Showing posts with label Tirunelveli special recipe. Show all posts
Showing posts with label Tirunelveli special recipe. Show all posts

Thursday, December 23, 2021

புளி இல்லா கறி/ குழம்பு (Puli Illa curry)

 புளி இல்லா கறி/ குழம்பு : 





தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு : 1/4 கப்

முருங்கைக்கீரை : 1 கப்

முருங்கைக்காய் : 1 (2 இன்ச் துண்டுகளை நறுக்கியது )

கத்திரிக்காய்  : 1 (விருப்பப்பட்டால் ) 

மஞ்சள்தூள் :  1/4 தேக்கரண்டி

உப்பு :  தேவையான அளவு


அரைப்பதற்கு தேவையான பொருள்கள் : 


தேங்காய் துருவல் : 2 மேஜைக்கரண்டி 

சீரகம் : 1 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் : 4 

மிளகு :  2 தேக்கரண்டி

கறிவேப்பிலை : 10 இலைகள்

சின்ன வெங்காயம் : 3

பூண்டு பற்கள் : 2


தாளிப்பதற்கு : 


கடுகு : 1/2 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு :  1/2 தேக்கரண்டி

சீரகம் :  1/2 தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் : 1 மேஜைக்கரண்டி 

நெய்/ தேங்காய் எண்ணெய் : 1 தேக்கரண்டி 


செய்முறை : 


துவரம்பருப்பை நன்கு கழுவி விட்டு, சிறிது நேரம் ஊறவைத்து குக்கரில் 4 விசில் வரும் வரை வேகவைத்துஎடுக்கவும்.


வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் அதில் மிளகு, சீரகம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலைசேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.


அவை அறிய பின் ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் சேர்த்து சின்ன வெங்காயம், பூண்டு பற்கள், தேங்காய் துருவல்சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.


ஒரு வாணலியில், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து தாளித்த பின்னர், நறுக்கியகத்திரிக்காய், முருங்கைக்காய் மற்றும்  முருங்கைக்கீரை சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.


காய்கள் மற்றும் கீரை பாதி வெந்ததும், வேக வைத்துள்ள பருப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.


பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துகொதிக்க விட்டு இறக்கினால் சுவையான புளி இல்லா குழம்பு தயார் 


குறிப்பு


பெயரிற்கு ஏற்றாற்போல் , இந்த குழம்பில் புளி / தக்காளி போன்ற எந்த புளிப்பும் சேர்ப்பதில்லை இதுதிருநெல்வேலியின் ஒரு சிறப்பான குழம்பு (ஸ்பெஷல் குழம்பு) 


துவரம் பருப்பிற்கு பதிலாக பாசிப்பருப்பு சேர்த்தும் இதே முறையில் இந்த குழம்பினை தயாரிக்கலாம். 


கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் மட்டும் தான் இந்த குழம்பில் சேர்த்து செய்வோம் காய்கள் இல்லாமலும்வெறும் கீரை மட்டும் சேர்த்தும் தயாரிக்கலாம் 


மிளகு சேர்க்காமல் வெறும் காய்ந்த மிளகாய் மட்டுமே சேர்த்தும் தயாரிக்கலாம் 


முருங்கைக்கீரை கண்டிப்பாக சேர்க்க வேண்டும் ஆனால்அதிக அளவு சேர்க்க வேண்டாம். 


இந்த குழம்பை அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது.

Monday, December 21, 2020

அவியல் (Aviyal )

 அவியல் 




தேவையான பொருள்கள்:


வாழைக்காய் : 1

கேரட் : 2

பீன்ஸ் : 5

கத்திரிக்காய் : 3

உருளைக்கிழங்கு : 1

முருங்கைக்காய் : 5 துண்டுகள்

மஞ்சள்தூள் : 1/4 தேக்கரண்டி 

புளித்த தயிர் : 2 மேஜைக்கரண்டி 

தேங்காய் எண்ணெய் : 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை : 10

உப்பு :  தேவையான அளவு


அரைப்பதற்கு:


தேங்காய் துருவல் : 3 மேஜைக்கரண்டி 

பச்சை மிளகாய் : 2

சீரகம் : 1 தேக்கரண்டி 


தாளிப்பதற்கு:


தேங்காய் எண்ணெய் : 2  மேஜைக்கரண்டி 

கடுகு : 1/2 தேக்கரண்டி 

உளுத்தம்பருப்பு : 1/2 தேக்கரண்டி 

கருவேப்பிலை இலைகள் : சிறிது 


செய்முறை:


கேரட், உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்றவைகளை தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும். 


பின்னர் எல்லா காய்கறிகளையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.


ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து 3/4 கப் தண்ணீர் ஊற்றிமூடி வைத்து வேக வைத்து கொள்ளவும்.


கேரட் சிறிது நிறம் மாறும் போது நறுக்கிய வாழைக்காய், கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து நன்குகலந்து வேகவிடவும்.


காய்கறிகள் வேகும் போது அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களை, ஒரு மிக்ஸி ஜாரில்  சேர்த்து சிறிதுதண்ணீர் விட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.


காய்கறிகள் கிள்ளு பதத்திற்கு வெந்ததும் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு, அரைத்த தேங்காய் விழுதுசேர்த்து நன்கு கலந்து மிதமான தீயில் கொதிக்க வைத்து கொள்ளவும்.


பின் தயிர் சேர்த்து நன்கு கலந்து சீரகத்தின் பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைக்கும் போது தேங்காய்எண்ணெய் விட்டு நன்கு கலந்து கறிவேப்பிலை சேர்த்து இறக்கி ஒரு மூடியினால் மூடி வைத்துக் கொள்ளவும். 


வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கருவேப்பிலைதாளித்து கலந்தால் சுவையான அவியல் தயார். 


குறிப்புகள் :


இதில் தயிருக்கு பதிலாக ஒரு சிறிய துண்டு ஊறவைத்த புளியை தேங்காயோடு சேர்த்து அரைக்கலாம். அதனைஅவியல் குழம்பு என்று சொல்லுவார்கள். 


அவியலுக்கு தாளிப்பு தேவையில்லை. அடுப்பை அணைத்தவுடன், சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி, கருவேப்பிலை இலைகளை கிள்ளி அவியலில் கலந்து மூடி வைத்து விட்டாலே போதுமானது. தேங்காய்எண்ணெய்யின் வாசனையோடு அவியல் மிகவும் ருசியாக இருக்கும்.  


சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு போன்ற எல்லா கிழங்கு வகைகளையும்,

மாங்காய், புடலங்காய், வெள்ளரிக்காய், கொத்தவரங்காய் போன்ற காய்கறிகளையும் சேர்க்கலாம்.


சாம்பார், ரசம், புளிக்குழம்பு, உளுந்தம் பருப்பு சாதம் மற்றும்அடையோடு சேர்த்து இந்த அவியலை பரிமாறலாம்.

Sunday, December 20, 2020

தேங்காய்ப் பால் சொதி: (Tirunelveli special Sodhi / coconut milk stew)

 தேங்காய்ப் பால் சொதி: 




தேவையான பொருள்கள்: 

துருவிய தேங்காய் : 1
பாசிப்பருப்பு : கால் கப்
நறுக்கிய உருளைக்கிழங்கு : 1 
நறுக்கிய கேரட் : 1 
நறுக்கிய பீன்ஸ் : 10 
நறுக்கிய முருங்கைக்காய் : 1 
எலுமிச்சை சாறு : 1 பழத்தில் இருந்து எடுத்த சாறு (3 மேஜைக்கரண்டி ) 


அரைப்பதற்கு : 


நறுக்கிய இஞ்சி : 20 கிராம் 
பச்சை மிளகாய் : 4 - 5
பூண்டு : 5 - 8 பற்கள் 
சீரகம் : 1 தேக்கரண்டி 


தாளிப்பதற்கு :


தேங்காய் எண்ணெய் : ஒரு தேக்கரண்டி 
கடுகு : கால் தேக்கரண்டி 
உளுத்தம் பருப்பு : 1 தேக்கரண்டி 
சீரகம் : 1 தேக்கரண்டி 
கருவேப்பிலை : ஒரு கொத்து 
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் : 1
கீறிய பச்சை மிளகாய் : 2
உப்பு : தேவையான அளவு 


தேங்காய் பால் எடுக்கும் முறை: 


ஒரு தேங்காயை துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும். 

ஒரு மிக்ஸி ஜாரில் அதை தண்ணீர் விடாமல் அரைத்து முதல் பால் எடுத்து அதை தனியாக வைத்துக்கொள்ளவும். 


பின்னர் முதலில் அரைத்த அதே தேங்காய்ப் பூவுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து இரண்டாம் முறை தேங்காய்பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். 


இதே முறையில் மூன்றாம் முறையும் தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.


செய்முறை:


பாசிப்பருப்பை ஒரு அரை மணி நேரம் ஊற வைத்து பின்னர் குக்கரில் ஒரு மூணு விசில் விட்டு வேக வைத்துக்கொள்ளவும்.


எல்லா காய்களையும் ( உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் மற்றும் முருங்கைக்காய்) குக்கரில் மூன்றாம் பால்சேர்த்து ரெண்டு விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். 


இஞ்சியை மிக்ஸியில் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அதில் இருந்து இஞ்சிச் சாறு எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும். 


பின்னர் பச்சை மிளகாய், பூண்டுப்பற்கள் மற்றும் சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். 

 

ஒரு கடாயில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்து அது பொரிந்தவுடன் உளுத்தம் பருப்பு , சீரகம்மற்றும் கருவேப்பிலை சேர்த்து சேர்த்து தாளித்துக் கொள்ளவும். 


பின்னர் அதனுடன் வெங்காயம்,  பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். 


இதனுடன் வேக வைத்த காய்கறிகள், பருப்பு, பச்சை மிளகாய், பூண்டு மற்றும் சீரகம் அரைத்த விழுது மற்றும்இரண்டாம் பால் சேர்த்து ஒன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளவும்.


பின்னர் இதனுடன் இஞ்சிச் சாறு சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும்.


இறுதியாக இதனுடன் முதல் தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விட வேண்டும்.


சிறிது ஆறியவுடன் அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால் சுவையான சொதி தயார்.



குறிப்புகள் : 


இந்த குழம்பிற்கு புளி, மசாலா, பொடி போன்ற எதுவும் சேர்ப்பதில்லை. குழம்பிற்கு தேவையான காரம் பச்சைமிளகாய் மற்றும் இஞ்சி மட்டுமே. ஆகையால் இவை இரண்டும் சற்று அதிகமாக சேர்க்க வேண்டும். அதே போல்குழம்பிற்குத் தேவையான புளிப்பிற்கு எலுமிச்சைச் சாறு மட்டும் தான்.


முதல் பால் சேர்த்தவுடன் அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது. ஏனென்றால் பால் / குழம்பு திரிந்து விடவாய்ப்புகள் அதிகம். 


இறுதியாக எலுமிச்சை சாறை குழம்பு சற்று ஆறிய பின்னர் தான் சேர்க்க வேண்டும். சூடாக இருக்கும் போதேசேர்த்தால் சிறிது கசப்புத் தன்மை வந்துவிடும்.