Saturday, November 6, 2021

போர்போன் பிஸ்கட் (Bourbon Biscuit)

 



போர்போன் பிஸ்கட் 


பிஸ்கட் செய்வதற்கு தேவையான பொருள்கள் : 


கோதுமை மாவு : 120 கிராம்கள் 

வெண்ணெய் : 100 கிராம்கள் 

கோகோ பொடி : 25 கிராம்கள் 

பொடித்த கரும்புச் சர்க்கரை :  30 - 40 கிராம்கள் 

வெண்ணிலா எசென்ஸ் : 1/4 தேக்கரண்டி 


பட்டர் கிரீம் செய்வதற்கு தேவையான பொருள்கள் : 


வெண்ணெய் : 25 கிராம்கள் 

பொடித்த சர்க்கரை : 50 கிராம்கள் 

வெண்ணிலா எசென்ஸ் : 1/4தேக்கரண்டி (விருப்பப்பட்டால் ) 

கோகோ பொடி : 15 கிராம்கள் (விருப்பப்பட்டால் ) 


பிஸ்கட் செய்முறை :


ஓவனை 180 டிக்ரீஸ்க்கு முதலில் சூடாக்கி கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்றாக கிரீமியாக வரும் வரை அடித்துக்கொள்ளவும்.


பின்னர் இதனுடன் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து மீண்டும் அடித்துக் கொள்ளவும்.


கோதுமை மாவு மற்றும் கோகோ பொடி சேர்த்து நன்றாக சலித்துக் கொள்ளவும்.


பின்னர் இந்த மாவு மற்றும் கோகோ பொடிக் கலவையை வெண்ணெய் மற்றும் சர்க்கரையோடு சேர்த்து பால்சேர்த்து சப்பாத்தி மாவினை விட சிறிது தளர்த்தியாக பிசைந்து கொள்ளவும்.


பின்னர் இந்த மாவினை குளிர் சாதனப் பெட்டியில் ஒரு 20 நிமிடங்கள் வரை வைத்து எடுத்த பின்னர், மாவினைஇரண்டாக பிரித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு இரண்டு பார்ச்மெண்ட் தாள் /  பட்டர் பேப்பர் நடுவினில் வைத்துதேய்த்து டுத்த பின்னர்,  மாவினை செவ்வக வடிவத்தில் வெட்டி எடுத்து சூடேற்றப்பட்ட ஓவெனில் 180 டிகிரி  செல்சியஸ் வெப்பநிலையில் 10 - 15 பேக் செய்து எடுத்தால் சுவையான கோதுமை மாவினால் செய்தபோர்பொன் பிஸ்கட் தயார்


பட்டர் கிரீம் செய்யும் முறை :


ஒரு பாத்திரத்தில்வெண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து ஒரு விஸ்க் வைத்து நன்றாக கலந்துகொள்ளவும்


பின்னர் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்தால் பட்டர் கிரீம் தயார்.


விருப்பப்பட்டால் கோகோ பொடியையும் இதனோடு நன்றாக கலந்து கொள்ளவும்.


பிஸ்கட்கள் செய்வதற்கு : 


மேலே தயாரித்துள்ள கிரீமை சாண்ட்விச் தயாரிப்பது போன்று இரண்டு பிஸ்கட்டுகளுக்கு இடையில் வைத்தால்சுவையான பெர்போன் பிஸ்கட்கள் தயார்


குறிப்புகள் : 


கரும்புச் சர்க்கரைக்கு பதிலாக எந்த விதமான சுவையூட்டிகளையும் சேர்த்து இதே முறையில் தயாரிக்கலாம்


இந்த அளவு சர்க்கரை சேர்த்து செய்யும் போது   இனிப்பு சிறிது ளவாக தான் இருக்கும் விருப்பப்பட்டால்சிறிது அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்


அறையின் வெப்பநிலையில் வெண்ணெய் இருப்பது மிகவும் முக்கியம்


பிஸ்கட்டுகள் நன்றாக ஆறிய பின்னர் தான் பட்டர் கிரீமை பிஸ்கட்டுகள் மீது தடவ வேண்டும்இல்லையென்றால்கிரீமில் இருக்கும் வெண்ணெய் உருகி விடும்.

