Saturday, November 6, 2021

கஸ்டர்டு குக்கீஸ் (Custard Cookies)

 கஸ்டர்டு குக்கீஸ் :


கோதுமை மாவு :  150 கிராம்கள் 
கஸ்டர்டு பவுடர் : 75 கிராம்கள் 
பொடித்த சர்க்கரை : 100 கிராம்கள் 
வெண்ணெய் : 100 கிராம்கள் 
வெண்ணிலா எசென்ஸ் : 1 தேக்கரண்டி 
பால் : 1 - 2 தேக்கரண்டி ( தேவைப்பட்டால் ) 

செய்முறை : 

ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கிரீமியாக கலந்து கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் கஸ்டர்டு பௌடெரை கலந்து நன்றாக சலித்து எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் சலித்து வைத்துள்ள மாவு , வெண்ணிலா எசென்ஸ் மற்றும் தேவைப்பட்டால் பால் சேர்த்து வெண்ணெய் மற்றும் சர்க்கரையோடு கலந்து கொள்ளவும்.

பின்னர் இந்த மாவு கலவையை ஒரு பத்து நிமிடங்கள் குளிர் சாதன பெட்டியில் வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் இந்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு போர்க்/ முள்கரண்டி வைத்து சிறிது அழுத்தி விட்டு கொள்ளவும்.

இந்த குக்கீகளை ஓவெனில் 180 டிகிரியில் 12 - 15 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுத்தால் சுவையான கஸ்டர்டு குக்கீஸ் தயார்.

குறிப்புகள் :

கோதுமை மாவிற்கு பதிலாக மைதா சேர்த்தும் இதை தயாரிக்கலாம்.

சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்தும் இதனை தயாரிக்கலாம்.

வெண்ணிலா எஸ்சென்ஸ்க்கு பதிலாக ஏலக்காய் பொடி சேர்த்தும் / விருப்பமான எசென்ஸ் சேர்த்தும் செய்யலாம்.

இது முட்டை சேர்க்காமல் செய்வதால் வெண்ணெய் இந்த அளவு சேர்த்தால் தான் குக்கீ நன்றாக வரும்.

இது ஒரு டீ டைம் குக்கீஸ். அதாவது காபி/ டீயுடன் சேர்த்து சுவைக்கலாம்.



No comments:

Post a Comment