Showing posts with label Festival recipe. Show all posts
Showing posts with label Festival recipe. Show all posts

Saturday, September 16, 2023

அகர் அகர் ஜெல்லி கேக் ( Agar Agar Jelly fruit Cake)

 அகர் அகர் ஜெல்லி கேக் :



தேவையான பொருள்கள் :

 

அகர் அகர்/ கடல் பாசி /சைனா க்ராஸ் (China Grass)  : 10 கிராம்கள்

சர்க்கரை : 1/2 கப்

தண்ணீர் : கப்

நறுக்கிய பழங்கள் : கப் (ஆப்பிள்ஆரஞ்சுமாம்பழம்வாழைப்பழம்,திராட்சைப் பழம் )

 

செய்முறை : 

 

முதலில்ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றிஅதில் அகர் அகர் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.

 

எல்லா பழங்களையும் சிறு சிறு துண்டுகளாக விருப்பமான வடிவத்தில் நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

 

ஒரு அடி கனமான வாணலியில்,ஒரு கப் தண்ணீர்அரை கப் சர்க்கரை மற்றும் ஊற வைத்துள்ள அகர் அகர் மேலும்  அந்த தண்ணீரையும் சேர்த்துக் கலந்து நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.

 

பின்னர் ஒரு பாத்திரத்தில்முதலில் ஒரு கரண்டி இந்த கொதிக்க வைத்துள்ள அகர் அகர் கலவையை ஊற்றிய பின்னர்நறுக்கி வைத்துள்ள பழத் துண்டுகளை விருப்பமான முறையில் அடுக்கிய பின்னர் மீண்டும் மீதமிருக்கும் அகர் அகர் கலவையை பழத் துண்டுகள் மூழ்கும் வரை ஊற்ற வேண்டும்.

 

பின்னர் இந்த ஜெல்லி கேக்கை ஒரு மணி நேரம் அறை வெப்பநிலையில் வைத்தால் சுவையான ஜெல்லி கேக் தயார்.

 

குறிப்புகள்:

 

அகர் அகர் பவுடர் பார்மில் உபயோகித்தால்அதை ஊற வைக்கத் தேவையில்லை. இரண்டு தேக்கரண்டி அகர் அகர் பொடியோடு இரண்டு கப் தண்ணீர் மற்றும் அரை கப் சர்க்கரை சேர்த்து அதனை நிமிடங்கள் கொதிக்க வைத்து பின்னர் செட் செய்தால்சுவையான ஜெல்லிகள் தயார்..

 

இந்த ஜெல்லியை குளிர் சாதன பெட்டியில் வைத்தால்மிகவும் விரைவாக செட் ஆகிவிடும்.

 

அகர் அகர்/ கடல் பாசி /சைனா க்ராஸ் (China Grass) - இது இயற்கையானது. இதில் கெமிக்கல் எதுவும் கிடையாது. மேலும் இது மிகவும் குளிர்ச்சியை தரும். ஆகையால்குழந்தைகளுக்கு குளிர் காலத்தில் கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது.

 

இரண்டு கப் தண்ணீருக்கு பதிலாகஒரு கப் தண்ணீர் ஒரு கப் விருப்பமான ஜூஸ் ( தர்பூசணி ஜூஸ் / மாம்பழம்/ அன்னாசிப்பழம் ஜூஸ்) அல்லது பால் / தேங்காய் பால் / இளநீர் போன்றவைகளும் சேர்த்து தயாரிக்கும் பொழுது மிகவும் சுவையாக இருக்கும்.

 

உங்களுக்கு விருப்பமான பழங்களை சேர்த்து இதே முறையில் தயாரிக்கலாம்.

 

கேக் மௌல்டுகள் / ஐஸ் டிரே போன்றவற்றிலும் இந்த ஜெல்லிகளை தயாரிக்கலாம்

 

பாதாம் அல்வா (Almond Halwa/ Badam Halwa)

 பாதாம் அல்வா:

தேவையான பொருள்கள் : 


பாதாம் : கப்

சர்க்கரை : கப்

நெய் : 1/2 கப்

பால் : கப்

குங்குமப்பூ : தேக்கரண்டி

 

செய்முறை : 

 

முதலில் பாதாம் பருப்புகளை சிறிது வெந்நீர் ஊற்றி 2-3 மணி நேரங்கள் ஊற வைத்துஅதனுடைய தோலை உரித்துக் கொள்ளவும்.

