Saturday, November 6, 2021

பானகம் (Panagam)

 



பானகம் 


தேவையான பொருள்கள் : 


பொடித்த / துருவிய வெல்லம் : ½ கப்


சுக்கு பொடி : ¼ தேக்கரண்டி


எலுமிச்சம் பழம் : 1


ஏலக்காய் : 2


தண்ணீர் : 2 கப்


விருப்பப்பட்டால் : 


பச்சை கற்பூரம் : ஒரு பின்ச்


துளசி இலைகள் : சிறிது


நட்மெக் பொடி : ஒரு பின்ச்


செய்முறை :



முதலில் பொடித்த / துருவிய வெல்லத்தை தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்த பின்னர் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.


பின்னர் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.


ஏலக்காயை தட்டி வைத்துக் கொள்ளவும்.


பின்னர் ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு, தட்டிய ஏலக்காய், சுக்கு பொடி மற்றும் வெல்லக் கரைசல் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்தால் ஸ்வாமிக்குநெய்வேத்தியம் செய்வதற்கு சுவையான பானகம் தயார்.



குறிப்புகள் :


வெல்லத்திற்கு பதிலாக பொடித்த கல்கண்டு சேர்த்து கல்கண்டு பானகம் தயாரிக்கலாம்.


நான் ஆர்கானிக் வெல்லம் உபயோகித்ததால் நிறம் சற்று டார்க்காக இருக்கிறது.


எலுமிச்சை சாரிற்கு பதிலாக புளியை கரைத்து புளி கரைசலையோ அல்லது வெறும் தண்ணீர் சேர்த்தோ இதேமுறையில் பானகம் தயாரிக்கலாம்.


விருப்பப்பட்டால் பச்சைக் கற்பூரம், நட்மெக் பொடி மற்றும் துளசி இலைகளையும் சேர்த்து கொள்ளலாம்.

கஸ்டர்டு குக்கீஸ் (Custard Cookies)

 கஸ்டர்டு குக்கீஸ் :


கோதுமை மாவு :  150 கிராம்கள் 
கஸ்டர்டு பவுடர் : 75 கிராம்கள் 
பொடித்த சர்க்கரை : 100 கிராம்கள் 
வெண்ணெய் : 100 கிராம்கள் 
வெண்ணிலா எசென்ஸ் : 1 தேக்கரண்டி 
பால் : 1 - 2 தேக்கரண்டி ( தேவைப்பட்டால் ) 

செய்முறை : 

ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கிரீமியாக கலந்து கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் கஸ்டர்டு பௌடெரை கலந்து நன்றாக சலித்து எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் சலித்து வைத்துள்ள மாவு , வெண்ணிலா எசென்ஸ் மற்றும் தேவைப்பட்டால் பால் சேர்த்து வெண்ணெய் மற்றும் சர்க்கரையோடு கலந்து கொள்ளவும்.

பின்னர் இந்த மாவு கலவையை ஒரு பத்து நிமிடங்கள் குளிர் சாதன பெட்டியில் வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் இந்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு போர்க்/ முள்கரண்டி வைத்து சிறிது அழுத்தி விட்டு கொள்ளவும்.

இந்த குக்கீகளை ஓவெனில் 180 டிகிரியில் 12 - 15 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுத்தால் சுவையான கஸ்டர்டு குக்கீஸ் தயார்.

குறிப்புகள் :

கோதுமை மாவிற்கு பதிலாக மைதா சேர்த்தும் இதை தயாரிக்கலாம்.

சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்தும் இதனை தயாரிக்கலாம்.

வெண்ணிலா எஸ்சென்ஸ்க்கு பதிலாக ஏலக்காய் பொடி சேர்த்தும் / விருப்பமான எசென்ஸ் சேர்த்தும் செய்யலாம்.

இது முட்டை சேர்க்காமல் செய்வதால் வெண்ணெய் இந்த அளவு சேர்த்தால் தான் குக்கீ நன்றாக வரும்.

இது ஒரு டீ டைம் குக்கீஸ். அதாவது காபி/ டீயுடன் சேர்த்து சுவைக்கலாம்.



