Showing posts with label Aval recipe. Show all posts
Showing posts with label Aval recipe. Show all posts

Thursday, December 23, 2021

அவல் காய்கறி உப்புமா (Poha/ Aval upma)

 அவல் காய்கறி உப்புமா 




தேவையான பொருள்கள் :


விருப்பமான நறுக்கிய காய்கறிகள் ( கேரட், பீன்ஸ், கார்ன் ) : 1 கப் 

கெட்டி அவல் : 1 கப் 

பச்சை மிளகாய் : 1-2

சின்ன வெங்காயம் : 4-5 

மஞ்சள் பொடி : 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் : ஒரு சிட்டிகை 

உப்பு : தேவையான அளவு 

கொத்தமல்லித் தளைகள் : சிறிது 

எலுமிச்சம் பழச்சாறு : 1 தேக்கரண்டி 


தாளிப்பதற்கு : 


எண்ணெய் : 1மேஜைக்கரண்டி 

கடுகு : 1 தேக்கரண்டி 

உளுந்து : 1தேக்கரண்டி 

வேர்க்கடலை : 1 மேஜைக்கரண்டி 

சீரகம் : 1/2 தேக்கரண்டி 

கருவேப்பிலை : சிறிதளவு 


செய்முறை : 


அவலை தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, அதில் மஞ்சள்பொடி, உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து கலந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். 


ஒரு வாணலியில், எண்ணெய் சேர்த்து, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து தாளித்த பின், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவும்.


வெங்காயம் வதங்கிய பின்னர், நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கி கொள்ளவும்.  

காய்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி காய்கறிகளை வேக வைத்துக் கொள்ளவும்.


காய்கள் வெந்தவுடன் நனைத்து வைத்துள்ள அவலை சேர்த்து, ஓரிரு நிமிடங்கள் காய்களோடு சேர்ந்து வரும்வரை வதக்கிய பின் கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான அவல் காய்கறி உப்புமா தயார். 


சிறிது ஆறியபின்னர் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பரிமாறவும் 


குறிப்புகள்: 


அவலில்சில நேரங்களில், மிகவும் சிறிய பூச்சிகள் இருக்கலாம்ஆகையால் அவலை நன்றாக கழுவிய பின்னர்தான் உபயோகிக்க வேண்டும். 


அவலை தண்ணீர் சேர்த்து ஊற வைக்க தேவையில்லை, நனைத்தாலே போதுமானது.


விருப்பமான காய்கறிகளை சேர்த்தோ அல்லது காய்கறிகள் இல்லாமலோ இதே முறையில் உப்புமாதயாரிக்கலாம்.


சிறிய வெங்காயத்திற்கு பதிலாக பெரிய வெங்காயம் சேர்த்தும் செய்யலாம். 


கெட்டியான அவலில் தான் இந்த உப்புமா தயாரிக்க வேண்டும். நான் சிகப்பு கெட்டி அவல் (சம்பா அவல்) உபயோகித்து இந்த உப்புமா தயாரித்துள்ளேன்வெள்ளை கெட்டி அவலிலும்இதே முறையில் உப்புமாதயாரிக்கலாம். 

Tuesday, December 22, 2020

அவல் மிக்ஸர்/ சிவ்டா (Aval / poha mixture / chivda )

 அவல் மிக்ஸர்/ சிவ்டா:



தேவையான பொருள்கள் :


அவல் : 2 கப்

நிலக்கடலை : 1/3 கப் 

பொட்டுக்கடலை : 1/3 கப்

முந்திரிப்பருப்பு : 1/3 கப்

கிஸ்மிஸ்: 2 தேக்கரண்டி 

மிளகாய் பொடி : 1/2 தேக்கரண்டி 

மஞ்சள் பொடி : 1/4 தேக்கரண்டி 

பொடித்த சர்க்கரை : 1 தேக்கரண்டி 

பெருங்காயம் : ஒரு சிட்டிகை 

கருவேப்பிலை : சிறிது 

உப்பு : தேவைக்கேற்ப 

எண்ணெய் : தேவையான அளவு 


செய்முறை :


ஒரு அடி கனமான வாணலியில் முதலில் அவலைச் சேர்த்து மெதுவாக மிதமான தீயில் எண்ணெய் எதுவும்சேர்க்காமல், அதே சமயத்தில் நிறம் மாறாமல் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 


அவலை உடைத்து விடாமல் மொறு மொறு என்று இருக்குமாறு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.


பின்னர் மற்றொரு வாணலியில் 2 முதல் 3 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து பின்னர் அதில் முதலில் கடலையைமிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.


பின்னர் அதே வாணலியில், முந்திரிப்பருப்புகளை சேர்த்து அத்தனையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.


பின்னர் மீண்டும் அதே வாணலியில் கிஸ்மிஸ் மற்றும் பொட்டுக்கடலை ஆகியவற்றையும் சேர்த்து வறுத்துஎடுத்துக் கொள்ளவும். 


பின்னர் ஒரு பெரிய அடி கனமான வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கருவேப்பிலையைபொறித்த பின்னர், மிளகாய் பொடி, மஞ்சள் பொடி பெருங்காயம் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து 1/2 நிமிடம் வதக்கிய பின்னர், அவல் மற்றும் வறுத்து வைத்துள்ள பொருள்களைச் சேர்த்து நன்றாக கலந்தால்சுவையான அவல் மிக்ஸர்/ சிவ்டா தயார்.


குறிப்புகள்: 


அவலுக்கு பதிலாக பொரி/ கார்ன் பிளேக்ஸ் / ஜவ்வரிசி போன்றவைகள் வைத்தும் இதே முறையில் மிக்ஸர்/ சிவ்டா தயாரிக்கலாம்.


கெட்டி அவலாக இருந்தால், அதனையும் எண்ணெய்யில் பொரித்து எடுத்தும் இந்த அவல் மிக்ஸர்தயாரிக்கலாம்.


மிளகாய் பொடிக்கு பதிலாக பச்சை மிளகாய் / காய்ந்த மிளகாய் கூட சேர்த்துக் கொள்ளலாம்.


கொப்பரை தேங்காய் வறுத்தும் இந்த சிவ்டாவில் கலந்து கொள்ளலாம்.


விருப்பப்படும் நட்ஸ்களை வறுத்து இந்த சிவ்டாவில் கலந்து கொள்ளலாம்.


சர்கரைக்குப் பதிலாக சர்க்கரையைப் பொடித்தும் சேர்க்கலாம்.


இந்த மிக்ஸ்ர் இனிப்பும் காரமுமாக (Khatta meetta ) இருக்கும். இனிப்பு சுவை விரும்பாதவர்கள் சர்க்கரையைசேர்க்காமல் தயாரித்துக் கொள்ளலாம்.