 

பின்னர் 1/4 கப் பாலில் குங்குமப்பூ சேர்த்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

 

பின்னர் மீதமுள்ள 3/4 கப் பாலை சிறுது சிறிதாக சேர்த்து பாதாம் பருப்புகளை மிக்ஸியில் நன்றாக/ மையாக  அரைத்துக் கொள்ளவும்.

 

ஒரு அடிகனமான வாணலியில்அரைத்த பாதாம் விழுது சர்க்கரை இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கிளறவும்.

 

நடுநடுவில், 1/2 கப் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து அடி பிடிக்காமல் கிளற வேண்டும்.

 

இறுதியாககுங்குமப்பூ சேர்த்த பால் சேர்த்து அல்வா பதத்திற்கு கிளறினால் சுவையான பாதாம் அல்வா தயார்.

 

குறிப்புகள்: 

 

பாதாம் பருப்புகளை அரைக்கும் பொழுது மொத்தமாக பால் சேர்த்து விடக்கூடாது.சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.

 

விருப்பப்பட்டால், 1 - 2 மேஜைக்கரண்டி கண்டென்ஸ்ட்மில்க் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் சுவை சிறிது மாறுபடும்.

 

நெய் இந்த அளவிற்காவது சேர்க்க வேண்டும். இல்லையேல் அல்வா பதம்  சரியாக வராது. ஒரு வேளை அல்வா சிறிது பிசுபிசுப்பாக இருந்தால்இறுதியில் இன்னும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்தால் பதம் சரியாக வந்து விடும்.

 

இந்த அல்வாவை மிதமான தீயில் மெதுவாக கிளறி சரியான பதத்தில் இறக்கி விட வேண்டும்

 

பேரிச்சம்பழம் அண்ட் நட்ஸ் லட்டு ( Dates and nuts laddu / dry fruits laddu )

 பேரிச்சம்பழம் அண்ட் நட்ஸ் லட்டு:



தேவையான பொருள்கள் : 

 

பேரிச்சம்பழம் (விதை நீக்கியது) : கப்

முந்திரி பருப்புபாதாம் பருப்புபிஸ்தா & வால்நட் : கப் (எல்லாம் சேர்த்து) 

கிஸ்மிஸ் / உலர்ந்த திராட்சை : தேக்கரண்டி 

டெஸிகேட்டட் தேங்காய் : 1 - 2 மேஜைக்கரண்டி 

நெய் : தேக்கரண்டி ( விருப்பப்பட்டால்) 

 

செய்முறை :

 

ஒரு வாணலியில், 1/2 தேக்கரண்டி நெய் சேர்த்துகிஸ்மிஸ் மற்றும் எல்லா பருப்புகளையும் சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

 

மீண்டும் அதே வாணலியில்மீதமிருக்கும் 1/2 தேக்கரண்டி நெய் மற்றும் பேரிச்சம்பழம் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

 

சிறிது ஆறியபின்னர்ஒரு மிக்ஸி ஜாரில் கிஸ்மிஸ்டெஸ்ஸிகேட்டட் தேங்காய் மற்றும் பருப்புகளைச் சேர்த்து ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.

 

பின்னர் இதனுடன்பேரிச்சம் பழம் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும். 

 

பின்னர்இந்த கலவையினை எடுத்து கைகளால் லட்டுகளாக உருட்டிய பின்னர்விருப்பப்பட்டால் டெஸ்ஸிகேட்டட் தேங்காயை மேலே தூவி அலங்கரித்தால்சுவையான பேரிச்சம்பழம் மற்றும் நட்ஸ் லட்டு தயார்.

 

குறிப்புகள் :

 

விருப்பமான பருப்புகள் மட்டுமின்றி விருப்பமான விதைகளையும் ( வெள்ளரி விதைபூசணிக்காய் விதை ) உலர் பழங்களையும் (apricot, fig ) போன்றவைகள் சேர்த்தும் இதே முறையில் தயாரிக்கலாம். 

 

கசகசா கூட ஒரு தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளலாம். (இங்கே அது தடை செய்யப்பட்ட ஒரு பொருள் ஆகையால் நான் சேர்க்கவில்லை) 

 

ஒரு கப் பேரீச்சம்பழத்திற்கு ஒரு கப் பருப்புகள் மற்றும் விதைகள் சேர்த்து தயாரிக்கும் பொழுதுதனியாக எந்த சுவையூட்டிகளையும் சேர்க்க தேவையில்லை. பேரீச்சம்பழத்தில் இருக்கும் இனிப்பு சுவையே போதுமானது. 