Friday, January 1, 2021

கேரட் அல்வா (Carrot Halwa)

 கேரட் அல்வா 



தேவையான பொருள்கள் : 


துருவிய கேரட் : 2 கப் 

பால் : 1 கப் 

சர்க்கரை : 3/4 கப் 

மாவா / சர்க்கரை சேர்க்காத பால்கோவா : 1/2 கப் 

ஏலக்காய்த்தூள் : 1/2 தேக்கரண்டி 

குங்குமப்பூ : 1/4 தேக்கரண்டி 

நெய் : 4 தேக்கரண்டி 

முந்திரிப்பருப்பு : 5-8


செய்முறை : 


ஒரு வாணலியில் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்துஅதனோடு கேரட் சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர்வாணலியை மூடி காரட்டை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்

 பின்னர் இதனோடுபால் , குங்குமப்பூ சேர்த்து மீண்டும் மூடி போட்டு நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்

பால் முழுவதும் நன்றாக அப்ஷார்ப் ஆகிய பின்னர்சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்

சர்க்கரை நன்றாக சேர்ந்துகேரட் கலவை கட்டியாக சுருண்டு வரும் பொழுதுஉதிர்த்த மாவாகோவா சேர்த்துமீண்டும் கலந்து வைத்துக் கொள்ளவும்

மீதமுள்ள நெய்யைச் சேர்த்து அல்வா பதத்திற்கு வரும் பொழுது ஏலக்காய்முந்திரி சேர்த்து இறக்கினால்சுவையான கேரட் அல்வா தயார்.


குறிப்புகள் :



நான் இந்த அல்வாவை டெல்லி கேரட்டில் செய்துள்ளேன்நீங்கள் இதே கேரட்டிலோ அல்லது சாதாரணஆரஞ்சு கேரட்டிலோ இந்த முறையில் அல்வா தயாரிக்கலாம்

கேரட்டிற்கு பதிலாக பீட்ரூட்டிலும் இதே முறையில் அல்வா தயாரிக்கலாம்.

முந்திரிக்கு பதிலாக விருப்பமான நட்ஸ் சேர்த்துக்  கொள்ளலாம்

சர்க்கரை சேர்க்காத பால்கோவாவிற்கு பதிலாக இன்னும் இரண்டு கப் பால் சேர்த்துஇதே முறையில்தயாரிக்கலாம்.

இந்த அல்வாவை சூடாகவோ அல்லது வெண்ணிலா ஐஸ்கிரீமோடு சேர்த்தோ பரிமாறலாம்

Tuesday, December 29, 2020

திருவாதிரை களி (Thiruvathirai kali)

 திருவாதிரை களி



 

தேவையான பொருள்கள் : 


பச்சரிசி : 1/2 கப் 

பாசிப்பருப்பு : 1-2 மேஜைக்கரண்டி 

வெல்லம் : 3/4 கப் 

தேங்காய் : 1/4 கப் 

நெய் : 2-4 மேஜைக்கரண்டி 

ஏலக்காய் பொடி : ஒரு சிட்டிகை

தண்ணீர்: 3 கப் 

உப்பு : ஒரு சிட்டிகை 


செய்முறை : 


ஒரு வாணலியியல்அரிசி மற்றும் பருப்பை சேர்த்து நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ளவும்.


பின்னர் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுரவை மாதிரி உடைத்துக் கொள்ளவும்


ஒரு வாணலியில்வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து வெல்லத்தை நன்றாக கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.


பின்னர் வடிகட்டிய வெல்லக்கரைசலோடுதேங்காய்ஏலக்காய் பொடி மற்றும் உடைத்து வைத்துள்ள அரிசிபருப்பு ரவையைச் சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்.


