Showing posts with label north Indian recipe. Show all posts
Showing posts with label north Indian recipe. Show all posts

Saturday, September 16, 2023

பேரிச்சம்பழம் அண்ட் நட்ஸ் லட்டு ( Dates and nuts laddu / dry fruits laddu )

 பேரிச்சம்பழம் அண்ட் நட்ஸ் லட்டு:



தேவையான பொருள்கள் : 

 

பேரிச்சம்பழம் (விதை நீக்கியது) : கப்

முந்திரி பருப்புபாதாம் பருப்புபிஸ்தா & வால்நட் : கப் (எல்லாம் சேர்த்து) 

கிஸ்மிஸ் / உலர்ந்த திராட்சை : தேக்கரண்டி 

டெஸிகேட்டட் தேங்காய் : 1 - 2 மேஜைக்கரண்டி 

நெய் : தேக்கரண்டி ( விருப்பப்பட்டால்) 

 

செய்முறை :

 

ஒரு வாணலியில், 1/2 தேக்கரண்டி நெய் சேர்த்துகிஸ்மிஸ் மற்றும் எல்லா பருப்புகளையும் சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

 

மீண்டும் அதே வாணலியில்மீதமிருக்கும் 1/2 தேக்கரண்டி நெய் மற்றும் பேரிச்சம்பழம் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

 

சிறிது ஆறியபின்னர்ஒரு மிக்ஸி ஜாரில் கிஸ்மிஸ்டெஸ்ஸிகேட்டட் தேங்காய் மற்றும் பருப்புகளைச் சேர்த்து ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.

 

பின்னர் இதனுடன்பேரிச்சம் பழம் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும். 

 

பின்னர்இந்த கலவையினை எடுத்து கைகளால் லட்டுகளாக உருட்டிய பின்னர்விருப்பப்பட்டால் டெஸ்ஸிகேட்டட் தேங்காயை மேலே தூவி அலங்கரித்தால்சுவையான பேரிச்சம்பழம் மற்றும் நட்ஸ் லட்டு தயார்.

 

குறிப்புகள் :

 

விருப்பமான பருப்புகள் மட்டுமின்றி விருப்பமான விதைகளையும் ( வெள்ளரி விதைபூசணிக்காய் விதை ) உலர் பழங்களையும் (apricot, fig ) போன்றவைகள் சேர்த்தும் இதே முறையில் தயாரிக்கலாம். 

 

கசகசா கூட ஒரு தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளலாம். (இங்கே அது தடை செய்யப்பட்ட ஒரு பொருள் ஆகையால் நான் சேர்க்கவில்லை) 

 

ஒரு கப் பேரீச்சம்பழத்திற்கு ஒரு கப் பருப்புகள் மற்றும் விதைகள் சேர்த்து தயாரிக்கும் பொழுதுதனியாக எந்த சுவையூட்டிகளையும் சேர்க்க தேவையில்லை. பேரீச்சம்பழத்தில் இருக்கும் இனிப்பு சுவையே போதுமானது. 

 

நெய் சேர்க்காமலும் பருப்புகள் மற்றும் பேரீச்சம்பழத்தினை உலர் வறுவலாக (dry roast) வறுத்தும் இதே முறையில் லட்டுகள் தயாரிக்கலாம். 

 

பருப்புகள் மற்றும் பழத்தை வறுக்காமல் பருப்புகளை தனியாக மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்துபின்னர் பழத்தை மிக்ஸியில் தனியாக அரைத்து எடுத்துக் கொண்டு,  பின்னர் ஒரு வாணலியில் நெய் சேர்த்து முதலில் பருப்புகள்கிஸ்மிஸ்தேங்காய் சேர்த்து கொஞ்சம் வறுத்த பின்னர் அரைத்த பேரிச்சம்பழம் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கினால்நன்றாக திரண்டு வரும். பின்னர் அதனை லட்டுகளாக பிடித்துக் கொள்ளலாம். இந்த முறையிலும் இந்த லட்டுகளை தயாரிக்கலாம். 