 

நெய் சேர்க்காமலும் பருப்புகள் மற்றும் பேரீச்சம்பழத்தினை உலர் வறுவலாக (dry roast) வறுத்தும் இதே முறையில் லட்டுகள் தயாரிக்கலாம். 

 

பருப்புகள் மற்றும் பழத்தை வறுக்காமல் பருப்புகளை தனியாக மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்துபின்னர் பழத்தை மிக்ஸியில் தனியாக அரைத்து எடுத்துக் கொண்டு,  பின்னர் ஒரு வாணலியில் நெய் சேர்த்து முதலில் பருப்புகள்கிஸ்மிஸ்தேங்காய் சேர்த்து கொஞ்சம் வறுத்த பின்னர் அரைத்த பேரிச்சம்பழம் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கினால்நன்றாக திரண்டு வரும். பின்னர் அதனை லட்டுகளாக பிடித்துக் கொள்ளலாம். இந்த முறையிலும் இந்த லட்டுகளை தயாரிக்கலாம். 

 

வறுத்த பருப்புகளை (already roasted nuts and  seeds) உபயோகிப்பதாக இருந்தால்இது ஒரு சமைக்கவே தேவையில்லாத ஒரு நோ குக் ரெசிபி. ஒரு மிக்ஸி ஜாரில் நட்ஸுகளை சேர்த்து ஒன்றிரண்டாக பொடித்த பின்னர்பேரீச்சம்பழத்தை மிக்ஸியில் சேர்த்து மீண்டும் ஒரு சுற்று சுற்றி எடுத்துலட்டுகளாக பிடித்தும் தயாரிக்கலாம்.

 

டெஸிகேட்டட் தேங்காய்க்கு பதிலாக வறுத்த வெள்ளை எள்ளை இந்த லட்டுகளின் மேலே தூவி அலங்கரிக்கலாம்.

Monday, December 21, 2020

அவியல் (Aviyal )

 அவியல் 




தேவையான பொருள்கள்:


வாழைக்காய் : 1

கேரட் : 2

பீன்ஸ் : 5

கத்திரிக்காய் : 3

உருளைக்கிழங்கு : 1

முருங்கைக்காய் : 5 துண்டுகள்

மஞ்சள்தூள் : 1/4 தேக்கரண்டி 

புளித்த தயிர் : 2 மேஜைக்கரண்டி 

தேங்காய் எண்ணெய் : 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை : 10

உப்பு :  தேவையான அளவு


அரைப்பதற்கு:


தேங்காய் துருவல் : 3 மேஜைக்கரண்டி 

பச்சை மிளகாய் : 2

சீரகம் : 1 தேக்கரண்டி 


தாளிப்பதற்கு:


தேங்காய் எண்ணெய் : 2  மேஜைக்கரண்டி 

கடுகு : 1/2 தேக்கரண்டி 

உளுத்தம்பருப்பு : 1/2 தேக்கரண்டி 

கருவேப்பிலை இலைகள் : சிறிது 


செய்முறை:


கேரட்உருளைக்கிழங்குவாழைக்காய் போன்றவைகளை தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும்


பின்னர் எல்லா காய்கறிகளையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.


ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய கேரட்பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து 3/4 கப் தண்ணீர் ஊற்றிமூடி வைத்து வேக வைத்து கொள்ளவும்.


கேரட் சிறிது நிறம் மாறும் போது நறுக்கிய வாழைக்காய்கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து நன்குகலந்து வேகவிடவும்.


காய்கறிகள் வேகும் போது அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களைஒரு மிக்ஸி ஜாரில்  சேர்த்து சிறிதுதண்ணீர் விட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.


காய்கறிகள் கிள்ளு பதத்திற்கு வெந்ததும் மஞ்சள்தூள்தேவையான அளவு உப்புஅரைத்த தேங்காய் விழுதுசேர்த்து நன்கு கலந்து மிதமான தீயில் கொதிக்க வைத்து கொள்ளவும்.


