Showing posts with label Kulambu Recipe. Show all posts
Showing posts with label Kulambu Recipe. Show all posts

Thursday, December 23, 2021

இரு புளிக்குழம்பு (Iru pulikulambu)

 இரு புளிக்குழம்பு : 



நறுக்கிய முருங்கைக்காய் : 1 

புளி : 1 நெல்லிக்காய் அளவு 

மோர் : 1 கப் 

மஞ்சள் பொடி : 1/4 தேக்கரண்டி 

உப்பு : தேவையான அளவு 


அரைப்பதற்கு : 


தேங்காய் எண்ணெய் : 1 தேக்கரண்டி 

உளுந்தம் பருப்பு : 2 தேக்கரண்டி 

வெந்தயம் : 1/4 தேக்கரண்டி 

காய்ந்த மிளகாய் : 5 - 6

துருவிய தேங்காய் : 1/2 கப் 


தாளிப்பதற்கு  

தேங்காய் எண்ணெய் : 1 தேக்கரண்டி 

கடுகு : 1 தேக்கரண்டி 

உளுத்தம் பருப்பு : 1 தேக்கரண்டி 

காய்ந்த மிளகாய் : 1

கருவேப்பிலை : சிறிதளவு 




செய்முறை : 


முதலில் புளியை ஊற வைத்து புளிக்கரைசலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.


ஒரு வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றிதேங்காய் தவிர்த்து மற்ற அரைப்பதற்கு கொடுத்துள்ளபொருள்களை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் தேங்காய் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.


ஒரு அடி கனமான வாணலியில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து தாளித்த பின்னர்நறுக்கியமுருங்கையை சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்


காய் வெந்தவுடன் அதனுடன்  புளிக்கரைசலை சேர்த்து புளியின் பச்சை வாசனை போகும் வரைக்கும் கொதிக்கவைக்க வேண்டும்.


பின்னர் இதனோடு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து கலந்த பின்னர்கடைந்து வைத்துள்ளமோரை கலந்து பொங்கி வரும் வரை கொதிக்க வைத்து எடுத்தால் சுவையான இரு புளிக்குழம்பு தயார்.


குறிப்புகள் : 


இந்த குழம்பில் இரண்டு விதமான புளிப்புகள் சேர்ப்பதால் இதற்கு இரு புளிக்குழம்பு என்று பெயர்இதுவும் ஒருதிருநெல்வேலி ஸ்பெஷல் குழம்பு


இது பார்ப்பதற்கு மோர்க்குழம்பு போன்று இருந்தாலும் இதனுடைய ருசி தனியாக இருக்கும்.


வறுத்து அரைப்பதற்கு , உளுத்தம் பருப்பிற்கு பதிலாக இரண்டு தேக்கரண்டி துவரம் பருப்பை / கடலைபருப்பை வறுத்து அரைத்துச் செய்யலாம்.


இந்த குழம்பில்முருங்கை காய்க்கு பதிலாக வெள்ளை பூசணிக்காய்சின்ன வெங்காயம்கத்திரிக்காய்ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு காய் சேர்த்து இதே முறையில் தயாரிக்கலாம்.


மோர் சேர்த்த பின்னர்மிகவும் கொதிக்க விட கூடாது அவ்வாறு செய்தால் மோர் திரிந்து விடும்.

புளி இல்லா கறி/ குழம்பு (Puli Illa curry)

 புளி இல்லா கறிகுழம்பு : 





தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு : 1/4 கப்

முருங்கைக்கீரை : 1 கப்

முருங்கைக்காய் : 1 (2 இன்ச் துண்டுகளை நறுக்கியது )

கத்திரிக்காய்  : 1 (விருப்பப்பட்டால் ) 

மஞ்சள்தூள் :  1/4 தேக்கரண்டி

உப்பு :  தேவையான அளவு


அரைப்பதற்கு தேவையான பொருள்கள் : 


தேங்காய் துருவல் : 2 மேஜைக்கரண்டி 

சீரகம் : 1 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் : 4 

மிளகு :  2 தேக்கரண்டி

கறிவேப்பிலை : 10 இலைகள்

சின்ன வெங்காயம் : 3

பூண்டு பற்கள் : 2


தாளிப்பதற்கு : 


கடுகு : 1/2 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு :  1/2 தேக்கரண்டி

சீரகம் :  1/2 தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் : 1 மேஜைக்கரண்டி 

நெய்தேங்காய் எண்ணெய் : 1 தேக்கரண்டி 


செய்முறை : 


துவரம்பருப்பை நன்கு கழுவி விட்டுசிறிது நேரம் ஊறவைத்து குக்கரில் 4 விசில் வரும் வரை வேகவைத்துஎடுக்கவும்.


வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் அதில் மிளகுசீரகம்மிளகாய் வற்றல்கறிவேப்பிலைசேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.


அவை அறிய பின் ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் சேர்த்து சின்ன வெங்காயம்பூண்டு பற்கள்தேங்காய் துருவல்சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.


ஒரு வாணலியில்தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து தாளித்த பின்னர்நறுக்கியகத்திரிக்காய்முருங்கைக்காய் மற்றும்  முருங்கைக்கீரை சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.


காய்கள் மற்றும் கீரை பாதி வெந்ததும்வேக வைத்துள்ள பருப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.


பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துகொதிக்க விட்டு இறக்கினால் சுவையான புளி இல்லா குழம்பு தயார் 


குறிப்பு


பெயரிற்கு ஏற்றாற்போல் , இந்த குழம்பில் புளி / தக்காளி போன்ற எந்த புளிப்பும் சேர்ப்பதில்லை இதுதிருநெல்வேலியின் ஒரு சிறப்பான குழம்பு (ஸ்பெஷல் குழம்பு


துவரம் பருப்பிற்கு பதிலாக பாசிப்பருப்பு சேர்த்தும் இதே முறையில் இந்த குழம்பினை தயாரிக்கலாம்


கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் மட்டும் தான் இந்த குழம்பில் சேர்த்து செய்வோம் காய்கள் இல்லாமலும்வெறும் கீரை மட்டும் சேர்த்தும் தயாரிக்கலாம் 


மிளகு சேர்க்காமல் வெறும் காய்ந்த மிளகாய் மட்டுமே சேர்த்தும் தயாரிக்கலாம் 


முருங்கைக்கீரை கண்டிப்பாக சேர்க்க வேண்டும் ஆனால்அதிக அளவு சேர்க்க வேண்டாம்


இந்த குழம்பை அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது.

Sunday, December 20, 2020

அரைப் புளிக்குழம்பு / அரைச்சு விட்ட புளிக்குழம்பு /கடலைக்குழம்பு (Kadalai kulambu / araichu vitta pulikulambu)

 அரைப் புளிக்குழம்பு / அரைச்சு விட்ட புளிக்குழம்பு /கடலைக்குழம்பு 



தேவையான பொருள்கள் : 


வெண்டைக்காய் : 2 -4

புளி : சிறிய எலுமிச்சம் பழம் அளவு

ஊறவைத்து வேக வைத்த கொண்டைக்கடலை : 1 கப்  

உப்பு : தேவையான அளவு 


அரைப்பதற்கு :


நல்லெண்ணெய் :  மேஜைக்கரண்டி

கொத்தமல்லி விதை : 1 மேஜைக்கரண்டி

கடலைப்பருப்பு : 1 தேக்கரண்டி 

துவரம் பருப்பு :  1 தேக்கரண்டி 

உளுத்தம்பருப்பு : 1 தேக்கரண்டி 

வெந்தயம் : 1/4 தேக்கரண்டி 

காய்ந்த மிளகாய் : 3 - 4

தேங்காய் : 4 மேஜைக்கரண்டி


தாளிப்பதற்கு :


நல்லெண்ணெய் : 2 மேஜைக்கரண்டி

கடுகு : 1 தேக்கரண்டி 

உளுத்தம் பருப்பு : 1 தேக்கரண்டி 

பெருங்காயம் : ஒரு சிட்டிகை 

காய்ந்த மிளகாய் : 2

கருவேப்பிலை : ஒரு கைப்பிடி 


செய்முறை :


முதலில்கொண்டைக்கடலையை 4 - 6 மணி நேரங்கள் நன்றாக ஊற வைத்துபின்னர் குக்கரில் 4 விசில் விட்டுவேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.


புளியைக் கரைத்து புளிக்கரைசலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.


ஒரு அடி கனமான வாணலியில்நல்லெணெய் சேர்த்துதேங்காய் தவிர மீதி இருக்கும் பொருள்களைஒவ்வொன்றாக வறுத்து எடுத்த பின் இறுதியாக தேங்காயை சேர்த்து வறுத்து எடுத்து அரைத்துக் கொள்ளவும்.


மற்றொரு வாணலியில்நல்லெண்ணெய் சேர்த்து தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களை சேர்த்துதாளித்தப்பின்னர்நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து வதக்கிய பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து காயைநன்றாக வேக 

வைத்துக்கொள்ளவும்.


காய் வெந்தவுடன்புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து புளியின் பச்சை வாசனை போகும் வரைக்கும் கொதிக்கவிட வேண்டும்


புளிக்கரைசல் கொதித்த பின்னர்அதனோடு வேக வைத்த கொண்டைக்கடலை மற்றும் அரைத்து வைத்துள்ளதேங்காய் விழுது சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கினால்சுவையான அரைப்புளிக்குழம்பு தயார் 


குறிப்புகள் :


அரைப்புளிக்குழம்பு என்பது அரைச்சு விட்ட புளிகுழம்பின் சுருக்கமே தவிர புளியின் அளவு பாதி கிடையாதுஇதுவும் திருநெல்வேலி ஸ்பெஷல் புளிக்குழம்பு.


கொண்டக்கடலைக்குe பதிலாக நிலக்கடலைதட்டப்பயிறு / காராமணி போன்ற பயிறுகளை சேர்த்தும்செய்யலாம்பயிர் சேர்க்காமலும் செய்யலாம்.


வெண்டைக்காய்க்கு பதிலாகமுருங்கைக்காய்பரங்கிக்காய்/கத்திரிக்காய் போன்ற காய்கள் சேர்த்தும்செய்யலாம்.


விருப்பப்பட்டால்ஒரு சிறிய துண்டு வெல்லம் புளிக்கரைசலோடு சேர்த்து கொதிக்க விடலாம்