Showing posts with label wheat flour recipe. Show all posts
Showing posts with label wheat flour recipe. Show all posts

Saturday, September 16, 2023

கோதுமை மாவு வாழைப் பழ கேக் ( Eggless Banana Cake with wheat flour)

 கோதுமை மாவு வாழைப் பழ கேக்:




தேவையான பொருள்கள் :

 

கோதுமை மாவு - ஒரு கப்

 

பூவன் பழம் - 2

 

சர்க்கரை - 1 /2 கப்

 

எண்ணெய் - 1/4 கப்

 

தயிர் - 1/8 கப்

 

பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி

 

பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி

 

வெண்ணிலா எசென்ஸ் /பவுடர்  - 1/2 தேக்கரண்டி

 

முந்திரிப் பருப்பு : சிறிது

 

உப்பு - ஒரு சிட்டிகை

 

செய்முறை :

 

ஓவனை 180 டிக்ரீஸ்க்கு முதலில் சூடாக்கி கொள்ளவும்.

 

ஒரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

 

பின்னர்அதனுடன் சர்க்கரைஎண்ணெய் வெண்ணிலா எசென்ஸ் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

 

இதனுடன் கோதுமை மாவுபேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

 

இந்த கலவையை எண்ணெய் தடவிய ஒரு பேக்கிங் பேனிற்கு மாற்றி அதன் மீது முந்திரிப் பருப்புகள் சேர்த்து அலங்கரித்துபின்னர் 180  டிஃகிரீசில் 30 - 35  நிமிடங்கள் பேக் செய்தால் சுவையான வாழைப்பழ கேக் தயார்.

 

குறிப்பு:

 

பேக்கிங் செய்வதற்கு முன்னர் ஓவனை முதலில் ஒரு பத்து நிமிடங்கள் வரை கண்டிப்பாக சூடாக்க வேண்டும்.இவ்வாறு செய்வதால் ஓவனின் வெப்பநிலை பேக்கிங் செய்வதற்கு தேவையான அளவிற்கு வந்துவிடும். அதாவதுதோசைக் கல்லை முதலில் சூடாக்கிய பின்னர் தானே தோசைகள் செய்வோம் அதே முறை தான்.

 

கோதுமை மாவிற்கு பதிலாக மைதா மாவிலும் இதே முறையில் கேக் செய்யலாம்.

 

இந்த கேக்கிற்கு பொடித்த சர்க்கரை தேவை இல்லை. நான் சாதாரணமாக உபயோகிக்கும் சர்க்கரை தான் சேர்த்து செய்தேன்.

 

எண்ணெய் -  தங்களுக்கு விருப்பமான ஆனால் வாசனை இல்லாத எண்ணெய்யாக பயன்படுத்தலாம்.

 

முந்திரிக்கு பதிலாக விருப்பமான  எந்த பருப்பையும் சேர்க்கலாம்.

 

கேக்  நன்றாக ஆறியதும் தான் துண்டுகள் போட வேண்டும்

Friday, December 25, 2020

கோதுமை மாவு பிஸ்கட்/ தெக்குஆ பிஸ்கட் / காஜூர் ( Khajur/ Thekua/ Wheat biscuit)

 கோதுமை மாவு பிஸ்கட்தெக்குஆ பிஸ்கட் / காஜூர்




தேவையான பொருள்கள் :


கோதுமை மாவு : 1 கப்

பொடித்த சர்க்கரை : 1/4 கப் 

டெஸிகேடட் தேங்காய் : 2 மேஜைக்கரண்டி 

ரவை : 2 மேஜைக்கரண்டி 

நெய் : 2 தேக்கரண்டி 

ஏலக்காய் பொடி : ஒரு சிட்டிகை  

தண்ணீர் : தேவையான அளவு 

எண்ணெய் : பொரிப்பதற்கு 


செய்முறை : 


ஒரு பாத்திரத்தில் மாவுபொடித்த சர்க்கரை,டெஸிகேடட் தேங்காய்ஏலக்காய் பொடிரவை மற்றும் நெய்சேர்த்து கைகளால் நன்றாக கலந்து கொள்ளவும்.


மாவினை கைகளால் கொழுக்கட்டை மாதிரி பிடித்தால்பிடிக்க வர வேண்டும்


பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்


பின்னர் இந்த மாவினை உருண்டைகளாக உருட்டிஒரு முள்கரண்டி வைத்து விருப்பமான டிசைன் செய்துஅந்த பிஸ்கட்டுகளை மிதமான சூட்டில்எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் சுவையான கோதுமை மாவுபிஸ்கட்டுகள்தெக்குஆகாஜுர் தயார்.


குறிப்புகள் :


கோதுமை மாவிற்கு பதிலாக மைதா மாவிலும் தயாரிக்கலாம்.


விருப்பப்பட்டால் , ஒரு தேக்கரண்டி பொடித்த சோம்பு மாவில் சேர்த்துக்கொள்ளலாம்


ஒரு கப் கோதுமை மாவிற்குகால் கப் பொடித்த சர்க்கரை சேர்க்கும் பொது இனிப்பு மிகவும் அளவாக இருக்கும்தங்களுக்கு இன்னும் சிறிது இனிப்பாக வேண்டுமென்றால், 1 கப் மாவிற்கு 1/3 கப் பொடித்த சர்க்கரைசேர்த்துக்கொள்ளலாம்


சர்க்கரைக்கு பதிலாக பொடித்த வெல்லம் சேர்த்தும் இதே பிஸ்கட்டுகளை தயாரிக்கலாம்.


எண்ணெய்யில் இருந்து பொரித்து வெளியில் எடுக்கும் பொழுது மிகவும் மிருதுவாக (அதிரசம் மாதிரி மிருதுவாகஇருக்கும்ஆனால்சூடு குறையும் பொழுதுபிஸ்கட்டுகள் மொறுமொறுவென்று ஆகிவிடும்


இந்த மாவினை சப்பாத்திகளாக தேய்த்து , ஒரு பிஸ்சா கட்டர் / குக்கீ கட்டர் / கத்தி வைத்து விருப்பமானவடிவத்தில் வெட்டி எடுத்து அதனையும் எண்ணெய்யில் பொரித்து இதே முறையில் பிஸ்கட்டுகள்தயாரிக்கலாம்


இது ஒரு பாரம்பரியமான பிஹாரி பிஸ்கட் ரெசிபி