பின்னர்இதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிஒரு குக்கரில் அரை கப் தண்ணீர் ஊற்றிஇந்த பாத்திரத்தைவைத்து 2-3 விசில் வைத்து எடுத்தால் சுவையான திருவாதிரைக் களி தயார்


குறிப்புகள்


வெல்லம் சிறிது அதிகமாகவோ குறைத்தோ அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போன்று சேர்த்து கொள்ளவும்


பாசிப்பருப்புதேங்காய் போன்றவை இல்லாமலும் இதே முறையில் களி செய்யலாம்


அதே போன்று விருப்பப்பட்டால் வறுத்த முந்திரி பருப்புகள் சேர்க்கலாம்

ஏபிசி ஜூஸ் (ABC juice)

 ஏபிசி ஜூஸ் :




தேவையான பொருள்கள் :

ஆப்பிள் : 1
கேரட் : 1
பீட்ரூட் : 1/2
தேன் : 1 தேக்கரண்டி

விருப்பப்பட்டால் :

இஞ்சி : ஒரு சிறு துண்டு
எலுமிச்சம் பழ சாறு : 1 தேக்கரண்டி
பிளாக் உப்பு : ஒரு சிட்டிகை

செய்முறை :

முதலில் கேரட் மற்றும் பீட்ரூட்டை தோல் நீக்கி துருவி எடுத்துக் கொள்ளவும்.

ஆப்பிளை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சி சேர்ப்பதாக இருந்தால், அதனையும் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய கேரட், பீட்ரூட் மற்றும் நறுக்கிய ஆப்பிள் மேலும் இஞ்சி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக ஜூஸாக அடித்து கொள்ளவும்.

விருப்பப்பட்டால் சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குளிர் சாதனப் பெட்டியில் ஒரு அரை மணி நேரம் வைத்து எடுத்தால் சுவையான ஏபிசி ஜூஸ் தயார்.

குறிப்புகள் :

இந்த ஜூஸில் ஐஸ் கட்டிகள் கலந்தும் அருந்தலாம்.

தேனோ அல்லது வேறு எந்த சுவையூட்டியோ சேர்க்காமலும் அருந்தலாம்.

இஞ்சி சேர்ப்பது அவரவர் விருப்பம்.

பிளாக் சால்ட் ஒரு பின்ச் சேர்த்தாலும் சுவையாக இருக்கும்.

குளிர் சாதனப் பெட்டியில் வைக்காமல் அப்டியே அருந்தலாம்.

ரவா ஷெல்ஸ் (Rava / sooji spicy shells)

 ரவா ஷெல்ஸ் 




தேவையான பொருள்கள் :

ரவா : 1 கப் 
மிளகு பொடி : 1/2 தேக்கரண்டி 
மிளகாய் பொடி : 1/2 தேக்கரண்டி 
உப்பு : தேவையான அளவு 
தண்ணீர் : தேவையான அளவு
எண்ணெய் : பொரிப்பதற்கு 

செய்முறை :

இந்த ரவா ஷெல்ஸ் செய்வதற்கு ரவை மிகவும் சிறியதாக இருக்க வேண்டும். ஆகையால், நான் ரவையை மிக்ஸியிலிட்டு அதனை நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ளவும்.  

பொடித்த ரவையுடன் மிளகாய் பொடி , மிளகு பொடி, உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து பிரட் க்ராம்ஸ் பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, ஒரு ஈரத்துணியினால் மூடி 10  நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ளவும்.

மாவு நன்றாக ஊறி, மிகவும் மிருதுவாக இருக்கும். இதனை சிறு சிறு உருளைகளாக உருட்டிக் கொள்ளவும். 

பின்னர் ஒவ்வொரு உருளையாக எடுத்து, ஒரு முள் கரண்டியின் பின்னால் அதனை வைத்து கரண்டியின் இம்ப்ரெஸ்ஸன் வரும் வண்ணம் மாவினை அழுத்திய பின்னர் அதனை அப்படியே உருட்டி எடுத்தால் ஷெல் வடிவங்கள் வரும். 




ஒரு அடி கனமான வாணலியில்,எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடாகியதும், செய்து வைத்துள்ள ஷெல்களை சேர்த்து மிதமான தீயில், போன் நிறமாகும் வரை பொரித்து எடுத்தால், சுவையான ரவா ஷெல்ஸ் தயார்.. 