 

வறுத்த பருப்புகளை (already roasted nuts and  seeds) உபயோகிப்பதாக இருந்தால்இது ஒரு சமைக்கவே தேவையில்லாத ஒரு நோ குக் ரெசிபி. ஒரு மிக்ஸி ஜாரில் நட்ஸுகளை சேர்த்து ஒன்றிரண்டாக பொடித்த பின்னர்பேரீச்சம்பழத்தை மிக்ஸியில் சேர்த்து மீண்டும் ஒரு சுற்று சுற்றி எடுத்துலட்டுகளாக பிடித்தும் தயாரிக்கலாம்.

 

டெஸிகேட்டட் தேங்காய்க்கு பதிலாக வறுத்த வெள்ளை எள்ளை இந்த லட்டுகளின் மேலே தூவி அலங்கரிக்கலாம்.

Thursday, December 23, 2021

அவல் காய்கறி உப்புமா (Poha/ Aval upma)

 அவல் காய்கறி உப்புமா 




தேவையான பொருள்கள் :


விருப்பமான நறுக்கிய காய்கறிகள் ( கேரட்பீன்ஸ்கார்ன் ) : 1 கப் 

கெட்டி அவல் : 1 கப் 

பச்சை மிளகாய் : 1-2

சின்ன வெங்காயம் : 4-5 

மஞ்சள் பொடி : 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் : ஒரு சிட்டிகை 

உப்பு : தேவையான அளவு 

கொத்தமல்லித் தளைகள் : சிறிது 

எலுமிச்சம் பழச்சாறு : 1 தேக்கரண்டி 


தாளிப்பதற்கு : 


எண்ணெய் : 1மேஜைக்கரண்டி 

கடுகு : 1 தேக்கரண்டி 

உளுந்து : 1தேக்கரண்டி 

வேர்க்கடலை : 1 மேஜைக்கரண்டி 

சீரகம் : 1/2 தேக்கரண்டி 

கருவேப்பிலை : சிறிதளவு 


செய்முறை : 


அவலை தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக கழுவி தண்ணீரை வடித்துவிட்டுஅதில் மஞ்சள்பொடிஉப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து கலந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்


ஒரு வாணலியில்எண்ணெய் சேர்த்துதாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து தாளித்த பின்பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவும்.


வெங்காயம் வதங்கிய பின்னர்நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கி கொள்ளவும்.  

காய்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி காய்கறிகளை வேக வைத்துக் கொள்ளவும்.


காய்கள் வெந்தவுடன் நனைத்து வைத்துள்ள அவலை சேர்த்துஓரிரு நிமிடங்கள் காய்களோடு சேர்ந்து வரும்வரை வதக்கிய பின் கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான அவல் காய்கறி உப்புமா தயார்


சிறிது ஆறியபின்னர் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பரிமாறவும் 


குறிப்புகள்


அவலில்சில நேரங்களில்மிகவும் சிறிய பூச்சிகள் இருக்கலாம்ஆகையால் அவலை நன்றாக கழுவிய பின்னர்தான் உபயோகிக்க வேண்டும்


அவலை தண்ணீர் சேர்த்து ஊற வைக்க தேவையில்லைநனைத்தாலே போதுமானது.


விருப்பமான காய்கறிகளை சேர்த்தோ அல்லது காய்கறிகள் இல்லாமலோ இதே முறையில் உப்புமாதயாரிக்கலாம்.


சிறிய வெங்காயத்திற்கு பதிலாக பெரிய வெங்காயம் சேர்த்தும் செய்யலாம்


கெட்டியான அவலில் தான் இந்த உப்புமா தயாரிக்க வேண்டும்நான் சிகப்பு கெட்டி அவல் (சம்பா அவல்உபயோகித்து இந்த உப்புமா தயாரித்துள்ளேன்வெள்ளை கெட்டி அவலிலும்இதே முறையில் உப்புமாதயாரிக்கலாம்

பாவ் பாஜி (Pav Bhaji )

 பாவ் பாஜி :






தேவையான பொருள்கள் : 


பாஜி செய்வதற்கு : 


வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு  : 1 கப்

பச்சை பட்டாணி : 1/4 கப் 

காலிப்ளவர் : 1/4 கப் 

பொடியாக நறுக்கிய குடைமிளகாய் : 1/4 கப் 

பொடியாக நறுக்கிய வெங்காயம் : 2 

பொடியாக நறுக்கிய தக்காளி : 3

வெண்ணெய் : 2 மேஜைக்கரண்டி 

இஞ்சி பூண்டு விழுது : 1 தேக்கரண்டி 

காஷ்மீரி மிளகாய் பொடி : 1 தேக்கரண்டி 

மஞ்சள் பொடி : 1/4 தேக்கரண்டி 

பாவ் பாஜி மசாலா பொடி : 1.5 மேஜைக்கரண்டி 

கசூரி மேத்தி (காய்ந்த வெந்தய கீரை இலைகள்) : ¾ தேக்கரண்டி 

உப்பு : தேவையான அளவு 


பாவ் - டோஸ்ட் செய்வதற்கு : 


பாவ் பன் / பிரட் துண்டுகள் : 4 to 6 

வெண்ணெய் : 1 மேஜைக்கரண்டி 

பாவ் பாஜி மசாலா பொடி : ½ தேக்கரண்டி 


அலங்கரிப்பதற்கு : 


எலுமிச்சை : 1

பொடியாக நறுக்கிய வெங்காயம் : 2 மேஜைக்கரண்டி 

கொத்தமல்லித் தலைகள் :  : 2 மேஜைக்கரண்டி

வெண்ணெய் : 1 மேஜைக்கரண்டி 



செய்முறை :


பாஜி செய்முறை :


முதலில் குக்கரில் ஒரு மேஜைக்கரண்டி வெண்ணெய் சேர்த்துஅதில் குடை மிளகாய் தவிர்த்து மீதி இருக்கும்எல்லா காய்கறிகளையும் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுத்து நன்றாக மசித்துகொள்ளவும் 


ஒரு அடி கனமான வாணலியில்ஒரு மேஜைக்கரண்டி வெண்ணெய் சேர்த்துவெங்காயம் சேர்த்து வதக்கிகொள்ளவும்


பின்னர் இதனுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும் 


பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக்கொள்ளவும் 


பின்னர் குடை மிளகாய் சேர்த்து சிறிது வதக்கிய பின்னர்பாவ் பாஜி மசாலாமிளகாய் பொடிமஞ்சள் பொடிமற்றும் இந்த மசாலாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின்னர் வேக வைத்துமசித்து வைத்துள்ள காய்கறிகள் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து வரும் வரை வதக்கிக்கொள்ளவும் 


இதனுடன் கசூரி மேத்தி சேர்த்து இறக்கினால் சுவையான பாவ் பாஜி மசாலா தயார் 


பாவ் பன் டோஸ்ட் செய்முறை :


பாவ் பன்னை இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ளவும்

வெண்ணெய்யை சூடாக்கிய பின்னர்அதில் சிறிது பாவ் பாஜி மசாலா பொடி சேர்த்து அதன் மேல் வெட்டிவைத்துள்ள பன்னை வைத்து ஓரிரு நிமிடங்கள் டோஸ்ட் செய்தால் பாவ் பன் தயார் 


பாவ்  பாஜி பரிமாறும் முறை : 

நறுக்கிய வெங்காயம்தக்காளிஎலுமிச்சம் பழம் மற்றும் வெண்ணெய் சேர்த்து சூடாக பாவ் பாஜி மசாலாவைபரிமாறலாம்


குறிப்புகள்


பாவ் பாஜி மசாலா இல்லையென்றால்கரம் மசாலா மற்றும் சிகப்பு மிளகாய் பொடி சேர்த்தும் இதே முறையில்தயாரிக்கலாம்


பாவ் பன்கள் இல்லையென்றால்பிரட் வைத்தும் இதே முறையில் தயாரிக்கலாம் 


பொதுவாக துரித உணவகத்தில்காலிப்ளவர் சேர்ப்பதில்லை


இந்த பாஜியை தோசையின் நடுவினில் வைத்து தோசை வார்த்து எடுத்தால் சுவையான பாவ் பாஜி மசாலாதோசை தயார் 


இதே பாஜியில் காய்களை மசிக்காமல் அப்படியே பரிமாறினால் கடா பாஜி மசாலா தயார்