Showing posts with label dinner recipe. Show all posts
Showing posts with label dinner recipe. Show all posts

Thursday, December 23, 2021

கம்பு தோசை (Kambu dosai)

 கம்பு தோசை : 



தேவையான பொருள்கள் : 


கம்பு : 1கப் 

இட்லி அரிசி : 1கப் 

உளுந்து : 1/2 கப் 

வெந்தயம் : 1/2 தேக்கரண்டி 


எல்லாம் ஒன்றாகச் சேர்த்து 3-4 மணி நேரங்கள் ஊற வைத்துமிக்ஸி / கிரைண்டரில் தோசை மாவு பதத்திற்குஅரைத்து, 4 - 6 மணி நேரங்கள் வரை புளிக்க வைத்து தோசைகளாக வார்த்தால்சுவையானவாசனையானகம்பு தோசை தயார்.


குறிப்புகள் : 


கம்பிற்கு பதிலாக மற்ற சிறு தானியங்களான வரகுசாமை போன்றவைகளையும் சேர்த்து இதே முறையில் சிறுதானிய தோசைகள் தயாரிக்கலாம்


கம்புத் தோசையோடு காரமான வெங்காய சட்னி வைத்து பரிமாறலாம்.

பாவ் பாஜி (Pav Bhaji )

 பாவ் பாஜி :






தேவையான பொருள்கள் : 


பாஜி செய்வதற்கு : 


வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு  : 1 கப்

பச்சை பட்டாணி : 1/4 கப் 

காலிப்ளவர் : 1/4 கப் 

பொடியாக நறுக்கிய குடைமிளகாய் : 1/4 கப் 

பொடியாக நறுக்கிய வெங்காயம் : 2 

பொடியாக நறுக்கிய தக்காளி : 3

வெண்ணெய் : 2 மேஜைக்கரண்டி 

இஞ்சி பூண்டு விழுது : 1 தேக்கரண்டி 

காஷ்மீரி மிளகாய் பொடி : 1 தேக்கரண்டி 

மஞ்சள் பொடி : 1/4 தேக்கரண்டி 

பாவ் பாஜி மசாலா பொடி : 1.5 மேஜைக்கரண்டி 

கசூரி மேத்தி (காய்ந்த வெந்தய கீரை இலைகள்) : ¾ தேக்கரண்டி 

உப்பு : தேவையான அளவு 


பாவ் - டோஸ்ட் செய்வதற்கு : 


பாவ் பன் / பிரட் துண்டுகள் : 4 to 6 

வெண்ணெய் : 1 மேஜைக்கரண்டி 

பாவ் பாஜி மசாலா பொடி : ½ தேக்கரண்டி 


அலங்கரிப்பதற்கு : 


எலுமிச்சை : 1

பொடியாக நறுக்கிய வெங்காயம் : 2 மேஜைக்கரண்டி 

கொத்தமல்லித் தலைகள் :  : 2 மேஜைக்கரண்டி

வெண்ணெய் : 1 மேஜைக்கரண்டி 



செய்முறை :


பாஜி செய்முறை :


முதலில் குக்கரில் ஒரு மேஜைக்கரண்டி வெண்ணெய் சேர்த்துஅதில் குடை மிளகாய் தவிர்த்து மீதி இருக்கும்எல்லா காய்கறிகளையும் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுத்து நன்றாக மசித்துகொள்ளவும் 


ஒரு அடி கனமான வாணலியில்ஒரு மேஜைக்கரண்டி வெண்ணெய் சேர்த்துவெங்காயம் சேர்த்து வதக்கிகொள்ளவும்


பின்னர் இதனுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும் 


பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக்கொள்ளவும் 


பின்னர் குடை மிளகாய் சேர்த்து சிறிது வதக்கிய பின்னர்பாவ் பாஜி மசாலாமிளகாய் பொடிமஞ்சள் பொடிமற்றும் இந்த மசாலாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின்னர் வேக வைத்துமசித்து வைத்துள்ள காய்கறிகள் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து வரும் வரை வதக்கிக்கொள்ளவும் 


இதனுடன் கசூரி மேத்தி சேர்த்து இறக்கினால் சுவையான பாவ் பாஜி மசாலா தயார் 


பாவ் பன் டோஸ்ட் செய்முறை :