பலாபெல் (Falafel -a middle eastern dish)




 பலாபெல் 


தேவையான பொருள்கள் : 


கொண்டக்கடலை : கப்

வெங்காயம் : 1

கொத்தமல்லித் தளைகள் : 1/4 கப் 

பூண்டு பற்கள் : 3-5 

கடலை மாவு : 1 1/2 மேஜைக்கரண்டி (தேவைப்பட்டால் ) 

உப்பு : தேவைக்கேற்ப 

சீரகம் : 2 தேக்கரண்டி 

காய்ந்த மிளகாய் : 2



செய்முறை : 


கடலையை இரவு முழுவதும் ஊற வைத்து எடுத்து கொள்ளவும்


ஒரு மிக்ஸி ஜாரில் மேலே சொல்லி இருக்கும் எல்லா பொருள்களையும் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாகஅரைத்து எடுத்துக் கொள்ளவும்


ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் சேர்த்துஎண்ணெய் சூடாகியதும் அதில் மேலேதயாரித்து வைத்துள்ள மாவினை சிறு வடைகளாக தட்டிப் பொறித்து எடுத்தால் சுவையான பலாபெல் தயார்.

பானகம் (Panagam)

 



பானகம் 


தேவையான பொருள்கள் : 


பொடித்த / துருவிய வெல்லம் : ½ கப்


சுக்கு பொடி : ¼ தேக்கரண்டி


எலுமிச்சம் பழம் : 1


ஏலக்காய் : 2


தண்ணீர் : 2 கப்


விருப்பப்பட்டால் : 


பச்சை கற்பூரம் : ஒரு பின்ச்


துளசி இலைகள் : சிறிது


நட்மெக் பொடி : ஒரு பின்ச்


செய்முறை :



முதலில் பொடித்த / துருவிய வெல்லத்தை தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்த பின்னர் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.


பின்னர் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.


ஏலக்காயை தட்டி வைத்துக் கொள்ளவும்.


பின்னர் ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு, தட்டிய ஏலக்காய், சுக்கு பொடி மற்றும் வெல்லக் கரைசல் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்தால் ஸ்வாமிக்குநெய்வேத்தியம் செய்வதற்கு சுவையான பானகம் தயார்.



குறிப்புகள் :


வெல்லத்திற்கு பதிலாக பொடித்த கல்கண்டு சேர்த்து கல்கண்டு பானகம் தயாரிக்கலாம்.


நான் ஆர்கானிக் வெல்லம் உபயோகித்ததால் நிறம் சற்று டார்க்காக இருக்கிறது.


எலுமிச்சை சாரிற்கு பதிலாக புளியை கரைத்து புளி கரைசலையோ அல்லது வெறும் தண்ணீர் சேர்த்தோ இதேமுறையில் பானகம் தயாரிக்கலாம்.


விருப்பப்பட்டால் பச்சைக் கற்பூரம், நட்மெக் பொடி மற்றும் துளசி இலைகளையும் சேர்த்து கொள்ளலாம்.

கஸ்டர்டு குக்கீஸ் (Custard Cookies)

 கஸ்டர்டு குக்கீஸ் :


கோதுமை மாவு :  150 கிராம்கள் 
கஸ்டர்டு பவுடர் : 75 கிராம்கள் 
பொடித்த சர்க்கரை : 100 கிராம்கள் 
வெண்ணெய் : 100 கிராம்கள் 
வெண்ணிலா எசென்ஸ் : 1 தேக்கரண்டி 
பால் : 1 - 2 தேக்கரண்டி ( தேவைப்பட்டால் ) 

செய்முறை : 

ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கிரீமியாக கலந்து கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் கஸ்டர்டு பௌடெரை கலந்து நன்றாக சலித்து எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் சலித்து வைத்துள்ள மாவு , வெண்ணிலா எசென்ஸ் மற்றும் தேவைப்பட்டால் பால் சேர்த்து வெண்ணெய் மற்றும் சர்க்கரையோடு கலந்து கொள்ளவும்.

பின்னர் இந்த மாவு கலவையை ஒரு பத்து நிமிடங்கள் குளிர் சாதன பெட்டியில் வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் இந்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு போர்க்/ முள்கரண்டி வைத்து சிறிது அழுத்தி விட்டு கொள்ளவும்.

இந்த குக்கீகளை ஓவெனில் 180 டிகிரியில் 12 - 15 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுத்தால் சுவையான கஸ்டர்டு குக்கீஸ் தயார்.

குறிப்புகள் :

கோதுமை மாவிற்கு பதிலாக மைதா சேர்த்தும் இதை தயாரிக்கலாம்.

சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்தும் இதனை தயாரிக்கலாம்.

வெண்ணிலா எஸ்சென்ஸ்க்கு பதிலாக ஏலக்காய் பொடி சேர்த்தும் / விருப்பமான எசென்ஸ் சேர்த்தும் செய்யலாம்.

இது முட்டை சேர்க்காமல் செய்வதால் வெண்ணெய் இந்த அளவு சேர்த்தால் தான் குக்கீ நன்றாக வரும்.

இது ஒரு டீ டைம் குக்கீஸ். அதாவது காபி/ டீயுடன் சேர்த்து சுவைக்கலாம்.