Showing posts with label Mango thokku. Show all posts
Showing posts with label Mango thokku. Show all posts

Monday, December 21, 2020

மாங்காய் தொக்கு : (raw Mango thokku / mango pickle)



மாங்காய் தொக்கு :


தேவையான பொருள்கள்:


மாங்காய் : 2

மிளகாய் பொடி : 2- 3 தேக்கரண்டி 

மஞ்சள் பொடி : 1/4 தேக்கரண்டி 

வெந்தயம் : 1/4 தேக்கரண்டி 

பெருங்காயம் : 1/4 தேக்கரண்டி 

பொடித்த வெல்லம் : 1/2 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)

உப்பு : தேவையான அளவு 

நல்லெண்ணெய் : 4 மேஜைக்கரண்டி 

கடுகு : 1 தேக்கரண்டி 


செய்முறை:


முதலில் வெந்தயத்தை ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்துசிறிது ஆறிய பின்னர் அதனை பொடித்துஎடுத்து வைத்துக் கொள்ளவும்.


மாங்காய்களை தோல் நீக்கிய பின்னர்,அதனை துருவி எடுத்துக்கொள்ளவும்

(கேரட் துருவியை வைத்தோவெஜிடபிள் ஸ்லைசர் / கட்டர் வைத்தோ துருவிக்கொள்ளவும்)


ஒரு அடி கனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் பெருங்காயம் தாளித்த பின்னர்துருவியமங்கை சேர்த்து ஒரு 2 - 3 நிமிடங்கள் வரை வதக்கவும்


மாங்காய் சிறிது வதங்கிய பின்னர்அதனோடு மிளகாய் பொடிமஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்றாககலந்து வதக்கி கொள்ளவும்.


தேவைப்பட்டால்சிறிது நல்லெணெய் ஊற்றி ஒரு 4 நிமிடங்கள் வரை வதக்கிக் கொள்ளவும்


இறுதியாக பொடித்த வெந்தயத்தை சேர்த்து பின்னர் பொடித்த வெல்லம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கினால்எண்ணெய் பிரிந்து தொக்கும் திரண்டு வரும் பதத்தில் அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான மாங்காய்தொக்கு தயார்.


குறிப்புகள் :


வெந்தயத்தை வறுத்து பொடித்து சேர்ப்பதற்கு பதிலாகவெந்தயத்தை கடுகு தாளிக்கும் பொழுது அப்படியேசேர்த்தும் தொக்கு தயாரிக்கலாம்.


தொக்கு செய்வதற்கு கொஞ்சம் புளிப்பு அதிகமாக இருக்கும் மாங்காய்களை பார்த்து தேர்வு செய்தால்மிகவும்சுவையாக இருக்கும்உதாரணமாககிளிமூக்கு மாங்காய் உபயோகிக்கலாம்


எங்கள் வீட்டில் நல்லெணெய் தான் ஊற்றி தொக்கு செய்வோம்.மேலும் இந்தளவு எண்ணெய்யும் கட்டாயம்சேர்க்க வேண்டும்


தொக்கு செய்யும் பொழுது மிதமான தீயில் மட்டுமே வைத்து பொறுமையாக மாங்காயை வதக்கிக் கொள்ளவும்


தொக்கினுடைய மேற்பகுதியில் எப்பொழுதும் எண்ணெய் நிற்குமாறு பார்த்துக்கொள்ளவும்ஓரிரு நாளுக்கு ஒருமுறை தொக்கை நன்றாக ஒரு ஈரப்பத்தமில்லாத கரண்டியினால் கிளறி விட்டுக்கொள்ளவும்இவ்வாறுசெய்வதால்தொக்கின் மேற்பகுதியில் வரும் பூஞ்சைகளை (fungus ) தவிர்க்கலாம்


அதேபோன்றுதொக்கு நன்றாக ஆறிய பின்னர்ஒரு நல்ல சுத்தமான ஈரமில்லாத காற்றுப்புகாத முடிந்தவரைகண்ணாடிப் பாத்திரத்தில் ஸ்டோர் செய்துஅதே போல் ஈரமில்லாத கரண்டியும் உபயோகித்து கொள்ளவும்


இவ்வாறு செய்து பின்னர் இதனை குளிர்பதனப்பெட்டியிலும் வைத்தால்  - 2 மாதங்கள் வரைபயன்படுத்தலாம்