பின் தயிர் சேர்த்து நன்கு கலந்து சீரகத்தின் பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைக்கும் போது தேங்காய்எண்ணெய் விட்டு நன்கு கலந்து கறிவேப்பிலை சேர்த்து இறக்கி ஒரு மூடியினால் மூடி வைத்துக் கொள்ளவும்


வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகுஉளுத்தம்பருப்பு மற்றும் கருவேப்பிலைதாளித்து கலந்தால் சுவையான அவியல் தயார்


குறிப்புகள் :


இதில் தயிருக்கு பதிலாக ஒரு சிறிய துண்டு ஊறவைத்த புளியை தேங்காயோடு சேர்த்து அரைக்கலாம்அதனைஅவியல் குழம்பு என்று சொல்லுவார்கள்


அவியலுக்கு தாளிப்பு தேவையில்லைஅடுப்பை அணைத்தவுடன்சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றிகருவேப்பிலை இலைகளை கிள்ளி அவியலில் கலந்து மூடி வைத்து விட்டாலே போதுமானதுதேங்காய்எண்ணெய்யின் வாசனையோடு அவியல் மிகவும் ருசியாக இருக்கும்.  


சேனைக்கிழங்குசேப்பங்கிழங்கு போன்ற எல்லா கிழங்கு வகைகளையும்,

மாங்காய்புடலங்காய்வெள்ளரிக்காய்கொத்தவரங்காய் போன்ற காய்கறிகளையும் சேர்க்கலாம்.


சாம்பார்ரசம்புளிக்குழம்புஉளுந்தம் பருப்பு சாதம் மற்றும்அடையோடு சேர்த்து இந்த அவியலை பரிமாறலாம்.

அவல் பாயசம் (Aval payasam/ poha kheer )

 


அவல் பாயசம் :


தேவையான பொருள்கள் :


அவல் (கெட்டி அவல் : 3/4 கப் 

பால் : 1 லிட்டர் 

சர்க்கரை : 1/2 கப் 

நெய் : 3  மேஜைக்கரண்டி 

குங்குமப்பூ : சிறிது (விருப்பப்பட்டால்)

ஏலக்காய் பொடி : 1/4 தேக்கரண்டி 

முந்திரிப்பருப்பு : 5 


செய்முறை :


முதலில்ஒரு பாத்திரத்தில் அவலை போட்டுஅதனை நன்றாக நீரில் கழுவி எடுத்துக் கொள்ளவும்


பின்னர் கழுவிய அவலைஉடனேயே ஒரு துண்டுதுணியின் மீது போட்டு அவலில் இருக்கும் ஈரப்பதத்தை நீக்கிஎடுத்து வைத்துக்கொள்ளவும்.


ஒரு வாணலியில்சிறிது நெய் சேர்த்துமுந்திரிப்பருப்புகளை நன்றாக போன் நிறமாக வறுத்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.


பின்னர் அதே வாணலியில் மீண்டும் சிறிது நெய் சேர்த்து அதில் கழுவி உலர்த்தி வைத்திருக்கும் அவலைசேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும்.


பின்னர் இதனோடு பாலைச் சேர்த்துஇந்த பாலிலேயே அவலை ஒரு 10 - 15 நிமிடங்கள் வரை நன்றாக வேகவைத்து கொள்ளவும்.


பின்னர் சர்க்கரையை அவல் மற்றும் பாலோடு கலந்துஅது நன்றாக கரைந்த பின்னர் அதனோடு குங்குமப்பூகலந்த பாலை சேர்த்து இறக்கிஏலக்காய் பொடி மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்புகளை சேர்த்துஅலங்கரித்தால்சுவையான அவல் பால் பாயசம் தயார்


குறிப்புகள்: 



வெள்ளை/சிகப்பு கெட்டி அவலில் மட்டுமே இதனை தயாரிக்கவும்


சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்தும் இதே முறையில் தயாரிக்கலாம்வெள்ளம் சேர்க்கும் மின்னார்வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி பின்னர் பால் அவல் கலவையோடு சேர்க்கவும்.


இந்த பாயசத்தை இளம் சூடாகவோ / குளிர் சாதனப்பெட்டியில் வைத்து குளிர்ச்சியாகவோ பரிமாறலாம்.


முந்திரிப்பருப்புகளுக்கு பதிலாக எந்த பருப்புகளையும் மற்றும் கிஸ்மிஸ் /தேங்காய் துண்டங்களையோ கூடநெய்யில் வறுத்து பாயசத்தில் சேர்க்கலாம்