Showing posts with label Snacks. Show all posts
Showing posts with label Snacks. Show all posts

Thursday, December 23, 2021

தேன்குழல் முறுக்கு (Thenkuzhal muruku)

 தேன்குழல் முறுக்கு :





அரிசி மாவு : 1.5 கப் 

பொட்டுக்கடலை மாவு :1/4 கப் 

சீரகம் : 1-2 தேக்கரண்டி 

உப்பு : தேவைக்கேற்ப 

தண்ணீர் : தேவையான அளவு 

எண்ணெய் : பொரிப்பதற்கு தேவையான அளவு 


செய்முறை : 


முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக்கடலையைச் சேர்த்து நன்றாக பொடித்துக் கொள்ளவும் பொடித்தமாவினை ஒரு சல்லடையில் போட்டு சலித்து எடுத்துக் கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில்அரிசி மாவுபொடித்து வைத்துள்ள பொட்டுக்கடலை மாவுசீரகம்உப்பு மற்றும் சிறிதுசிறிதாக தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.


பின்னர் இந்த மாவினை தேன்குழல் அச்சினில் இட்டுநன்றாக சூடாக இருக்கும் எண்ணெயில் பிழிந்துஎடுத்தால் சுவையான தேன்குழல் முறுக்கு தயார்.


குறிப்புகள் :


பொதுவாக தேன்குழல் செய்வதற்கு அரிசி மாவோடு உளுந்த மாவு மற்றும் வெண்ணெய் சேர்த்து செய்வோம்ஆனால் இது சுலபமான முறையில் வெண்ணெய் சேர்க்காமல் செய்யும் முறையாகும்


மேலும் இந்த முறையில் செய்யும் தேன்குழல்கள் பார்ப்பதற்கு நல்ல வெண்ணிறமாகவும் சுவையும் நன்றாகஇருக்கும்.


மேலும் கடைகளில் கிடைக்கும் அரிசி மாவிலேயே இந்த முறையில் தேன்குழல்கள் தயாரிக்கலாம்.


சீரகத்திற்கு பதிலாக வெள்ளை எள்ளை சேர்த்தும் தயாரிக்கலாம்.


ஒரு வேளை முறுக்கு பிழியும் போது துண்டு துண்டாக உடைந்தால் , மாவினில் சிறிது தண்ணீர் தெளித்துபிசைந்த பின்னர் பிழிந்தால் நன்றாக வரும்.

மொச்சை (Mochchai sundal)

  மொச்சை 




தேவையான பொருள்கள் :


மொச்சை : 1/2 கப் 

கடலை மாவு : 1/4 கப்

நறுக்கிய வெங்காயம் : 1-2

நறுக்கிய பச்சை மிளகாய் : 3-4 

பொடியாக நறுக்கிய இஞ்சி : 1 தேக்கரண்டி 

பெருங்காயம் : ஒரு சிட்டிகை

கருவேப்பிலை : ஒரு கொத்து 


தாளிப்பதற்கு :


கடுகு : 1 தேக்கரண்டி 

உளுந்து : 1 தேக்கரண்டி



செய்முறை :


மொச்சை பயிரை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு குக்கரில் நன்றாக ஊறியுள்ள மொச்சை பயிரைச் சேர்த்துஅது முழுகும் வரை தண்ணீர் சேர்த்து ஒரு 4-5 விசில்வைத்து எடுத்துக் கொள்ளவும்

ஒரு வாணலியில்தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து தாளித்த பின்னர்,வெங்காயம்பச்சைமிளகாய்இஞ்சிகருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.பின்னர் வேக வைத்த மொச்சை பயிரைசேர்த்து நன்றாக கிளறவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து எடுத்துக்கொள்ளவும்.பின்னர் இதனை மொச்சைப் பயிரோடு கலந்து கடலை மாவின் பச்சை வாசனை போகும் வரைகொதிக்கவைத்து இறக்கினால் சுவையான மொச்சை தயார்.