பாவ் பன்னை இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ளவும்

வெண்ணெய்யை சூடாக்கிய பின்னர்அதில் சிறிது பாவ் பாஜி மசாலா பொடி சேர்த்து அதன் மேல் வெட்டிவைத்துள்ள பன்னை வைத்து ஓரிரு நிமிடங்கள் டோஸ்ட் செய்தால் பாவ் பன் தயார் 


பாவ்  பாஜி பரிமாறும் முறை : 

நறுக்கிய வெங்காயம்தக்காளிஎலுமிச்சம் பழம் மற்றும் வெண்ணெய் சேர்த்து சூடாக பாவ் பாஜி மசாலாவைபரிமாறலாம்


குறிப்புகள்


பாவ் பாஜி மசாலா இல்லையென்றால்கரம் மசாலா மற்றும் சிகப்பு மிளகாய் பொடி சேர்த்தும் இதே முறையில்தயாரிக்கலாம்


பாவ் பன்கள் இல்லையென்றால்பிரட் வைத்தும் இதே முறையில் தயாரிக்கலாம் 


பொதுவாக துரித உணவகத்தில்காலிப்ளவர் சேர்ப்பதில்லை


இந்த பாஜியை தோசையின் நடுவினில் வைத்து தோசை வார்த்து எடுத்தால் சுவையான பாவ் பாஜி மசாலாதோசை தயார் 


இதே பாஜியில் காய்களை மசிக்காமல் அப்படியே பரிமாறினால் கடா பாஜி மசாலா தயார் 

பனீர் பராத்தா (Paneer Paratha)

 பனீர் பராத்தா :



தேவையான பொருள்கள் :


மேல் மாவு செய்வதற்கு : 


கோதுமை மாவு : 1 கப் 

எண்ணெய்/நெய் : 1 மேஜைக்கரண்டி 

உப்பு : தேவையான அளவு 

தண்ணீர் : தேவைக்கேற்ப 


பனீர் ஸ்டபிங்பூரணம் செய்வதற்கு : 


உதிர்த்த பனீர் : 2 கப் 

காஷ்மீரி மிளகாய் பொடி : ½ தேக்கரண்டி 

கரம் மசாலா : ¼ தேக்கரண்டி 

துருவிய இஞ்சி : 1 இன்ச் 

உலர்ந்த மாங்காய்ப்பொடிஆம்சூர் பொடி : ½ தேக்கரண்டி 

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தளைகள் : ஒரு கைப்பிடி 

உப்பு : தேவைக்கேற்ப 


செய்முறை : 


பராத்தா மாவு செய்முறை : 


முதலில் ஒரு பாத்திரத்தில் மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்த பின்னர்சிறிது சிறிதாக தேவையானதண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து இறுதியாக எண்ணெய்/நெய்யை மாவின் மீது தடவி 20 -30 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும்


பனீர் பூரணம் :


ஒரு பாத்திரத்தில் உதிர்த்த பனீர்மிளகாய் பொடிகரம் மசாலாஆம்சூர் பொடிஇஞ்சி கொத்தமல்லி தளைகள்மற்றும் உப்பு சேர்த்து கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்


பராத்தா செய்முறை : 


முதலில் ஒரு எலுமிச்சை அளவு மாவினை எடுத்து சிறிய சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ளவும் பின்னர் பனீர்கலவையை நடுவினில் வைத்து மாவினால் மூடிபோளி தேய்ப்பது போல மெதுவாக தேய்த்துக் கொள்ளவும் 

தேவைப்பட்டால்சிறிது கோதுமை மாவினைத் தூவி மெதுவாக தேய்க்கவும் 


பின்னர்சூடான தவாவில் தேய்த்து வைத்துள்ள பராத்தாக்களை வைத்துசிறிது நெய் சேர்த்துநன்றாகஇரண்டு புறமும் வேக வைத்து எடுத்தால் சுவையான பனீர் பராத்தா தயார் 


குறிப்புகள் : 

இந்த பராத்தாவோடு தயிர்/ரைத்தாஊறுகாய் /சாஸ் சேர்த்து பரிமாறலாம் 

இந்த பராத்தாவினை நெய் சேர்த்து சுடும் பொது மிகவும் சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும் 

இது குழந்தைகளுக்கு பிரியமான ஒரு சுவையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி