Showing posts with label biscuit recipe. Show all posts
Showing posts with label biscuit recipe. Show all posts

Saturday, November 6, 2021

போர்போன் பிஸ்கட் (Bourbon Biscuit)

 



போர்போன் பிஸ்கட் 


பிஸ்கட் செய்வதற்கு தேவையான பொருள்கள் : 


கோதுமை மாவு : 120 கிராம்கள் 

வெண்ணெய் : 100 கிராம்கள் 

கோகோ பொடி : 25 கிராம்கள் 

பொடித்த கரும்புச் சர்க்கரை :  30 - 40 கிராம்கள் 

வெண்ணிலா எசென்ஸ் : 1/4 தேக்கரண்டி 


பட்டர் கிரீம் செய்வதற்கு தேவையான பொருள்கள் : 


வெண்ணெய் : 25 கிராம்கள் 

பொடித்த சர்க்கரை : 50 கிராம்கள் 

வெண்ணிலா எசென்ஸ் : 1/4தேக்கரண்டி (விருப்பப்பட்டால் ) 

கோகோ பொடி : 15 கிராம்கள் (விருப்பப்பட்டால் ) 


பிஸ்கட் செய்முறை :


ஓவனை 180 டிக்ரீஸ்க்கு முதலில் சூடாக்கி கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்றாக கிரீமியாக வரும் வரை அடித்துக்கொள்ளவும்.


பின்னர் இதனுடன் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து மீண்டும் அடித்துக் கொள்ளவும்.


கோதுமை மாவு மற்றும் கோகோ பொடி சேர்த்து நன்றாக சலித்துக் கொள்ளவும்.


பின்னர் இந்த மாவு மற்றும் கோகோ பொடிக் கலவையை வெண்ணெய் மற்றும் சர்க்கரையோடு சேர்த்து பால்சேர்த்து சப்பாத்தி மாவினை விட சிறிது தளர்த்தியாக பிசைந்து கொள்ளவும்.


பின்னர் இந்த மாவினை குளிர் சாதனப் பெட்டியில் ஒரு 20 நிமிடங்கள் வரை வைத்து எடுத்த பின்னர், மாவினைஇரண்டாக பிரித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு இரண்டு பார்ச்மெண்ட் தாள் /  பட்டர் பேப்பர் நடுவினில் வைத்துதேய்த்து டுத்த பின்னர்,  மாவினை செவ்வக வடிவத்தில் வெட்டி எடுத்து சூடேற்றப்பட்ட ஓவெனில் 180 டிகிரி  செல்சியஸ் வெப்பநிலையில் 10 - 15 பேக் செய்து எடுத்தால் சுவையான கோதுமை மாவினால் செய்தபோர்பொன் பிஸ்கட் தயார்


பட்டர் கிரீம் செய்யும் முறை :


ஒரு பாத்திரத்தில்வெண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து ஒரு விஸ்க் வைத்து நன்றாக கலந்துகொள்ளவும்


பின்னர் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்தால் பட்டர் கிரீம் தயார்.


விருப்பப்பட்டால் கோகோ பொடியையும் இதனோடு நன்றாக கலந்து கொள்ளவும்.


பிஸ்கட்கள் செய்வதற்கு : 


மேலே தயாரித்துள்ள கிரீமை சாண்ட்விச் தயாரிப்பது போன்று இரண்டு பிஸ்கட்டுகளுக்கு இடையில் வைத்தால்சுவையான பெர்போன் பிஸ்கட்கள் தயார்


குறிப்புகள் : 


கரும்புச் சர்க்கரைக்கு பதிலாக எந்த விதமான சுவையூட்டிகளையும் சேர்த்து இதே முறையில் தயாரிக்கலாம்


இந்த அளவு சர்க்கரை சேர்த்து செய்யும் போது   இனிப்பு சிறிது ளவாக தான் இருக்கும் விருப்பப்பட்டால்சிறிது அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்


அறையின் வெப்பநிலையில் வெண்ணெய் இருப்பது மிகவும் முக்கியம்


பிஸ்கட்டுகள் நன்றாக ஆறிய பின்னர் தான் பட்டர் கிரீமை பிஸ்கட்டுகள் மீது தடவ வேண்டும்இல்லையென்றால்கிரீமில் இருக்கும் வெண்ணெய் உருகி விடும்.