குறிப்புகள் :


பெரிய வெங்காயத்திற்கு பதிலாக சின்ன வெங்காயம் சேர்த்தும் செய்யலாம்.

இதனை மாலை நேரத்தில் தேநீர் அல்லது காபியோடு சாப்பிடலாம்.

ரசம் மற்றும் சாம்பார் சாதத்தோடும் சாப்பிடலாம்.

Tuesday, December 29, 2020

ரவா ஷெல்ஸ் (Rava / sooji spicy shells)

 ரவா ஷெல்ஸ் 




தேவையான பொருள்கள் :

ரவா : 1 கப் 
மிளகு பொடி : 1/2 தேக்கரண்டி 
மிளகாய் பொடி : 1/2 தேக்கரண்டி 
உப்பு : தேவையான அளவு 
தண்ணீர் : தேவையான அளவு
எண்ணெய் : பொரிப்பதற்கு 

செய்முறை :

இந்த ரவா ஷெல்ஸ் செய்வதற்கு ரவை மிகவும் சிறியதாக இருக்க வேண்டும். ஆகையால், நான் ரவையை மிக்ஸியிலிட்டு அதனை நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ளவும்.  

பொடித்த ரவையுடன் மிளகாய் பொடி , மிளகு பொடி, உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து பிரட் க்ராம்ஸ் பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, ஒரு ஈரத்துணியினால் மூடி 10  நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ளவும்.

மாவு நன்றாக ஊறி, மிகவும் மிருதுவாக இருக்கும். இதனை சிறு சிறு உருளைகளாக உருட்டிக் கொள்ளவும். 

பின்னர் ஒவ்வொரு உருளையாக எடுத்து, ஒரு முள் கரண்டியின் பின்னால் அதனை வைத்து கரண்டியின் இம்ப்ரெஸ்ஸன் வரும் வண்ணம் மாவினை அழுத்திய பின்னர் அதனை அப்படியே உருட்டி எடுத்தால் ஷெல் வடிவங்கள் வரும். 




ஒரு அடி கனமான வாணலியில்,எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடாகியதும், செய்து வைத்துள்ள ஷெல்களை சேர்த்து மிதமான தீயில், போன் நிறமாகும் வரை பொரித்து எடுத்தால், சுவையான ரவா ஷெல்ஸ் தயார்.. 

குறிப்புகள் :

ரவா பொடியாக இருந்தால், மிக்ஸியில் அரைத்துப் பொடிக்க தேவையில்லை.. 

இந்த ஷெல்களை மிதமான தீயில் மிகவும் பொறுமையாக பொறித்து எடுக்கவும். அவ்வாறு செய்வதால், செல்களின் உள்ளே வரை நன்றாக பொரிந்து மிகவும் மொறுமொறுப்பாக இருக்கும். 

நான் மிளகு பொடியும் மிளகாய் பொடியும் சேர்த்து செய்து உள்ளேன்.. நீங்கள் உங்களுக்கு விருப்பமான பொடிகளை சேர்த்து செய்து ருசியுங்கள்.
சில நேரங்களில், சாட் மசாலா / இத்தாலியன் சீசனிங்ஸ் கூட சேர்த்து செய்து இருக்கிறேன்.. மிகவும் சுவையாக இருக்கும். 

Tuesday, December 22, 2020

அவல் மிக்ஸர்/ சிவ்டா (Aval / poha mixture / chivda )

 அவல் மிக்ஸர்சிவ்டா:



தேவையான பொருள்கள் :


அவல் : 2 கப்

நிலக்கடலை : 1/3 கப் 

பொட்டுக்கடலை : 1/3 கப்

முந்திரிப்பருப்பு : 1/3 கப்

கிஸ்மிஸ்: 2 தேக்கரண்டி 

மிளகாய் பொடி : 1/2 தேக்கரண்டி 

மஞ்சள் பொடி : 1/4 தேக்கரண்டி 

பொடித்த சர்க்கரை : 1 தேக்கரண்டி 

பெருங்காயம் : ஒரு சிட்டிகை 

கருவேப்பிலை : சிறிது 

உப்பு : தேவைக்கேற்ப 

எண்ணெய் : தேவையான அளவு 


செய்முறை :


ஒரு அடி கனமான வாணலியில் முதலில் அவலைச் சேர்த்து மெதுவாக மிதமான தீயில் எண்ணெய் எதுவும்சேர்க்காமல்அதே சமயத்தில் நிறம் மாறாமல் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்


அவலை உடைத்து விடாமல் மொறு மொறு என்று இருக்குமாறு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.


