Showing posts with label evening snacks recipe. Show all posts
Showing posts with label evening snacks recipe. Show all posts

Thursday, December 23, 2021

தேன்குழல் முறுக்கு (Thenkuzhal muruku)

 தேன்குழல் முறுக்கு :





அரிசி மாவு : 1.5 கப் 

பொட்டுக்கடலை மாவு :1/4 கப் 

சீரகம் : 1-2 தேக்கரண்டி 

உப்பு : தேவைக்கேற்ப 

தண்ணீர் : தேவையான அளவு 

எண்ணெய் : பொரிப்பதற்கு தேவையான அளவு 


செய்முறை : 


முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக்கடலையைச் சேர்த்து நன்றாக பொடித்துக் கொள்ளவும் பொடித்தமாவினை ஒரு சல்லடையில் போட்டு சலித்து எடுத்துக் கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில்அரிசி மாவுபொடித்து வைத்துள்ள பொட்டுக்கடலை மாவுசீரகம்உப்பு மற்றும் சிறிதுசிறிதாக தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.


பின்னர் இந்த மாவினை தேன்குழல் அச்சினில் இட்டுநன்றாக சூடாக இருக்கும் எண்ணெயில் பிழிந்துஎடுத்தால் சுவையான தேன்குழல் முறுக்கு தயார்.


குறிப்புகள் :


பொதுவாக தேன்குழல் செய்வதற்கு அரிசி மாவோடு உளுந்த மாவு மற்றும் வெண்ணெய் சேர்த்து செய்வோம்ஆனால் இது சுலபமான முறையில் வெண்ணெய் சேர்க்காமல் செய்யும் முறையாகும்


மேலும் இந்த முறையில் செய்யும் தேன்குழல்கள் பார்ப்பதற்கு நல்ல வெண்ணிறமாகவும் சுவையும் நன்றாகஇருக்கும்.


மேலும் கடைகளில் கிடைக்கும் அரிசி மாவிலேயே இந்த முறையில் தேன்குழல்கள் தயாரிக்கலாம்.


சீரகத்திற்கு பதிலாக வெள்ளை எள்ளை சேர்த்தும் தயாரிக்கலாம்.


ஒரு வேளை முறுக்கு பிழியும் போது துண்டு துண்டாக உடைந்தால் , மாவினில் சிறிது தண்ணீர் தெளித்துபிசைந்த பின்னர் பிழிந்தால் நன்றாக வரும்.

கோதுமை மாவு தேங்காய் ரெயின்போ குக்கீஸ் ( coconut rainbow cookies using wheat flour)

 கோதுமை மாவு தேங்காய் ரெயின்போ குக்கீஸ் : 






தேவையான பொருள்கள் :


கோதுமை மாவு : 1கப்

டெசிக்கேட்டட் தேங்காய் : 1 கப் 

ஆர்கானிக் வெல்லம் பொடித்தது :  1 கப்  

ஏலக்காய் பொடி : 1 தேக்கரண்டி 

பேக்கிங் பொடி : 1/2 தேக்கரண்டி 

வெண்ணெய் : 70 கிராம் 

மோர் : 2-4 மேஜைக்கரண்டி ( தேவைப்பட்டால்


செய்முறை : 


முதலில் கோதுமை மாவுடன் பேக்கிங் பொடி சேர்த்து நன்றாக சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.


பின்மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் வெல்லம் சேர்த்து வெல்லம் நன்றாக கரையும் வரை கலந்துகொள்ளவும்.


பின்னர் இதனோடு சலித்து வைத்துள்ள மாவுதேங்காய்ஏலக்காய் பொடி சேர்த்து மெதுவாக கலக்கவும்


இப்பொழுது தேவைக்கேற்ப 2 முதல் 4 மேஜைக்கரண்டி மோர் சேர்த்து கலந்து விருப்பமான வடிவத்தில்குக்கியாக செய்துஅதன் மீது சிறிய M & M சாக்கலேட்டுகளை வைத்து அலங்கரித்த பின்னர்,  ஒரு பேக்கிங்ட்ரேயில் வைத்து சூடேற்றப்பட்டுள்ள ஓவெனில் 160 டிகிரி வெப்பநிலையில் 15 - 20 நிமிடங்கள் வரை பேக்செய்து எடுத்தால்சுவையான தேங்காய் குக்கீக்கள் தயார்.


குறிப்புகள் :


வெல்லத்திற்கு பதிலாக எந்த சுவையூட்டிகளையும் சேர்த்து இதே முறையில் தயாரிக்கலாம்


ஏலக்காய் பொடிக்கு பதிலாக எந்த வாசனை தரும் பொருளையும் சேர்க்கலாம்.