Friday, December 25, 2020

கோதுமை மாவு பிஸ்கட்/ தெக்குஆ பிஸ்கட் / காஜூர் ( Khajur/ Thekua/ Wheat biscuit)

 கோதுமை மாவு பிஸ்கட்தெக்குஆ பிஸ்கட் / காஜூர்




தேவையான பொருள்கள் :


கோதுமை மாவு : 1 கப்

பொடித்த சர்க்கரை : 1/4 கப் 

டெஸிகேடட் தேங்காய் : 2 மேஜைக்கரண்டி 

ரவை : 2 மேஜைக்கரண்டி 

நெய் : 2 தேக்கரண்டி 

ஏலக்காய் பொடி : ஒரு சிட்டிகை  

தண்ணீர் : தேவையான அளவு 

எண்ணெய் : பொரிப்பதற்கு 


செய்முறை : 


ஒரு பாத்திரத்தில் மாவுபொடித்த சர்க்கரை,டெஸிகேடட் தேங்காய்ஏலக்காய் பொடிரவை மற்றும் நெய்சேர்த்து கைகளால் நன்றாக கலந்து கொள்ளவும்.


மாவினை கைகளால் கொழுக்கட்டை மாதிரி பிடித்தால்பிடிக்க வர வேண்டும்


பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்


பின்னர் இந்த மாவினை உருண்டைகளாக உருட்டிஒரு முள்கரண்டி வைத்து விருப்பமான டிசைன் செய்துஅந்த பிஸ்கட்டுகளை மிதமான சூட்டில்எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் சுவையான கோதுமை மாவுபிஸ்கட்டுகள்தெக்குஆகாஜுர் தயார்.


குறிப்புகள் :


கோதுமை மாவிற்கு பதிலாக மைதா மாவிலும் தயாரிக்கலாம்.


விருப்பப்பட்டால் , ஒரு தேக்கரண்டி பொடித்த சோம்பு மாவில் சேர்த்துக்கொள்ளலாம்


ஒரு கப் கோதுமை மாவிற்குகால் கப் பொடித்த சர்க்கரை சேர்க்கும் பொது இனிப்பு மிகவும் அளவாக இருக்கும்தங்களுக்கு இன்னும் சிறிது இனிப்பாக வேண்டுமென்றால், 1 கப் மாவிற்கு 1/3 கப் பொடித்த சர்க்கரைசேர்த்துக்கொள்ளலாம்


சர்க்கரைக்கு பதிலாக பொடித்த வெல்லம் சேர்த்தும் இதே பிஸ்கட்டுகளை தயாரிக்கலாம்.


எண்ணெய்யில் இருந்து பொரித்து வெளியில் எடுக்கும் பொழுது மிகவும் மிருதுவாக (அதிரசம் மாதிரி மிருதுவாகஇருக்கும்ஆனால்சூடு குறையும் பொழுதுபிஸ்கட்டுகள் மொறுமொறுவென்று ஆகிவிடும்


இந்த மாவினை சப்பாத்திகளாக தேய்த்து , ஒரு பிஸ்சா கட்டர் / குக்கீ கட்டர் / கத்தி வைத்து விருப்பமானவடிவத்தில் வெட்டி எடுத்து அதனையும் எண்ணெய்யில் பொரித்து இதே முறையில் பிஸ்கட்டுகள்தயாரிக்கலாம்


இது ஒரு பாரம்பரியமான பிஹாரி பிஸ்கட் ரெசிபி