குறிப்புகள் :

ரவா பொடியாக இருந்தால், மிக்ஸியில் அரைத்துப் பொடிக்க தேவையில்லை.. 

இந்த ஷெல்களை மிதமான தீயில் மிகவும் பொறுமையாக பொறித்து எடுக்கவும். அவ்வாறு செய்வதால், செல்களின் உள்ளே வரை நன்றாக பொரிந்து மிகவும் மொறுமொறுப்பாக இருக்கும். 

நான் மிளகு பொடியும் மிளகாய் பொடியும் சேர்த்து செய்து உள்ளேன்.. நீங்கள் உங்களுக்கு விருப்பமான பொடிகளை சேர்த்து செய்து ருசியுங்கள்.
சில நேரங்களில், சாட் மசாலா / இத்தாலியன் சீசனிங்ஸ் கூட சேர்த்து செய்து இருக்கிறேன்.. மிகவும் சுவையாக இருக்கும். 

Friday, December 25, 2020

சம்பா கோதுமை கேசரி (Samba wheat kesari)

 சம்பா கோதுமை கேசரி


தேவையான பொருள்கள் : 


சம்பா கோதுமை : 1 கப் 

சர்க்கரை : 1 கப் 

நெய் : 3 தேக்கரண்டி 

பால் : 2 கப் 

தண்ணீர் : 2 கப்  

ஏலக்காய் பொடி : ஒரு சிட்டிகை 

முந்திரிப்பருப்பு அண்ட் கிஸ்மிஸ் : 5 - 8 


செய்முறை : 


ஒரு குக்கரில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்துசம்பா கோதுமையை நிறம் எதுவும் மாறாமல் ஒரு இரண்டுநிமிடங்கள் மிதமான தீயில் வறுத்த பின்னர்பால் மற்றும் தண்ணீர் சேர்த்து, 2 - 3 விசில் வைத்துநன்றாக வேகவைத்து கொள்ளவும்.


ஒரு வாணலியில்ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து முந்திரி மற்றும் கிஸ்மிஸ்க்களை வறுத்து எடுத்துக்கொள்ளவும்


குக்கெரை திறந்தவுடன்சூடாக இருக்கும் சம்பா கோதுமையோடுசர்க்கரை மற்றும் வறுத்து வைத்துள்ளமுந்திரிப்பருப்பு மற்றும் கிஸ்மிஸ் சேர்த்து மேலும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து நன்றாகக் கலந்தால்சுவையான சம்பா கோதுமை கேசரி தயார்


குறிப்புகள் :


கோதுமையை வறுக்காமலும் தயாரிக்கலாம்ஆனால்சிறிது வறுத்து தயாரிக்கும் பொழுது மணமும் சுவையும்அதிகமாக இருப்பதோடு,கோதுமை ரவை ஒன்றோடு ஒன்று ஒட்டாமலும் இருக்கும். (மிகவும் குழையாமல்இருக்கும்


சர்க்கரைக்கு பதிலாக விருப்பமான சுவையூட்டிகளை சேர்த்து இதே முறையில் தயாரிக்கலாம்


கப் கோதுமைக்கு 1 கப் சர்க்கரை என்பது அளவான இனிப்பாக இருக்கும்ஆனால்தங்களின்விருப்பத்திற்கேற்பசர்க்கரையின் அளவினை அதிகரித்தோகுறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம்


பாலிற்கு பதிலாக தேங்காய் பால்நட் மில்க் போன்றவைகளையும் சேர்த்து தயாரிக்கலாம்.


தேங்காய் பால் சேர்ப்பதாக இருந்தால்இரண்டாம் பாலில் கோதுமையை வேக வைத்து , பின்னர் சர்க்கரைசேர்க்கும் பொழுது முதல் தேங்காய் பால் சேர்க்கவும்


பாலின் அளவை சிறிது அதிகமாக சேர்த்து இதையே மிகவும் சுவையான கோதுமை பிரதமன்பாயாசமாகவும்தயாரிக்கலாம்