Showing posts with label uluthamparuppu payasam. Show all posts
Showing posts with label uluthamparuppu payasam. Show all posts

Tuesday, December 22, 2020

உளுத்தம் பருப்பு கருப்பட்டிப் பாயசம் (Uluntham paruppu payasam / urad dhal kheer)

 உளுத்தம் பருப்பு கருப்பட்டிப் பாயசம்



தேவையான பொருள்கள்:


உளுத்தம்பருப்பு : கால் கப்

கருப்பட்டி : அரை கப்

பால் : ஒண்ணே கால் கப்

சுக்கு  பொடி : 1 சிட்டிகை


செய்முறை:


உளுத்தம் பருப்பை சுமார் இரண்டில் இருந்து மூன்று மணி நேரம் வரை நன்றாக ஊற வைக்கவும்

ஊற வைத்த பருப்பை குக்கெரில் போட்டு 4 விசில்க்கு வேக வைக்கவும்

சிறிது ஆறியவுடன்ஒரு ப்ளெண்டரில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்

கருப்பட்டியை சிறிது தண்ணீர் ஊற்றிக் கரைத்து வடிகட்டி அரைத்த உளுந்துடன் சேர்த்துக் கொள்ளவும்

இதனுடன் சுக்குப் பொடியை சேர்த்து பின்னர் காய்ச்சிய பாலையும் serthu சுவையான உளுத்தம் பருப்பு பாயசம்தயார்


குறிப்புகள்:


கருப்பட்டிக்கு பதிலாக சக்கரைவெல்லம் சீனி போன்ற எந்த சுவையூட்டியையும் சேர்க்கலாம்.


பாலுக்கு பதிலாக நட் மில்க்தேங்காய் பால் போன்றவைகளையும் உபயோகப்படுத்தலாம்.