Showing posts with label juice recipe. Show all posts
Showing posts with label juice recipe. Show all posts

Thursday, December 23, 2021

இஞ்சி ஸ்குவாஷ் சேர்த்த ஆரஞ்சு ஜூஸ் (Ginger Squash mixed with orange juice)

 இஞ்சி ஸ்குவாஷ் சேர்த்த ஆரஞ்சு ஜூஸ் : 





இஞ்சி ஸ்குவாஷ் செய்ய தேவையான பொருள்கள் : 


இஞ்சி சாறு : கப் 

வெல்லம் : கப் 

தண்ணீர் : கப் 


இஞ்சி ஸ்குவாஷ் செய்யும் முறை : 


முதலில், இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு மிக்ஸி ஜாரிலிட்டு நன்றாக அரைத்து வடிகட்டி இஞ்சிச்சாறு எடுத்து ஒரு நிமிடங்கள் முதல் நிமிடங்கள் வரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும் 


இந்த சாரின் அடியில், வெள்ளையாக படியும், அதை எடுத்து விட்டு varum இஞ்சிச் சாறை மட்டும் தனியாகஎடுத்து வைத்துக் கொள்ளவும் 


ஒரு அடி கனமான வாணலியில், ஒரு வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து, வெல்லத்தை நன்றாக கரைத்துவடிகட்டி எடுத்துக் கொள்ளவும்


மீண்டும் வெல்லத்தை மிதமான தீயில், ஒரு ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும் 


வெல்லம் ஓரளவு கொதித்தவுடன் அதனுடன் எடுத்து வைத்துள்ள இஞ்சிச் சாறை சேர்த்து ஒரு இரண்டு அல்லதுமூன்று நிமிடங்கள் மட்டும் கொதிக்க வைத்து எடுத்து நன்றாக ஆற வைத்து எடுத்தால் சுவையான இஞ்சிஸ்குவாஷ் தயார் 


இதை நாட்கள் வரை குளிர் சாதனப் பெட்டியில் வைத்து உபயோகிக்கலாம் 


ஆரஞ்சு ஜூஸ் செய்ய தேவையான பொருள்கள் 


ஆரஞ்சு : பெரியது

இஞ்சி ஸ்குவாஷ் : கப் 

ஊற வாய்த்த சப்ஜா விதைகள் : தேக்கரண்டி 


செய்முறை : 


முதலில் ஆரஞ்சு பழத்தை பிழிந்து அதிலிருந்து ஆரஞ்சு ஜூஸ் எடுத்துக்கொள்ளவும் 


ஒரு கப்பில் முக்கால் பாகம் ஆரஞ்சு ஜூஸ் ஊற்றி, மீதி கால் கப் இஞ்சி ஸ்குவாஷ் சேர்த்து இறுதியாக சப்ஜாவிதைகள் சேர்த்து கலந்தால் சுவையான ஆரஞ்சு ஜூஸ் தயார் 


குறிப்புகள் : 


நன்றாக ஆறிய இஞ்சி ஸ்குவாஷுடன் ஒரு கால் கப் எலுமிச்சை சாறு சேர்த்தும் கலந்து குளிர் சாதனப்பெட்டியில் வைத்து இதே முறையில் உபயோகிக்கலாம்


தேவைப்படும் போது, ஒரு பங்கு ஸ்குவாஷ் மூன்று பங்கு தண்ணீர் சேர்த்துக் கலந்தால், உடனடியாக ஜூஸ்தயார் 


ஆரஞ்சு ஜூஸிற்கு பதிலாக தர்பூசணி / மாதுளம்பழம்/ எலுமிச்சம்பழம் போன்ற எல்லா விதமான பழச்சாறுடனும்கலந்து ஜூஸ் தயாரிக்கலாம் 


வெல்லத்திற்கு பதிலாக, சர்க்கரையோ/ நாட்டுச் சர்க்கரையோ/ அல்லது தங்களுக்கு விருப்பமானசுவையூட்டிகளை சேர்த்து இதே முறையில் ஸ்குவாஷ் தயாரிக்கலாம் 


சப்ஜா விதைகள் என்பது நாட்டு மருந்துக் கடைகளில் இருக்கும் திருநீற்றுப்பச்சை செடியின் விதைகள் தான்இது உடம்பிற்கு மிகவும் குளிர்ச்சி தருமாகையால், சளி/ இருமல்/ தும்மல் / போன்ற பிரச்சனைகள்இருப்பவர்கள் தவிர்த்து விடுதல் நல்லது  

Tuesday, December 29, 2020

ஏபிசி ஜூஸ் (ABC juice)

 ஏபிசி ஜூஸ் :




தேவையான பொருள்கள் :

ஆப்பிள் : 1
கேரட் : 1
பீட்ரூட் : 1/2
தேன் : 1 தேக்கரண்டி

விருப்பப்பட்டால் :

இஞ்சி : ஒரு சிறு துண்டு
எலுமிச்சம் பழ சாறு : 1 தேக்கரண்டி
பிளாக் உப்பு : ஒரு சிட்டிகை

செய்முறை :

முதலில் கேரட் மற்றும் பீட்ரூட்டை தோல் நீக்கி துருவி எடுத்துக் கொள்ளவும்.

ஆப்பிளை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சி சேர்ப்பதாக இருந்தால், அதனையும் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய கேரட், பீட்ரூட் மற்றும் நறுக்கிய ஆப்பிள் மேலும் இஞ்சி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக ஜூஸாக அடித்து கொள்ளவும்.

விருப்பப்பட்டால் சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குளிர் சாதனப் பெட்டியில் ஒரு அரை மணி நேரம் வைத்து எடுத்தால் சுவையான ஏபிசி ஜூஸ் தயார்.

குறிப்புகள் :

இந்த ஜூஸில் ஐஸ் கட்டிகள் கலந்தும் அருந்தலாம்.

தேனோ அல்லது வேறு எந்த சுவையூட்டியோ சேர்க்காமலும் அருந்தலாம்.

இஞ்சி சேர்ப்பது அவரவர் விருப்பம்.

பிளாக் சால்ட் ஒரு பின்ச் சேர்த்தாலும் சுவையாக இருக்கும்.

குளிர் சாதனப் பெட்டியில் வைக்காமல் அப்டியே அருந்தலாம்.