சாக்கலேட்டிற்கு பதிலாக நட்ஸ் சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம்


தேங்காயின் வாசனையோடு இந்த குக்கீக்கள் மிகவும் சுவையாக இருக்கும்

பணியார உளுந்து வடை (Paniyara Uluntha vadai)

 பணியார உளுந்து வடை : 





தேவையான பொருள்கள் : 


உளுத்தம் பருப்பு : 1 கப் 

அரிசி மாவு : 2 மேஜைக்கரண்டி 

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் : 10

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் : 2 

பொடியாக நறுக்கிய / துருவிய இஞ்சி : 1 இன்ச் 

பொடியாக நறுக்கிய கருவேப்பிலை : சிறிதளவு 

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தளைகள் : சிறிதளவு 

பெருங்காயம் : ஒரு பின்ச் 

உப்பு : தேவைக்கேற்ப 

எண்ணெய் : 2மேஜைக்கரண்டி 


செய்முறை : 


உளுத்தம்பருப்பினை 2 மணி நேரங்கள் ஊற வைத்து மிக்ஸி அல்லது கிரைண்டரில் கொஞ்சமாக தண்ணீர்சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.


பின்னர்அரைத்து வைத்துள்ள மாவில்அரிசி மாவுவெங்காயம்பச்சை மிளகாய்இஞ்சிகருவேப்பிலைகொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்


பின்னர் இந்த மாவினை எண்ணெய் தடவிய பணியார கல்லில் விட்டுபணியாரங்கள் செய்வதை போன்றே சுட்டுஎடுத்தால் எண்ணெய் அதிகம் சேர்க்காத சுவையான பணியார உளுந்து வடை தயார்.


குறிப்புகள் : 


இந்த மாவு பணியார மாவினை விட சிறிது கெட்டியாக இருப்பதால்வடைகள் வேகுவதற்கு சிறிது நேரம்எடுக்கும்.


அரிசி மாவு சேர்க்காமலும் இதே வடை பணியாரங்களை தயாரிக்கலாம்.


சின்ன வெங்காயத்திற்கு பதிலாக பெரிய வெங்காயம் சேர்த்தோ அல்லது வெங்காயம் சேர்க்காமலோ கூடசெய்யலாம்.


விருப்பப்பட்டவர்கள் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை வதக்கி மாவில் சேர்த்தும் செய்யலாம்.

சாக்லேட் கப் கேக்(Choclate Cup cake )

 சாக்லேட் கப் கேக் 




தேவையான பொருள்கள் :


கோதுமை மாவு  : 4 மேஜைக்கரண்டி 

கொக்கோ பொடி : 1 மேஜைக்கரண்டி 

பிரவுன் சர்க்கரை  : 4 மேஜைக்கரண்டி 

பேக்கிங் சோடா  :  1/4 தேக்கரண்டி 

ஆலிவ் எண்ணெய்  : 1 மேஜைக்கரண்டி 

பால்  : 5 மேஜைக்கரண்டி 

வெண்ணிலா எசென்ஸ்  : 1/4 தேக்கரண்டி 


செய்முறை : 


ஒரு பாத்திரத்தில் முதலில் கோதுமை மாவுபேக்கிங் சோடா , கொக்கோ பொடி எல்லாம் சேர்த்து சலித்துஎடுத்து கொள்ளவும்

அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும் 

பின்னர் இதனுடன் எண்ணெய்பால் மற்றும் வெண்ணிலா எசென்ஸ் எல்லாம் சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல்கலந்து கொள்ளவும் 

பின்னர் கப் கேக் மோல்ட்டுகளில் இந்த மாவுக் கலவையை ஊற்றி 180 டிகிரி வெப்பநிலையில் 20 - 25 நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் சுலபமான சுவையான கப் கேக்குகள் தயார் 


குறிப்புகள் : 


பிரவுன் சர்க்கரைக்கு பதிலாக சாதாரண சர்க்கரை சேர்த்தும் செய்யலாம் 

சாதாரண சர்க்கரை என்றால் 3 மேஜைக்கரண்டி சர்க்கரையே போதுமானது 


கோதுமை மாவிற்கு பதிலாகமைதா / மைதா + கோதுமை மாவிலும் இதே முறையில் கப் கேக்குகள்தயாரிக்கலாம் 


விருப்பப்பட்டால் சிறிது சாக்லேட் சிப்ஸ் சேர்த்தும் செய்யலாம்