Showing posts with label Lemon recipe. Show all posts
Showing posts with label Lemon recipe. Show all posts

Saturday, November 6, 2021

பானகம் (Panagam)

 



பானகம் 


தேவையான பொருள்கள் : 


பொடித்த / துருவிய வெல்லம் : ½ கப்


சுக்கு பொடி : ¼ தேக்கரண்டி


எலுமிச்சம் பழம் : 1


ஏலக்காய் : 2


தண்ணீர் : 2 கப்


விருப்பப்பட்டால் : 


பச்சை கற்பூரம் : ஒரு பின்ச்


துளசி இலைகள் : சிறிது


நட்மெக் பொடி : ஒரு பின்ச்


செய்முறை :



முதலில் பொடித்த / துருவிய வெல்லத்தை தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்த பின்னர் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.


பின்னர் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.


ஏலக்காயை தட்டி வைத்துக் கொள்ளவும்.


பின்னர் ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு, தட்டிய ஏலக்காய், சுக்கு பொடி மற்றும் வெல்லக் கரைசல் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்தால் ஸ்வாமிக்குநெய்வேத்தியம் செய்வதற்கு சுவையான பானகம் தயார்.



குறிப்புகள் :


வெல்லத்திற்கு பதிலாக பொடித்த கல்கண்டு சேர்த்து கல்கண்டு பானகம் தயாரிக்கலாம்.


நான் ஆர்கானிக் வெல்லம் உபயோகித்ததால் நிறம் சற்று டார்க்காக இருக்கிறது.


எலுமிச்சை சாரிற்கு பதிலாக புளியை கரைத்து புளி கரைசலையோ அல்லது வெறும் தண்ணீர் சேர்த்தோ இதேமுறையில் பானகம் தயாரிக்கலாம்.


விருப்பப்பட்டால் பச்சைக் கற்பூரம், நட்மெக் பொடி மற்றும் துளசி இலைகளையும் சேர்த்து கொள்ளலாம்.