி சாறு : கப் 

வெல்லம் : கப் 

தண்ணீர் : கப் 


இஞ்சி ஸ்குவாஷ் செய்யும் முறை : 


முதலில்இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கிஒரு மிக்ஸி ஜாரிலிட்டு நன்றாக அரைத்து வடிகட்டி இஞ்சிச்சாறு எடுத்து ஒரு நிமிடங்கள் முதல் நிமிடங்கள் வரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும் 


இந்த சாரின் அடியில்வெள்ளையாக படியும்அதை எடுத்து விட்டு varum இஞ்சிச் சாறை மட்டும் தனியாகஎடுத்து வைத்துக் கொள்ளவும் 


ஒரு அடி கனமான வாணலியில்ஒரு வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்துவெல்லத்தை நன்றாக கரைத்துவடிகட்டி எடுத்துக் கொள்ளவும்


மீண்டும் வெல்லத்தை மிதமான தீயில்ஒரு ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும் 


வெல்லம் ஓரளவு கொதித்தவுடன் அதனுடன் எடுத்து வைத்துள்ள இஞ்சிச் சாறை சேர்த்து ஒரு இரண்டு அல்லதுமூன்று நிமிடங்கள் மட்டும் கொதிக்க வைத்து எடுத்து நன்றாக ஆற வைத்து எடுத்தால் சுவையான இஞ்சிஸ்குவாஷ் தயார் 


இதை நாட்கள் வரை குளிர் சாதனப் பெட்டியில் வைத்து உபயோகிக்கலாம் 


ஆரஞ்சு ஜூஸ் செய்ய தேவையான பொருள்கள் 


ஆரஞ்சு : பெரியது

இஞ்சி ஸ்குவாஷ் : கப் 

ஊற வாய்த்த சப்ஜா விதைகள் : தேக்கரண்டி 


செய்முறை : 


முதலில் ஆரஞ்சு பழத்தை பிழிந்து அதிலிருந்து ஆரஞ்சு ஜூஸ் எடுத்துக்கொள்ளவும் 


ஒரு கப்பில் முக்கால் பாகம் ஆரஞ்சு ஜூஸ் ஊற்றிமீதி கால் கப் இஞ்சி ஸ்குவாஷ் சேர்த்து இறுதியாக சப்ஜாவிதைகள் சேர்த்து கலந்தால் சுவையான ஆரஞ்சு ஜூஸ் தயார் 


குறிப்புகள் : 


நன்றாக ஆறிய இஞ்சி ஸ்குவாஷுடன் ஒரு கால் கப் எலுமிச்சை சாறு சேர்த்தும் கலந்து குளிர் சாதனப்பெட்டியில் வைத்து இதே முறையில் உபயோகிக்கலாம்


தேவைப்படும் போதுஒரு பங்கு ஸ்குவாஷ் மூன்று பங்கு தண்ணீர் சேர்த்துக் கலந்தால்உடனடியாக ஜூஸ்தயார் 


ஆரஞ்சு ஜூஸிற்கு பதிலாக தர்பூசணி / மாதுளம்பழம்எலுமிச்சம்பழம் போன்ற எல்லா விதமான பழச்சாறுடனும்கலந்து ஜூஸ் தயாரிக்கலாம் 


வெல்லத்திற்கு பதிலாகசர்க்கரையோநாட்டுச் சர்க்கரையோஅல்லது தங்களுக்கு விருப்பமானசுவையூட்டிகளை சேர்த்து இதே முறையில் ஸ்குவாஷ் தயாரிக்கலாம் 


சப்ஜா விதைகள் என்பது நாட்டு மருந்துக் கடைகளில் இருக்கும் திருநீற்றுப்பச்சை செடியின் விதைகள் தான்இது உடம்பிற்கு மிகவும் குளிர்ச்சி தருமாகையால்சளிஇருமல்தும்மல் / போன்ற பிரச்சனைகள்இருப்பவர்கள் தவிர்த்து விடுதல் நல்லது  

அவல் காய்கறி உப்புமா (Poha/ Aval upma)

 அவல் காய்கறி உப்புமா 




தேவையான பொருள்கள் :


விருப்பமான நறுக்கிய காய்கறிகள் ( கேரட்பீன்ஸ்கார்ன் ) : 1 கப் 

கெட்டி அவல் : 1 கப் 

பச்சை மிளகாய் : 1-2

சின்ன வெங்காயம் : 4-5 

மஞ்சள் பொடி : 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் : ஒரு சிட்டிகை 

உப்பு : தேவையான அளவு 

கொத்தமல்லித் தளைகள் : சிறிது 

எலுமிச்சம் பழச்சாறு : 1 தேக்கரண்டி 


தாளிப்பதற்கு : 


எண்ணெய் : 1மேஜைக்கரண்டி 

கடுகு : 1 தேக்கரண்டி 

உளுந்து : 1தேக்கரண்டி 

வேர்க்கடலை : 1 மேஜைக்கரண்டி 

சீரகம் : 1/2 தேக்கரண்டி 

கருவேப்பிலை : சிறிதளவு 


செய்முறை : 


அவலை தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக கழுவி தண்ணீரை வடித்துவிட்டுஅதில் மஞ்சள்பொடிஉப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து கலந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்


ஒரு வாணலியில்எண்ணெய் சேர்த்துதாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து தாளித்த பின்பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவும்.


வெங்காயம் வதங்கிய பின்னர்நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கி கொள்ளவும்.  

காய்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி காய்கறிகளை வேக வைத்துக் கொள்ளவும்.


காய்கள் வெந்தவுடன் நனைத்து வைத்துள்ள அவலை சேர்த்துஓரிரு நிமிடங்கள் காய்களோடு சேர்ந்து வரும்வரை வதக்கிய பின் கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான அவல் காய்கறி உப்புமா தயார்


சிறிது ஆறியபின்னர் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பரிமாறவும் 


குறிப்புகள்


அவலில்சில நேரங்களில்மிகவும் சிறிய பூச்சிகள் இருக்கலாம்ஆகையால் அவலை நன்றாக கழுவிய பின்னர்தான் உபயோகிக்க வேண்டும்


அவலை தண்ணீர் சேர்த்து ஊற வைக்க தேவையில்லைநனைத்தாலே போதுமானது.


விருப்பமான காய்கறிகளை சேர்த்தோ அல்லது காய்கறிகள் இல்லாமலோ இதே முறையில் உப்புமாதயாரிக்கலாம்.


சிறிய வெங்காயத்திற்கு பதிலாக பெரிய வெங்காயம் சேர்த்தும் செய்யலாம்


கெட்டியான அவலில் தான் இந்த உப்புமா தயாரிக்க வேண்டும்நான் சிகப்பு கெட்டி அவல் (சம்பா அவல்உபயோகித்து இந்த உப்புமா தயாரித்துள்ளேன்வெள்ளை கெட்டி அவலிலும்இதே முறையில் உப்புமாதயாரிக்கலாம்