பின்னர் மற்றொரு வாணலியில் 2 முதல் 3 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து பின்னர் அதில் முதலில் கடலையைமிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.


பின்னர் அதே வாணலியில்முந்திரிப்பருப்புகளை சேர்த்து அத்தனையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.


பின்னர் மீண்டும் அதே வாணலியில் கிஸ்மிஸ் மற்றும் பொட்டுக்கடலை ஆகியவற்றையும் சேர்த்து வறுத்துஎடுத்துக் கொள்ளவும்


பின்னர் ஒரு பெரிய அடி கனமான வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கருவேப்பிலையைபொறித்த பின்னர்மிளகாய் பொடிமஞ்சள் பொடி பெருங்காயம் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து 1/2 நிமிடம் வதக்கிய பின்னர்அவல் மற்றும் வறுத்து வைத்துள்ள பொருள்களைச் சேர்த்து நன்றாக கலந்தால்சுவையான அவல் மிக்ஸர்சிவ்டா தயார்.


குறிப்புகள்


அவலுக்கு பதிலாக பொரிகார்ன் பிளேக்ஸ் / ஜவ்வரிசி போன்றவைகள் வைத்தும் இதே முறையில் மிக்ஸர்சிவ்டா தயாரிக்கலாம்.


கெட்டி அவலாக இருந்தால்அதனையும் எண்ணெய்யில் பொரித்து எடுத்தும் இந்த அவல் மிக்ஸர்தயாரிக்கலாம்.


மிளகாய் பொடிக்கு பதிலாக பச்சை மிளகாய் / காய்ந்த மிளகாய் கூட சேர்த்துக் கொள்ளலாம்.


கொப்பரை தேங்காய் வறுத்தும் இந்த சிவ்டாவில் கலந்து கொள்ளலாம்.


விருப்பப்படும் நட்ஸ்களை வறுத்து இந்த சிவ்டாவில் கலந்து கொள்ளலாம்.


சர்கரைக்குப் பதிலாக சர்க்கரையைப் பொடித்தும் சேர்க்கலாம்.


இந்த மிக்ஸ்ர் இனிப்பும் காரமுமாக (Khatta meetta ) இருக்கும்இனிப்பு சுவை விரும்பாதவர்கள் சர்க்கரையைசேர்க்காமல் தயாரித்துக் கொள்ளலாம்





Wednesday, December 7, 2011

Semiya Pakoda/Vermicelli Pakora

Ingredients:

Semiya(Vermicelli) : 1 Cup (slightly dry roast semiya in a kadai and keep this aside)
Gram flour/Besan flour: 1/2 Cup
Rice Flour: 2 tablespoon
Onion : 1 (Finely chopped)
Green Chillies : 2 (adjust to ur taste - Also cut it into vertically)
Chopped Ginger : 1" piece (optional)
Hing :1/4 tsp 
Salt To Taste
Oil for deep frying

Method:

Mix semiya with  besan flour, rice flour along with salt, hing, chopped ginger and green chillies & onion in a pan/bowl.
Heat oil in a pan and wait until the oil is hot.
Take a small ball size of the pakoda batter and drop it in oil. Repeat the same for all the remaining batter.
Deep fry the pakodas till it turns golden brown color and crisp.
Remove the pakodas from oil and keep it in a tissue to obsorb excess oil.
The crispy semiya pakoda /Vermicelli pakora is ready to serve.

If u want u can have this pakoda with coconut chutney..

This is a very gud evening time snack during winter /rainy season....